பிக்ஸாரின் ஒவ்வொரு படம் வரும்போதும் கேட்கற வழக்கமான கேள்விதான் இந்தப் படம் முடிஞ்ச அப்பறமும் கேட்கத் தோணுது.
"இத விட அருமையான படம் எப்படி கொடுக்க முடியும்???"
இன்னொரு முறை, அனிமேஷன் படங்கள் எடுக்கறதுல, அவங்களுக்கு நிகர் அவங்களேதான்னு நிரூபிச்சுருக்காங்க. கதைக்களம், கதையோட ஓட்டம்னு எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நம்மால யூகிக்க முடியாத மாதிரி இருக்கு. ஒரு வினாடி கூட வீணடிக்காம, மக்களோட மூளைக்கும், மனசுக்கும், ஒரே சமயத்துல வேலை கொடுத்து பிரமாதமா, ரொம்பத் தெளிவா திரைக்கதை அமைச்சிருக்காங்க. ரொம்ப நுணுக்கமான விஷயங்கள்லேர்ந்து, பிரம்மாண்டமான விஷயங்கள் வரைக்கும், செதுக்கிருக்காங்க. அந்த உழைப்பு, படத்தோட ஒவ்வொரு இடத்துலையும் தெரியுது. ஒரே ஒரு பிரச்னை என்னன்னா, இந்த படத்துக்கு 3d பெரிய வித்தியாசத்தை கொடுத்திடலை. ஏதொ சம்பிரதாயத்துக்கு 3dனு ரிலீஸ் பண்ணிருப்பாங்க போல. ஆனா இதை விடுங்க. இந்த மாதிரி படங்கள் வர்றதே ரொம்ப கஷ்டம். மொழி புரியலைனாலும் கண்டிப்பா பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்.
No comments:
Post a Comment