Tuesday, June 22, 2010

ராவணன் பற்றி, ரெண்டே பத்தி...

வழக்கம் போல, பதிவுலகத்திற்கு இந்த வாரம் நல்ல தீனி. அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கி படத்தை பார்த்தா, மகா சொதப்பல். கதை கருமம் எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். அதனால நேரா விஷயத்துக்கு வரேன். இந்த characterization characterization அப்படின்னு ஒண்ணு சொல்லுவாங்க. அதுல தான் பெரிய சிக்கலே. மக்களால, யாரு பக்கம் நியாயம் இருக்குன்னு முடிவுக்கே வர முடியல. விக்ரமுக்கு, ஐஸ பார்த்தவுடனே லவ்வு வந்துருதா?? ஏன்னா, முதல்லையே உசுரே போகுதே பாட்டு வரும். ஒரு எழவும் வெளங்கல. போலீஸ் எதனால விக்ரம அவ்வளவு தீவிரமா தேடறாங்கன்னு காரணமும் சரியா விளங்கல. (அந்த ரெண்டு லைன் வாய்ஸ் ஓவர் போதும், மக்களே புரிஞ்சிக்கணும்னு டைரக்டர் நினைச்சிருப்பாரோ). விக்ரம், மணிரத்னம் படத்துல நடிக்கரோம்னு பிரம்மிப்புலையே நடிச்சிருப்பாருன்னு நினைக்கறேன்.

படத்துல யார் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. ஆனா, மோசமான திரைக்கதை + குழப்பமான characterization படத்தை காலி பண்ணிடுச்சு. வழக்கம் போல, இந்த மணிரத்னம் படமும், டெக்னிகலா சூப்பர். இருந்தும், பல காட்சிகள்ல, ஐஸ்'வரியா'ராய கொஞ்சம் 'கமர்ஷியலா' காமிச்சிருக்க வேண்டாம். ஏதொ, அத நம்பியே படம் எடுத்தா மாதிரி இருக்கு. ஹிட்டான பாட்டேல்லாம் பாதி பாதி வெட்டி, காலி பண்ணிட்டாங்க. கோடு போட்டா + கெடா கெடா பாடல்கள் மட்டும் ஓகே. ரீ ரிக்கார்டிங்கும் அவ்வளவு சிறப்பா இல்லை. சில பல அறிவு ஜீவிகள், மணிரத்னம் சொல்லாத விஷயங்கள கூட புரிஞ்சுகிட்டு, படம் ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க. ஆனா, என்னை மாதிரி பாமர மக்களுக்கு, பெரிய let down. பத்துத் தலைல ஒண்ணு கூட நல்லா இல்லை. விக்ரம் சொல்றா மாதிரி, படம், டன் டன் டன் டண்டணக்கா டன் டன் டன்....    

ஐயையோ, இந்த சீன படத்துல எடுக்கவே இல்லையே...     

6 comments:

துளசி கோபால் said...

மணியின் படம் & அதுக்கான கடைசி வரி பஞ்ச் சூப்பர்:-)))))

கா.கி said...

@gopal
nandri :)

Anonymous said...

To my surprise,I liked the movie and planning to watch it again.. ....It is a Maniratnam's film, I may be blinded by it ;) Besides, it was the huge expectation that spoils these films rather than anything else... ..I think Eyandiran will also have the same fate.

I wish these movies are not subjected to harsh criticisms otherwise our starving film industry will be doomed forever with movies like Sura, Singam ...

கா.கி said...

@vani
im not surprised.. a.r.r, manirathanam, coke and pepsi are important brands. they wont be rejected jus lik that by the cream layer of the country. as a media person, i liked the film technically, but as a film it failed big time.

//I wish these movies are not subjected to harsh criticisms otherwise//
im under no compulsion and its nt tht gud films will only be made if we embrace these kind of films. there is no denying that there s lot of hardship behind this film, jus lik any other film. but still, its an incomplete film.

p.s. wy sudden dig at iyandhiran?? shankar never fails to entertain ppl. at the same time show his usual technical wizardry... even his famous flop 'boys' was entertaining to the core...

Anonymous said...

கல் நாயக் படத்திற்க்கு இரண்டாம் பாகமாக இல்லாமல்,முதல் பாகத்தை சொதப்பலாக மீண்டும் எடுத்த மணிரத்தினத்திற்க்குதான் எத்தனை ரசிகர்கள்.எப்போதுதான் சுயமாக சிந்திக்க போகின்றாரோ?விக்ரம் ஏன் இவ்வளவு செயற்க்கையாக நடிக்கிறார்?ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு படத்தை நினைவு படுத்துகின்றது.waste.

கா.கி said...

@jeeva
amaidhi amaidhi... nadappavai ellaaam nanmaikke