Monday, May 17, 2010

இனி....

நம்ம வாழ்க்கைல, பல தடவை, இனி என்ன பண்ண போறோம்னு, கேள்வி, நமக்குள்ள எழுந்துகிட்டே இருக்கும். இப்போ எனக்கும் அப்படியே. முதல் முறை அந்த கேள்வி வந்தது, டென்த் முடிச்ச உடனே.. இனி எந்த க்ரூப் செலக்ட் பண்ணி, எப்படி படிக்கறதுன்னு. அதுவும் ஒரு வழியா முடிஞ்சு, அடுத்து +2. இப்படி ஒவ்வொரு கட்டத்துலையுமே, எல்லாருக்கும் வர "இ.எ.ப.போ" கேள்வி வந்துகிட்டேதான் இருந்துச்சு.

இப்போ, என்னோட முதுகலை பட்டபடிப்பு என்கிற PG முடிஞ்சு போச்சு. இது நாள் வரை வந்த 'இனி' கேள்விகளோட, இப்போ வந்துருக்குற கேள்வி ரொம்பவே முக்கியமானதா படுது. மனசுக்கு பிடிச்ச வேலை கிடைச்சு, ஒழுங்கா வேலை செஞ்சு சம்பாதிக்கணும். விட்ருந்தா UG முடிஞ்சவுடனேயே வேலைக்கு போயிருப்பேன். ஆனா வீட்ல இருக்கறவங்களோட ஆசையை பூர்த்தி செய்யவே இந்த PG. சேரும் பொது பெரிய எதிர்பார்ப்பு இல்லைனாலும், என்னோட வாழ்க்கைல மிக முக்கியமான ரெண்டு வருடங்கள் வரப்போகுதுன்னு எனக்கு அப்போ தெரியலை.

நிஜமான காலேஜ் வாழ்கையை நான் இந்த ரெண்டு வருஷத்துல தான் அனுபவிச்சேன். என்னோட UGல கூட படித்தவர்கள் ரொம்ப கம்மி (மொத்தம் 10). காலேஜ் போனதே இப்போ எனக்கு சரியா நினைவில்லை (நடுவுல நடந்த ஆக்சிடென்ட் காரணமோ??). அங்கே கிடைச்ச சில நல்ல நண்பர்களோட சகவாசம் இன்னும் தொடருது. இருந்தாலும், இந்த சினிமா பாத்து கெட்டுப் போன நல்லுகத்தைச் சேர்ந்த ஆளுங்கற முறைல, காலேஜ் வாழ்க்கை மேல சில எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அது எதுவுமே நடக்கலை. இந்த பழம் நிஜமாவே புளிக்கும்னு நினைச்சு, ஒரு கட்டத்துல வெறுத்தே போயிட்டேன்.

இப்படிதான் PG படிப்பும் இருக்கும்னுதான் நினைச்சேன். ஆனா, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எக்கச்சக்க நண்பர்கள், நண்பிகள். சிறப்பா பல தருணங்கள்னு சரியான கொண்டாட்டம். முக்கியமா, முன்னெல்லாம் நான், போட்டோ எடுக்கும்போது, முடிஞ்ச வரை போஸே குடுக்க மாட்டேன், இல்லை ஏதாவது லைட் கம்மியான இடத்துல நிப்பேன். எப்படி நின்னு போஸ் குடுத்தாலும், நல்லா விழ மாட்டேன்னு ஒரு காம்ப்ளெக்ஸ். இன்னிவரைக்கும் அந்த காம்ப்ளெக்ஸ் இருந்தாலும், இந்த போட்டோ போஸ் காம்ப்ளெக்ஸ், இந்த ரெண்டு வருஷத்துல காணாம போச்சு. எச்ச்சகச்சமான கிளிக்ஸ். கிட்டத்தட்ட ஒரு 40gb அளவுக்கு எங்க புகைப்படங்கள் மட்டுமே இருக்கு.

அடுத்து, என் பாடும் விருப்பத்திற்கு தீனி போட்ட ரெண்டு வருடங்கள். எங்க காலேஜ் லைட் மியூசிக் ட்ரூப்ல, லீட் சிங்கரா தேர்ந்தெடுக்கப்பட்டு, (அவங்களுக்கும் வேற வழியில்லை, பாவம்) நிறைய மேடைகள்ல பாடி, இன்னும் புதுசா நிறைய விஷயங்களை கத்துகிட்டேன். எங்க ப்ராக்டிஸ் நாட்கள் எல்லாம் இன்னும் நினைவுல இருக்கு. நினைச்சு பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு. இப்படி, என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச பல விஷயங்கள், இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்துருக்கு.

ஆனா, என் நிலைன்னு சொல்லனும்னா, UG முடிக்கும்போது என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ, அதே மாதிரி மன நிலைலதான் இப்பவும் இருக்கேன். அடுத்து என்ன பண்ண போறேன்னு தெரியாம. ஆனா, இப்போ கொஞ்சம் பக்குவும் வந்துருக்கர்த நானே உணர்றேன். கொஞ்சம் பொறுப்பும் கூடியிருக்கரா மாதிரி தோணுது. முக்கியமா, இந்த ரெண்டு வருடங்கள்ள நடந்த சில விஷயங்களால, லாங் டைம் effect இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நல்லது நடந்தா சரி. அடுத்த 'இனி' கேள்வி வருமான்னு தெரியல, வந்தா, அப்போ மறுபடியும் இதே தலைப்புல ஒரு பதிவு நிச்சயம்... ரெடியா இருங்க...    


இப்படி ஏதாவது ஹெல்ப் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்...

பி.கு. இதைப் படித்துக் கொண்டிருக்கும் என் நண்பர், நண்பிகளுக்கு. இந்த ரெண்டு வருஷத்துல, உங்கள புண்படுத்தரா மாதிரி, மனசுக் கஷ்டப்படறா மாதிரி ஏதாவது சொல்லிருந்தேன்னா, பண்ணிருந்தேன்னா மன்னிச்சிருங்க. இந்த நாட்கள்ல, என் வாழ்க்கைல ஒரு அங்கமா இருந்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி... thanks for the wonderful experience.

5 comments:

ச.பிரேம்குமார் said...

அடுத்த கட்டத்துக்கு நகர்வது எப்போதும் ஒரு பெரும் சவால் தான் கார்த்திக். ஆயிரம் முறை யோசித்தாலும் அந்த அடியை எடுத்து வைக்கும் வரை யோசனை இருந்து கொண்டே தானிருக்கும்.

உனக்கு விருப்பமான பணி அமைவதற்கு வாழ்த்துகள்

கா.கி said...

@prem
mikka nandri :)

Venkata krishnan said...

thambi, yedukkum kavala padada.. chumma adichu dhool kelappu... unakku romba pudicha vishayathula orru moonu varusham menakkedu appram ellam thana nadakkum..

All the best...

கா.கி said...

@annan - nandri... kandippaaga muyarchi seigiren :)

Meera said...

Anna wish you all the best.
Have a great future ahead.