Friday, March 29, 2019

சூப்பர் டீலக்ஸ்

மு.கு. கிட்டத்தட்ட பதினைந்து மாதங்கள் கழித்து இங்கு எழுத வைத்த தியாகராஜன் குமாரராஜாவுக்கு நன்றி.. புதிதாக வருபவர்கள் இந்த வலைப்பூவின் பழைய பதிவுகளை ஆர்வமிருந்தால் படிக்கலாம். நாங்கல்லாம் அப்பவே அப்படி என சொல்ல விரும்பவில்லை என்றாலும் ஆரண்ய காண்டம் விமர்சனத்தைப் படிக்க --> க்ளிக் <-- i="">




நாம் பேச, விவாதம் செய்ய, சர்ச்சைகள் கிளப்ப நிறைய விஷயங்களை கொட்டியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம் படத்தின் நீட்சியாகக் கூட இதைச் சொல்லலாம். இரண்டு படங்களின் lookம் கிட்டத்தட்ட ஒன்று தான். MCU போல அதே யூனிவர்சில், அதே ஏரியாவில் அக்கம் பக்கம் நடக்கும் கதைகள் என்று கூட புரிந்து கொள்ளலாம். ஆ.கா படத்தை நினைவுகூரும் விஷயங்களும் இந்தக் கதையில் உள்ளது.

கதைகளும், கதாபாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று சேரும் விதம், ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதைக்கு தீர்வு தரும் விதம் இப்படி 'ஆகா' என்று சொல்ல படத்தில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. ஆரண்ய காண்டம் போலவே 70s, 80s, early 90s பாடல்களை பயன்படுத்திய விதம் செம்ம நாஸ்டல்ஜிக். பெரும்பாலான காட்சிகளில் பின்னணியில் ஏதோ ஒரு பாடலோ, வசனமோ ஓடிக்கொண்டே தனியாக வேறொரு கதையை சொல்கிறது. அதையும் தாண்டி யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.

திருநங்கைகள் நடத்தப்படும் விதம், பதட்டத்தில் ஃபகத் பேசும் அரசியல் சார்ந்த வசனங்கள், ரம்யா கிருஷ்ணன் பேசும் வசனங்கள் எல்லாம் மாஸ் + க்ளாஸ்.

விஜய் சேதுபதி கதையின் டச்சிங்கான முடிவு (சிறுவன் அஷ்வந்த் கலக்கல்), மிஷ்கின் கதையின் ஃபிலாசஃபி (மதம் பற்றிய வசனங்கள் சாட்டயடி பதிவு தோழி ரேஞ்ச்), 4 டீனேஜ் சிறுவர்களின் கதையில் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத ஒரு ட்விஸ்ட் இப்படி ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு ஹை, ஒவ்வொரு லோ இருக்கிறது. இரண்டாவது பாதியில் கதைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டியும் நீளும் விதம் ஓட்டத்தின் சுவாரசியத்தைச் சற்று குறைக்கவே செய்கிறது. ஆனால் படம் முடியும் விதம் இந்தக் குறைகளை மறக்கடிக்கச் செய்யும்.

கலாச்சாரக் காவலர்களை கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களும் படத்தில் உள்ளன. ஆரண்ய காண்டம் படத்தை ஜீரணிக்க முடியாதவர்கள் சூப்பர் டீலக்ஸ் பக்கமே போக வேண்டாம் ப்ளீஸ்.

மற்றபடி இன்னொரு கல்ட் கிளாசிக்கைக் கொடுத்து விட்டு ஓரமாக அமர்ந்து அனைத்து chaosஐயும் கவனித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. நாம் அடுத்த பத்து வருஷத்துக்கு இந்தப் படத்தைப் பற்றி நிறைய பதிவுகளையும், யூடியூப் வீடியோக்களையும் பார்க்கலாம் என நினைக்கிறேன். அவர் நிதானமாக அடுத்த கல்ட் கிளாசிக்கை ஏற்பாடு செய்து கொண்டு வரட்டும். காத்திருப்போம்.

DONT MISS IT !


Tuesday, December 19, 2017

சனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna


(சற்றே நீண்ட பதிவு தான். உங்கள் சனிப்பெயர்ச்சி நன்றாக இருந்தால் பொறுமையுடன் முழுதாக படித்து முடிப்பீர்கள் என நம்புகிறேன்)

கடவுள் நம்பிக்கை இருப்பவன் தான். பயபக்தியில் பின் பாதியை விட முன் பாதி அதிகம். ஆனால் சனிபெயர்ச்சி, ராசிபலனில் எல்லாம் ஒரு probability, calculation இருக்கிறது என்பதைத் தாண்டி எப்போதும் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. என் அம்மாவே நன்றாக ஜாதகம் பார்கக்கூடியவர். அவர் பல விஷயங்கள் சொன்னாலும் அதையெல்லாம் ஒரு filter போட்டுத்தான் கேட்டுக்கொள்வேன். அது அவருக்கும் தெரியும்.

ஜாதகத்தை நம்பி, முழுமனதாக அதையே பின்பற்றி முடிவுகள் எடுத்ததோ, பெயர்கள் மாற்றியதோ இல்லை
.
எந்தவொரு பெயர்ச்சி வந்தாலும் இணைய ஊடகங்களுக்கு நல்ல வேட்டை தான். இன்று சனிப்பெயர்ச்சி. சில நாட்களுக்கு முன்பே எங்கள் தளத்தில் இதற்கான ராசிபலன் வீடியோ, கட்டுரை என அனைத்து வடிவங்களிலும் வந்தாகிவிட்டது. ஆனால் எனது ராசிக்கு (ரிஷபம்) என்ன யோகம், என்ன பிரச்சினை, எத்தனை மார்க், எதிலெல்லாம் பாஸ் என்று படிக்கவில்லை. ஆர்வமும் இல்லை.

சனிப்பெயர்ச்சி வந்தால் சில நாட்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தெரியும் என்ற பலரிடம் நம்பிக்கையுள்ளது. சென்ற வாரம் எதுவும் தெரியவில்லையென்றாலும் நேற்று வேலையில் லைட்டாக தெரிய ஆரம்பித்தது. நேற்றிரவிலிருந்து இன்று மதியம் வரை தலைவலியும் விடவில்லை. அப்போதும் இதற்கெல்லாம் சனிப்பெயர்ச்சி காரணம் என்று நினைக்காமல் எனக்கு போதிய திட்டமிடல் இல்லையென்றே நினைத்தேன்.

இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு எப்போதும் பயணிக்கும் சிறிய தெருவில், பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். எதிர்பாராத திருப்பத்தை விட, எதிரிலிருக்கும் திருப்பத்தில் எதிர்பாராமல் வரும் வண்டிகளால் தான் பெரும்பாலும் நமக்கு பிரச்சினை. அதுவும் சிறிய தெருக்களில் 20-30ல் ஓட்டி வந்தாலே வேகமாக வருவது போலத்தான் இருக்கும். அந்த திருப்பதில் திடீரென வந்தவர் ஹாரன் வேறு அடிக்கமால் திரும்ப, சற்று பலமாகவே மோதிவிட்டேன்.

நான் மோதி கீழ விழுந்ததோ, என் பைக்குக்கு அடிபட்டதோ, ”ஏன் சார் இவ்ளோ ஸ்பீடாவா வருவீங்க” என்று எதிரில் வந்து மோதியவர் கூறியதோ பெரியதாக தெரியவில்லை. ஏனென்றால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர் மீது நான் விழ, அவர் தலைகுப்புற கீழே விழுந்தார். என் வண்டி 2 அடி பின்னால் இருக்க, நான் அந்த பெரியவருக்கு என்ன ஆனதென்று பார்ப்பதற்குள் தெருவில் இருந்த ஒரு சிலர் அவரை தூக்கி உட்கார வைத்திருந்தார்கள்.

எப்படியும் 70 வயதிருக்கும். ’அடடா எதாவது விபரீதம் ஆகாம இருக்கனுமே’ என்று தெரிந்த கடவுளை எல்லாம் வேண்டிக்கொண்டு அவரை அணுகினேன். கீழே விழுந்ததில் அவருக்கு காலில் சிறிய சிராய்ப்பு, இடது கை ஆட்காட்டி விரலில் தோல் கிழிந்து நன்றாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. (சார் வீடு எங்க, ஃபோன் நம்பர் சொல்லுங்க, காஃபி போட்டு தரட்டுமா, வேற எங்கயும் அடி படலயே)

பரபரப்பில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரியவர் ஒருவாறு சுதாரித்துவிட்டார். வீட்டில் கொண்டு விட்டு விடலாம் என கூட்டத்தில் ஒருவர் யோசனை சொல்ல, வேடிக்கை பார்க்க வண்டியை நிறுத்திய ஒருவர், ’’வாங்க நான் விட்டுர்ரேன் என்றார்’’.

பெரியவர் வீடு அதே தெருமுனையில் இருந்தது நான் செய்த அதிர்ஷ்டம். அவரை உட்கார வைத்து வீட்டு வாசலில் இறக்கினோம். (இதற்குள் திருப்பத்தில் என்னை மோதியவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஏன் ஹாரன் அடிக்காமல் வந்தீர்கள் என்ற தார்மீக கேள்வியை என்னால் கேட்க முடியாமல் போனது).

எதிர்பாராமல் நடந்த விஷயம் என்றாலும் ஏனோ அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சொல்லிவிட்டு வரலாம் என்று உடன் சென்றேன். அது டிபிக்கலான திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தன வீடு. அங்கு மாடியில், கிச்சன் ஹால் என்ற இரண்டே அறை வீட்டில் அவர் மனைவி இருந்தார். இவரைப் பார்த்ததும் பதற (சட்டையில் ரத்தம் சிந்தியிருந்தது) எதுவும் பிரச்சினையில்லை என்று நடந்ததை சொன்னேன். உடனே நீங்களே இவருக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணி கூட்டிட்டு வந்துடுங்க என்றார்.

கையில் காசில்லை, விழுந்த இடத்தில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்தேன். நம் தலையில் இப்படி கட்டுகிறாரே என்ற சலிப்பும் ஓரமாக இருந்தது. சரி, என்று அவரை காத்திருக்க சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டு வந்தேன். பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன்.

போகும் வழியில், பெரியவருக்கு 77 வயது, ஆடிட் அலுவல வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர், அவருக்கு குழந்தை கிடையாது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன். டாக்டர் க்ளீனிக்கில் காயத்துக்கு தேவையான முதலுதவி, ஊசி, மாத்திரை என்று தரப்பட்டது. (மொத்த செலவு 400 சொச்சம்).

நல்ல வேளையாக பெரியவருக்கு சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ, வேறு கோளாறுகளோ இல்லை. விழுந்த அதிர்ச்சியும், கை சிராய்ப்பும் மட்டுமே. டாக்டர் பெரியவரின் கை கால்களை நன்றாக ஆட்ட வைத்தும், BP செக் செய்தும் பார்க்க, பெரியவர் நார்மல் என்பது தெரிந்தது. சற்று நிம்மதியாயிருந்தது. பிறகு அவரை மீண்டும் வீட்டில் கொண்டு விட்டு, அவர் மனைவியிடம் கொடுத்திருந்த மருந்தை பற்றி கூறிவிட்டு வந்தேன். "சனிப்பெயர்ச்சி இப்படி பண்ணிடுச்சே” என்று அவர் கூறியது சினிமேட்டிக்காக இருந்தது.

என் வலது காலில் சிறிய உள்+வெளி காயம். என்னை விட, என் வண்டிக்கு நல்ல அடி. பின் சக்கர பிரேக், சைட் ஸ்டாண்ட் போல வளைந்து திரும்பியிருந்தது. வலது பக்கத்தில் க்ளட்சும் லைட்டாக வாங்கியிருந்தது. சரி இது பரவாயில்லை, சரி செய்து கொள்ளலாம். பெரியவருக்கு வேறெதுவும் பிரச்சினை ஆகாமல் இருந்ததே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டேன்.

வண்டி மோதி விழும்போது கூட ஒருவேளை இதெல்லாம் சனிப்பெயர்ச்சியின் பலன் தானோ என்று நான் நினைக்கவில்லை. அந்தப் பெரியவர் டாக்டரிடம் அவர் பெயரை முழுதாகச் சொல்லும்போது தான் நினைத்தேன்.

அவர் பெயர் C.S.Kannan

("உங்களயே கூட்டிட்டு போக சொன்னேன்னு தப்பா நினைக்காதீங்க. எனக்கு வயசாச்சு. இப்படித்தான் ஒரு வாட்டி நான் அடிபட்டு கீழ விழுந்து யாருமே வர்ல. கைல சிராய்ப்பு ஆகி கடைசில 10,000 கொடுத்து ஆபரேஷன் பண்ணோம்" என்று பெரியவரின் மனைவி பீதி கிளப்பியது தனிக்கதை).

Monday, February 29, 2016

ஒரு ராஜா பாடலைப் பற்றிய நீண்ண்ண்ண்ண்ட பதிவு

1000 படங்கள். படத்துக்கு 4 பாட்டுகள் என்றால் கூட (வெகு சில படங்களில் மட்டும் பாடல்கள் கிடையாது) 4000 பாட்டுக்கள். இதில் நம் பெற்றொருக்கு பிடித்தது, நண்பர்களுக்குப் பிடித்தது, டிவி - ரேடியோவில் போட்டுத் தேய்ப்பது என நாம் அறிந்திருக்கும் (அதாவது 90களின் ஆரம்பத்திலும் அதற்குப் பிறகும் பிறந்தவர்கள் கேட்டவரை) ராஜா பாடல்கள்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

நான் பாடல்களைத் தேடித் தேடிச் சென்று கேட்பவன். எந்த மொழி பேதமும் கிடையாது. பாடல் நன்றாக இருந்தால் போதும். அதிலும் ராஜா பாடல் என்றால் கூடுதல் சாஃப்ட் கார்னரோடு, அய்யோ பாடல் நமக்கு பிடிக்க வேண்டுமே என்ற நினைப்போடும் கேட்பேன். அப்படி நான் அவ்வபோது புதிதாக தெரிந்து கொள்ளும், டிஸ்கவரி என்று சொல்லுவார்களே, அப்படி டிஸ்கவர் செய்யும் ராஜா பாடல்களில் சில, பல நாட்கள்  - இரவுகள் என் தலைக்கு மேல் ஹெட்ஃபோனிலும், தலைக்குள் என்ஃபோனிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.



இதுவே ராஜாவின் பாடல் எனக்குள் நிகழ்த்தும் மேஜிக். மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அந்தப் பாடல் உங்களுக்குப் பிடிக்கும், அதில் மூழ்கி முத்தெடுப்பீர்கள், மூர்ச்சையாகி வெளியே வருவீர்கள் போன்ற சப்பைக்கட்டுகள் எதுவும் கிடையாது. முதல் முறை கேட்கும்போது பிடித்துவிடும். அங்கிருந்து சில நாட்கள் பித்து. அவ்வளவு தான் இந்தப் ப்ராசஸ்.

(அதே போல பல முறை கேட்டு பிடிக்காத பாடல்கள்களும் இருக்கினறன. அதற்காகவெல்லாம் ராஜாவை விட்டுக் கொடுத்து பேச முடியாது)
புதிதாக ஒரு பாடலைக் கேட்கும்போது, வழக்கம் போல, "எப்படிய்யா இந்த மனுஷன் அப்பவே இதெல்லாம் பண்ணிருக்காரு?"என வரும் கேள்வி, "இந்தப் பாட்டை எப்படி இவ்வளவு நாள் கேட்காம இருந்தேன்?" என வரும் வருத்தம், இப்படி இன்று (காலை) வரை இளையாராஜா என்ற இசைக்கலைஞன் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இன்று, இளையராஜா 1000 நிகழ்ச்சி எவ்வளவு மொக்கையாக இருந்தது என்ற பதிவுகளை ஒரு பக்கம் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஆபிஸ் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த போதே, மறுபக்கம் ராஜா எஃப்.எம்மில் (யாரோட யோசனையோ, நல்லா இருக்கட்டும்) எப்போதும் போல அடுத்தடுத்து பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.



முதலில் 'என் தேகம் அமுதம்' ('ஒரு ஓடை நதியாகிறது'' என கூகுளார் சொன்னார்) என்ற பாடல். ஜானகியின் குரலில் மற்றுமொரு பலான பாடல் என்பது கேட்கும்போதே புரிந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் பாடலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏனோ வரவில்லை.

அடுத்த சில பாடல்கள் கழித்து, 'மழை வருவது மயிலுக்கு தெரியும்' என்ற பாடல். ராஜாவின் ரொமாண்டிக் சாங் போல ஆரம்பித்தாலும், புதிதான ஒரு தாளத்துக்கு பாடல் மாறியது ('தம்தன தாளம் வரும்' பாடல் தாளத்தைப் போல). ராஜா பாட்டில் எதிர்பாராத இடத்தில் மிருதங்க ஓலி ஆரம்பிக்கும்போது அது தரும் கிக்கே தனி. ஜானகி குரலில் பாடல் ஆரம்பிக்க, கூடவே அந்த தாளமும். பாடலில் சுவாரசியம் கூடியது. 5 நிமிடங்கள் தானே , வேலையைச் சற்று தள்ளி வைப்போம் என சரணத்துக்கு தயாரானேன்.

ஸோலோ வயலின், ஸ்ட்ரிங்க்ஸ், வீணை என ராஜா வழக்கம் போல இண்டர்லுயூடில் விளையாடியிருந்தார். தொடர்ந்து ராஜா பாடல்களைக் கேட்டுப் பழகியவர்களால் கண்டிப்பாக அவரது ஒரு பாடலின் ஓட்டம் எப்படியிருக்கும் என்பதை யூகிக்க முடியும். குறைந்தது மனதுக்குள்ளாவது ஓட்டிப் பார்த்துவிட முடியும். இது அவரது மைனஸோ, குறையோ அல்ல. இது ரசிக்கும்படியான ஒரு ராஜா ஜானரின் க்ளீஷே. (உடனே எஸ்.ஏ.ராஜ்குமார் க்ளீஷே என விதண்டாவாதம் செய்பவர்களுக்கு கபீம்குபாம் காத்திருக்கிறது)

ஆனால் இந்தப் பாடலின் சரணம் ஆரம்பிக்கும்போது அது எப்படி போகும் என்பதை யூகிக்க முடியவில்லை. முதல் இரண்டு வரிகளுக்கு பிறகு ஸ்ட்ரிங்க்ஸ் அடுத்த வரிகளுக்கு லீட் கொடுக்க, அடுத்த 24 நொடிகள், விடாமல் நதி நீர் ஓடுவதைப் போல சீராக மேலே ஏறி இறங்கி வளைந்து நெளிந்து அழகாக மீண்டும் பல்லவியில் முடிந்தது.

ஆச்சரியத்திலும் வரும் வழக்கமான அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லிவிட்டு அந்த சரணத்தை ரீவைண்ட் (வழக்கொழிந்து போன வார்த்தையோ?) செய்து மீண்டும் கேட்டேன். எப்படியும் அடுத்த சரணமும் இதே மெட்டுதான். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய முதல் சரணத்தை இரண்டாம் முறையும் கேட்க வேண்டும் என்ற ஆசை. 'i just wanted to relive that moment' என்பதைப் போல.

அதே பிரவாகம், அதே ஆச்சரியம், அதே கெட்ட வார்த்தை, பல்லவி வந்தது. அடுத்த இண்டர்லுயூட் ஓடிக் கொண்டிருக்கும்போதே என்னப் படம், என்ன பாடல், யார் நடித்தது எனத் தேட, ஈஸ்ட்மென் கலரில் கே.ஆர். விஜயா ஓடி வருவது போல ப்ரிவியூ வந்தது. ''மம்மி பிராமிஸ்ஸாக இந்தப் பாடலை பார்க்கும் ஆசை வந்து விடக்கூடாது'' என நினைத்து அந்த பக்கத்தை மூடிவிட்டு மீண்டும் பாடலுக்கு வந்தேன். இரண்டாவது சரணம் ஆரம்பித்தது.
ரெண்டு பத்திக்கு முன்னால் சொன்னதில் 'டிட்டோ'.

முதலில் சொன்னதைப் போல, ''எப்படி இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டது?, பாடப்பட்டது, அதுவும் ஒரே டேக்கில் எப்படி அந்த சரணத்தை முடித்திருக்க முடியும்??, என்ன ராகமாக இருக்கும்???, இவ்வளவு நாள் நம் கண்ணில் (காதில்) எப்படிப் படாமல் போனது????, சே அம்மா அப்பா கூட சொல்லவே இல்லையே'' என கலந்து கட்டிய எண்ணங்கள், கேள்விகள்.

பாட்டின்  'ரிஷி மூலம்' தெரிந்தது. டவுன்லோட் செய்தேன். வேலையை முடித்து விட்டு முதல் வேலையாகப் பாடலை மீண்டும் கேட்டேன். சக ராஜா ரசிகன் நண்பனுக்கும் அனுப்பினேன். ''கண்டிப்பாக அவனும் கேட்டிருக்க மாட்டான். கேட்டிருக்கக் கூடாது. பாடலை அவனுக்கு அறிமுகம் செய்த பெருமை என்னயே சேர வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இந்தப் பாட்டை பிரபலப்படுத்தலாம். ஒரு வேளை நாம் தான் லேட்டோ? இந்தப் பாடல் ஏற்கனவே பிரபலமோ?'' என்றெல்லாம் தேவையில்லாத பல சிந்தனைகள்.

இன்றைய நாளின் வேலைகள் அனைத்தும் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், (வரும் வழியில் என் மொபைலிலும்) ஹெல்மெட்டை அப்படியே வைத்துவிட்டு அம்மா அப்பாவிடம் இந்தப் பாடலைப் பற்றிப் பேச, நான் நினைத்தது போல அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ''இப்பதான் நீ கேக்கறியா?" என்ற அம்மாவின் கலாய்ப்போடு என் அறைக்கு வந்து, நண்பனுடன் சிறிது நேரம் பாடலைப் பற்றி சாட்டில் சிலாகித்து விட்ட போதும் அடங்கவில்லை.



அந்த நேரம் பார்த்து ஒருவர், ராஜா காப்பியடித்த பாடல்கள் என்ற யுடியூப் லிங்கை பகிர்ந்திருந்தார். அது இன்னும் எரிச்சல் ஏற்ற இதோ இந்த நீண்ட நெடிய பதிவு.

இதற்கு மேல் என்ன சொல்ல? 'நண்டு' படத்தின் இந்திப் பாடல், 'ஆராதனையில்' வரும் ''இளம் பனி துளி'', ''ஒரு குங்கும செங்கமலம்'', 'எச்சில் இரவுகளின்' ''பூ மேலே வீசும் பூங்காத்தே'' இப்படி நான் காலம் கடந்து தெரிந்து, என்னை ஆச்சரியப்படுத்திய பல ராஜா பாடல்கள் வரிசையில் ''மழை வருவது மயிலுக்கு தெரியும்'' பாடலும் சேர்ந்தது.

வரிகளை கவனிக்கும் போது இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமாக இருந்தது. தன் மகனை காணப் போகும் ஒரு தாயின் எண்ணம் எப்படி இருக்கும், அவள் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருப்பாள், எப்படி பதைபதைத்திருப்பாள் என்பதெயெல்லாம் பாடலைப் பார்க்காமல் கேட்டதிலேயே புரிந்தது.

வழக்கமாக நாயகன் நாயகி டூயட், இல்லையேல் பேத்தாஸ் என போர் அடித்துக் கொண்டிருந்தவருக்கு புதிதாக கிடைத்த சிச்சுவேஷன், சோளப் பொறியாக இருந்தாலும், இருந்த பசிக்கு இதுவே போதும் என ஒரு கை பார்த்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் தாங்க் யூ ராஜா!!

அந்தப் பாடல்:



பி.கு - காப்பியடிப்பது எந்த வகையிலும் சரியான செயல் அல்ல. அதை நான் இங்கு நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாத் துறையில் ஒரு கிரியேட்டர் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்து, தெரிந்து, உணர்ந்து கொண்டிருக்கிறேன். டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது, இருக்கும் சப்ளையில் ஒன்றிரண்டில் குறைகள் இருக்கலாம். அதிலும் ஒரே மாதிரி சிச்சுவேஷனுக்கு ஒன்பதனாயிரம் பாடல்களைப் போடுவது என்பது சாத்தியம் அல்ல. க்ரியேட்டிவிட்டிக்கு நேரம் தேவை. அப்படி நேரமில்லாத நிலையிலும், நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டும், சில வெளிநாட்டுப் பாடல்கள் பிரதியெடுக்கப்பட்டிருக்கலாம் என்பதே என் யூகம். (கதை வேணும், ஆனா படம் 3 மாசத்துல ஆரம்பிக்கனும், உங்க அவசரத்துக்கு புதுசா கதை வராது, அப்போ இருக்கவே இருக்கு ஒலகப் பட டிவிடி).

ஆனால் சிம்பனி பாடல்கள் தனது இன்ஸ்பிரேஷன் என்பதை ராஜா எங்கும் மறுத்ததாக தெரியவில்லை. அதே போல, எஸ்.டி பர்மன் பாடல் ஒன்று எப்படி படிப்படியாக இஞ்சி இடுப்பழகி ஆனது என கமல்ஹாசன் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது பரவலாக பல பாடல்கள் தழுவப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ராஜாவிடம் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கிறது என்பதை ஒழுங்காக இசை தெரிந்த எவரும் ஒப்புக் கொள்வார்கள்.  என்பது திண்ணமோ திண்ணம். 

Thursday, November 12, 2015

சகிப்பின்மை - விமர்சனங்கள் - ரசனை



கமல்ஹாசனின் தூங்காவனம் படத்துக்கு கிடைத்து வரும் கலவையான விமர்சனங்கள் குறித்து அவரே கவலைப்படுவாரா என்பது சந்தேகம். ஆனால் உலக நாயகனின் ரசிகக் கண்மணிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. 

வழக்கம் போல, படம் பிடிக்காதவர்களை தேடிச் சென்று உனக்கு ரசனையில்லை, ஹாலிவுட் தர படத்தை குறை சொல்லக் கூடாது, எதிர்காலத்தில் இந்தப் படம் பாராட்டப்படும்  என்று சாஃப்டாக சொல்வதிலிருந்து, சாஃப்ட் போர்ன் ரேஞ்சுக்கு கெட்ட வார்த்தைகள் போட்டு திட்டுவது வரை இணையத்தில் போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதில் வேதாளம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைத்துள்ளது என்ற செய்தி கண்டிப்பாக அவர்களை இன்னும் நோகடித்திருக்கும்.

தமிழ் சினிமாவுக்கு வேதாளங்கள் தேவையா, தூங்காவனங்கள் தேவையா என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலில் தமிழ்நாட்டுக்கு சினிமாவே தேவையா என்பதிலிருந்தே விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

சினிமாவால் எந்த சமுதாயமும் இதுவரை திருந்தியதாகத் தெரியவில்லை. ஆனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் சினிமாவைப் பார்த்து தவறான முன்னுதாரணங்களால் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திரையரங்கில் சென்று படம் பார்க்கும் போது அந்தப் படம் என் கலை ரசனையை மேம்படுத்த வேண்டாம், உலகத் தரத்துக்கு என் பார்வையை உயர்த்த வேண்டாம். அதற்கு நான் புத்தகங்களையும், சினிமா அல்லாத மற்ற ஊடகங்களையும் நாடித் தெரிந்து, தெளிந்து கொள்கிறேன்.

இன்றைய நிலையில் கொடுத்த 120+35+30 ரூபாய்க்கு எனக்கு பொழுதுபோக்கு மட்டுமே போதும். படம் போரடிக்காமல் இருந்தால் நன்று, அது சற்று தரமான பொழுதுபோக்காக இருக்கும் பட்சத்தில் இன்னும் சிறப்பு. அவ்வளவே.

உலகத் தரப் படத்தை ரசிக்கத் தெரியவில்லை, புதிய முயற்சிகளை பாராட்டவில்லை என்று, குறைந்த பட்சம் ஓ!@#$ என்ற கெட்ட வார்த்தையோடு ஆரம்பித்து மற்றவர்களை திட்டும், மேம்பட்ட படைப்புகளை மட்டுமே ரசிப்பவர்கள், முதலில் மற்றவர்களது ரசனையை குறை கூறுவது அநாகரிகம், அசிங்கம் என்று உணர்வார்களாக.

மற்றவர்களது கருத்தை மதிக்கத் தெரியாதவர்கள், ஏற்றுக் கொள்ளத் தெரியாதவர்கள் எந்த கருத்தை சொல்லவும் தகுதியற்றவர்களே. இதுவும் ஒரு வகையில் சகிப்பின்மையே.

பி.கு. மன்னிக்கவும், திருப்பிக் கொடுக்க கையில் விருதுகள் இல்லை.

#சகிப்பின்மை
#சகிப்புத்தன்மை
#intolerance 

Sunday, March 29, 2015

மற்றும் பல - 29/03/2015

உத்தமவில்லன் படத்தின் நடனக் காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது.. கமலின் கொள்கைகளில் என்றைக்குமே ஒத்துப்போகாத ஆளாக இருந்தாலும் கமல் நடிப்பில் பெரிய குறை என எதையும் கண்டதில்லை. ஆனால் இந்த நடனக் காட்சி, சத்தியமாக அவுட் டேடட்... ஒரு கிரேஸ் இல்லாமல், நடனம் தெரியாத ஒரு ஆள் ஆடுவதைப் போல், கடைசியில், கடந்த 25 வருடங்களாக ஆடும் இரண்டு கால்களை தூக்கி குதிக்கும் அந்த ஒரு ஸ்டெப் வேறு... ஆண்டவா....
ஒரே ஆறுதல், முதிர்ந்த வயதில் இளம் ஹீரோவைப் போல காண்பித்துக் கொள்ள முயல்வதைப் போலவே, பூஜா குமார் என்ற முதிர் கன்னி ஒருவரையும் சமமாக கூடவே ஆடவைக்கிறார் கமல்..
அங்கு கலை சமநிலையை எட்டிவிட்டது 

-----------------------------------------------------------------------


நேற்று ஏதொ தந்தி தொலைக்காட்சியில் பேட்டி வந்ததாம்... பார்க்க முடியாமல் போனது. காலையிலிருந்து ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் முக்கால்வாசி பதிவுகள் அதைப் பற்றியே... அந்தப் பக்கத்து கொள்கைகள் என்றைக்குமே நடுநிலையை எட்டியதில்லை.. எவ்வளவோ கோவில்களுக்கு எதிரில் பார்த்த பெரியார் சிலைகளைப் போல, எந்த மசூதிக்கு எதிரிலும் இதுவரை பார்த்ததில்லை. அப்படியே இருந்தாலும் “கடவுள் இல்லை, இல்லவே இல்லை” போன்ற அரும்பெரும் வார்த்தைகளெல்லாம் அந்த சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கமா எனத் தெரியவில்லை.. இந்து மத எதிர்ப்பு, முக்கியமாக பிராமண / பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே அவர்களின் உயரிய கொள்கையாக, காலங்காலமாக இருந்து வருகிறது. 

இதில் பாண்டே ஏதோ கேள்வி கேட்டு மடக்கிவிட்டாராம், எதிரிலிருந்தவர் முழித்து மாட்டிக்கொண்டாராம்.. இதனால் நடக்கப்போவது என்ன? தந்தி ஒரு பார்ப்பன ஆதரவு ஊடகம், பாண்டே ஒரு பார்ப்பன வெறியன், இவர்களுகெல்லாம் கேள்வி கேட்கத் தெரியாது, மீசையில் எதுவும் ஒட்டவில்லை என்றே அந்தப் பக்கத்திலிருந்து எதிர்வினைகள் வரும். (ஏற்கனவே பல மண் ஒட்டவில்லை பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன)
யார் என்ன நிரூபித்தாலும் ஆரியன் / திராவிடன் / பார்ப்பனன் / ஜாதி வெறி என அரைத்த மாவையே அரைத்து வெறுப்பை மட்டுமேதான் அவர்களால் பரப்ப முடியும். இதில் பகுத்தறிவதுதான் அவர்கள் நோக்கமாம்.. வெங்காயம்

யூடியூபில் இருக்கும் ஒரு கமெண்டில் வேறு, இஸ்லாமியர் ஒருவர் வந்து, இந்து மதத்தில் ஜாதி இருக்கிறது, பலருக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை, மசூதியிலெல்லாம் அப்படியில்லை என்று தன் பங்கிற்கு சம்மந்தமே இல்லாமல் ஆஜராகி சர்வமத வழிபாட்டை நடத்தியுள்ளார். 
இதில் இருக்கும் நகை முரண் நான் விளக்கித் தெரியவேண்டியதில்லை. ஒரே ஆறுதல், இந்த முறை அவர்கள் வாங்கிய மொக்கையும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. உங்களயெல்லாம் உம்மாச்சிதான் காப்பாத்தனும்.. 

-----------------------------------------------------------------------

வலியவன் என்றொரு காவியத்தைக் காண நேர்ந்தது. எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணனை, படத்தில் எங்கேயும், எப்போதும் காண முடியவில்லை. கால்ஷீட் கிடைத்து, கதையே இல்லாமல், 15 கோடி பட்ஜெட்டில் அவசர கதியில் படம் தொடங்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். ஷூட்டிங் ஆரம்பிக்க பூசணிக்காய் உடைத்ததிலிருந்து யோசித்திருந்தால் கூட ஒரு மாதத்தில் கதை என்று ஏதோ ஒன்று கிடைத்திருக்கும். இவ்வளவு மொன்னையான முதல் பாதியை அண்மையில் எந்தப் படத்திலும் பார்க்கவில்லை. திரைப்படங்கள் பார்ப்பதில் உலக மகா பொறுமைசாலியான நானே சீட்டில் நெளிய ஆரம்பித்துவிட்டேன். அண்ணாசாலை சப்வேயில் அத்தனை கூட்டத்தை, அதுவும் ரிச் கேர்ள்ஸ் கூட்டத்தையும் என் வாழ்க்கையில் என்றைக்குமே பார்த்ததில்லை. படத்தில் ஒரே ஆறுதலான ஆண்ட்ரியாவுக்கு ஹீரோவை நினைத்து ஏங்கும் ஒரு (ஹீரோ ஜெய் என்பது முக்கியச் செய்தி) சோலோ பாடல் வேறு. கலி மேலும் முத்திப்போச்சு.. 

-----------------------------------------------------------------------

உலகக் கோப்பை ஒருவழியாக முடிந்து, ஆஸ்திரேலியா வெற்றியும் பெற்றாகிவிட்டது. இன்னமும் தோனி, கண்ணீர், பிறந்த குழந்தை, கோலி, அனுஷ்கா சர்மா, நக்மா, கங்குலி, யுவராஜ் சிங் என தேசப்பற்று மிக்க இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புலம்பல்கள் தாங்கவில்லை. இதில் பலர் ஃபேஸ்புக் போராளிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க, ஃபைனலில் ஆஸ்திரெலியாவை ஆதரிக்க ஒரு கூட்டமும், இந்தியாவை வீழ்த்திய ஆஸி.யை எப்படி ஆதரிக்கலாம் என ஒரு கூட்டமும் ஒரே நேரத்தில் கிளம்பியது. நம் நாட்டில் இன்னமும் விளையாட்டை விளையாட்டாகவும், சினிமாவை சினிமாவாகவும் பார்க்கும் பக்குவம் பெரும்பான்மை பொது ஜனத்துக்கு வரவில்லை. வர எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. இதில் படிப்பறிவுள்ள, ஃபேஸ்புக் பயன்படுத்தத் தெரிந்த கும்பல் அதிகம் என்பது கவலையளிக்ககூடிய விஷயம். 

It is a thousand times better to have common sense without education than to have education without common sense என ராபெர்ட் கிரீன் இங்கர்சால் கூறியதைப் போல..........

Sunday, August 17, 2014

'எடை'யப்பா


ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் இயந்தரங்களின் மேல், சிறு வயது முதலே எல்லா சிறுவர்களையும் போல ஒரு ஈர்ப்பு. இன்று வரை அதன் தொழில்நுட்பம் புரியாமல் இருப்பதால், இன்று வரை அதன் மீதான சுவாரசியமும் குறையவில்லை. பல முறை எடை பார்த்திருக்கிறேன். காலுக்கு கீழே வைத்துப் பார்க்கும் சிறிய அளவிலான எடை பார்க்கும் இயந்திரமாக இருந்தாலும் விட்டதில்லை. ஏறி நின்று (எடை) பார்த்து விட்டுதான் மறுவேலை. 

என்றுமே எடையைக் கூட்டவோ, குறைக்கவோ பெரிய அளவில் நான் முயற்சி செய்ததில்லை. சிறு வயது முதலே ஒல்லியான தோற்றம் என்பதால், அவ்வபோது பாதாம் ட்ரிங், பால், தேன், pedia sure, complan என பல கட்டங்களைத் தாண்டி, நிச்சயமாக எதுவும் தேறாது என முடிவுசெய்து முயற்சிகளை கைவிட்டேன். ஆனாலும் அவ்வபோது எடை பார்த்து, அந்த நொடிக்கு மட்டும் வருத்தமடைந்த சந்தர்ப்பங்கள் வந்தன. முதுகலையில் சேரும்போதும் 49 கிலோ மட்டுமே இருந்தேன். முடியும் போது 52. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் என்ன ஆனதோ தெரியவில்லை, 10 கிலோ வரை ஏறினேன். "ஒரு வழியா டீசண்டான வெயிட் வந்துட்டோம்" என மனதில் தோன்றியதால், முன்பு போல எடை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

பெசண்ட் நகரில் முருகன் இட்லி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். எடை பார்த்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்ததால், அங்கிருக்கும் எடை பார்க்கும் நவீன இயந்திரத்தைப் பார்த்தவுடன், காலும் கையும் குறுகுறுக, ஆசை பீறிட, சில்லறை கடன் வாங்கிக் கொண்டு, இயந்திரத்தில் நின்றேன். 76.3 என வர, என் இதயம் ஒரு முறை நின்றது. அதற்கு முக்கியக் காரணம், சில மாதங்கள் முன்பு நான் இதை விட 10 கிலோ குறைவாக இருந்தேன். 

ஒரு காலத்தில் நான் 50 கிலோ வருவதற்கே அரும்பாடு பட்டுள்ளேன். வேலைக்கு போக ஆரம்பித்த பின், தானாக, இயற்கையாக எடை கூடியதால், பெரிதாக கவலைப் பட்டதில்லை. ஆனால், ஒரேடியாக இந்த 10 கிலோ ஏற்றத்தை மனம் ஏற்க மறுத்தது. மீண்டும் சில்லைற மாற்றி, மீண்டும் முயற்சித்தேன், இம்முறை 77. 

நின்று போன இதயம் வெடித்தது. கண்கள் கண்ட காட்சியை, மூளை ஏற்க மறுத்தது. நண்பர்களிடம் புலம்பிவிட்டு, வீட்டிற்கு வந்தேன். பேச்சு வாக்கில் அப்பாவிடம் சொல்ல, அவரும் அதிர்ச்சி ஆனார். தலைக்கனத்தினால் உடல் எடை உயர்ந்ததாக சரித்திரத்தில் இல்லை. அதனால் அப்பாவுக்கும் குழப்பம். "எக்சர்சைஸ் பண்ணு. இவ்ளோ இருக்க கூடாது. வீட்ல எதாவது வேலை செஞ்சாதான" என்று அவர் பங்கிற்கு ஏற்றிவிட, மேலும் கடுப்பானேன். வழக்கம் போல அம்மா மட்டுமே, இந்த வயதிற்கு இது சரியான எடை தான். கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் சொன்னார். ஆனால் மனம் ஆறவில்லை. எப்படி 10 கிலோ, எப்படி 10 கிலோ என அதீதமான யோசனை.

சில நாட்களுக்கு முன காதி கிராப்ட் கடையில் இருக்கும் இயந்திரத்தில் எடை பார்த்தேன். பழைய எடையான 67-ஐ காண்பித்தது. அபோதுதான் மனதின் பாரமும் இறங்கியது. மு.இ.கடையில் இருக்கும் இயந்திரம் கோளாறு என முடிவு செய்தேன். இப்போது ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. நீங்கள் யாரும் மு.இ. கடை இயந்திரத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வாழ்க அரசாங்க இயந்திரம் !!

Saturday, August 16, 2014

மற்றும் பல - 16/08/2014


Writers Block, சோம்பேறித்தனம், மெத்தனம் இதில் எது என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. தோன்றவில்லை, அதனால் எழுதவில்லை. இதுவே காரணம்.
ஏன் தோன்றவில்லை?
ஒரு வேளை நான் மந்தமாகிவிட்டேனோ என்னவோ. என் பழைய பதிவுகளைப் பார்க்கும்போது ஏதோ வாழ்ந்து கெட்ட குடும்பம் போல தோன்றுகிறது. முன்பெல்லாம் அவ்வபோது ஏதோ ஒன்றை எழுதி வந்துள்ளேன். ஆரம்பித்த வருடத்தில் 59, அடுத்த வருடம் 58, அடுத்து 36 என பதிவுகளின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 2+ வருடங்களாக நான் எழுதிய பதிவுகள் மொத்தமே 10 தான். எழுதும் ஆர்வம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது இங்கே எதிரொலிப்பது இல்லை. இனிமேல் நமக்கு முன்பு போல் எழுதவே வராதோ என்று கூட பயம் வருகிறது. மேலும் மேலும் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வழக்கம் போல எழுதாமல் விடவேண்டாம் என்பதால், இதோ. எங்காவது உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

-----------------------------------------------------------------------


பல நாட்கள் கழித்து ஒரு முழுமையான மாஸ் பட அனுபவத்தை வேலையில்ல பட்டதாரி தந்தது. என் நினைவுக்கு எட்டிய வரை, கடைசியாக தூள் திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த உணர்வு இருந்தது. தேவியில், மொத்த அரங்கமே கொண்டாடிய படம் அது. அந்த அனுபவத்திற்காகவே அங்கு மேலும் இரண்டு முறை பார்த்தேன். அப்படித்தான் இருந்தது வே. ப. படத்தின் பாடல்கள் வந்த நாள் முதல் ஒட்டிக்கொண்டு விட்டது. படமும் அப்படியே. இன்று திரைப்படம் என் போன்ற ரசிகர்களினால் 50 கோடியை தாண்டியுள்ளது. harmless entertainment. ஜெயிப்பதில் மகிழ்ச்சியே. முக்கியமான ஒரு சம்பவம். படத்தில் ஒரு கெட்ட வார்த்தை வரும்போது, புரிந்து கொண்டு, நானும், தியேட்டரில் மிகச் சிலருமே கைதட்டிய போது, இந்தியா கூடிய விரைவில் வல்லரசாகிவிடும் என்று தோன்றியது. 


-----------------------------------------------------------------------


எப்படி வே.ப பார்க்கும்போது தூள் நினைவிற்கு வந்ததோ, அதே போல ஜிகர்தண்டா பார்க்கும்போது சூது கவ்வும் நினைவிற்கு வந்தது. இரண்டு படங்களுமே முற்றிலும் புதுமையான ஒரு அனுபவத்தைத் அரங்கில் இருப்பவர்களுக்கு தந்தன. தமிழ் திரைக்கு புதிய விஷயங்களைத் தந்தன. டேர்டி கார்னிவல் படத்தின் காப்பி என வதந்தி உலவியதால், முதலிலேயே அந்தப் படத்தை பார்த்து விட்டேன். ஆனால் ஜிகர்தண்டா பார்க்குபோது அப்படி எந்த ஒரு அம்சமும் ஒத்துப் போகவில்லை. படம் தந்த பிரம்மிப்பில் பல விஷயங்களை சரியாக கவனிக்கவில்லை. மீண்டும் அரங்கில் பார்க்க வேண்டும். 


-----------------------------------------------------------------------


கடந்த சில மாதங்களில் வெளியான எந்தப் பாடல்களும் சகிக்கவில்லையே. என்ன காரணம்? 


-----------------------------------------------------------------------


 அஞ்சான் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் கிடைத்தலும் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். ட்ரெய்லர் தந்த பயம் அப்படி. இன்று படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பிறகு, "கடவுள் இருக்கான் குமாரு" என்று தோன்றியது. ஏன் இந்தப் படம் ஓடக் கூடாது என நினைத்தேன் என்று தெரியவில்லை. படத்தின் விளம்பரங்களிலிருந்தே ஒரு விதமான திமிர் தெரிந்தது. அதீதமான நம்பிக்கை அல்ல. திமிர் மட்டுமே. ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. இனி நமது கோலிவுட் மகான்கள் இந்த கமெர்ஷியல் கடுப்புகளைக் கட்டி அழ மாட்டார்கள் என ரசிகர்கள் சிலர் நினைக்கின்றனர். இந்த ஊரில் தான் குருவி, வில்லு, சுறா, ஜில்லா, பட்டத்து யானை, அலெக்ஸ் பாண்டியன், ஏகன், பழனி போன்ற படங்களை எடுத்து, ஊமைக் குத்தாக வாங்கி, வைத்தியம் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்களா அஞ்சானிலிருந்து தெரிந்து கொள்வார்கள்? ஆயிரம் ஜிகர்தண்டா வந்தாலும் சிலர், அப்படித்தான். 


-----------------------------------------------------------------------


ராஜாவின் நல்ல பாடல்களைப் பகிர்ந்து பல காலம் ஆகிறது. இந்தப் பாடல் தெலுங்கில் 'மரண மிருதங்கம்' என்ற திரைப்படத்திலிருந்து. பாடலில் ஏதோ ஒரு mystery இருப்பது போல தோன்றுகிறது. அதுவே பாடலை (எனக்கு) சுவாரசியமாக்குகிறது. பொதுவாக தெலுங்கு பாடல்களை நான் பார்ப்பதில்லை. அதைப் பார்த்து விட்டு பாடல் பிடிக்காம போய்விட்டால்? இதையும் அப்படியே. பி. சுசீலா, எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல், இதோ... 






Wednesday, May 14, 2014

நான் எவ்வளவு பெரிய முட்டாள்???

நிறைய யோசிப்பவர்கள் நிறைய கோட்டை விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்ததுண்டு. ஊரே, "ஆஹா, என்ன அறிவாளிப்பா நீ.. உன்ன மாதிரி ஒரு புள்ள கெடைக்குமா" என்று போற்றப்படும் ஆட்கள் எல்லாம் கண்டிப்பாக சில்லித்தனமான முறையில் தங்களது முட்டாள்தனத்தை காட்டுவார்கள் என்றே நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக, ஒரு உண்மைச் சம்பவமும், ஒரு கதையும் கைவசம் உள்ளது. முதலில் கதை

பிரபலமான விஞ்ஞானி ஒருவர் தனது ஆராய்ச்சிக் கூடத்தில் அடிக்கடி இரண்டு பூனைகள் வந்து செல்வதைக் கண்டார். பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலும் சில தொல்லைகளை பொருத்துக் கொள்ள முடியாதோ என்னவோ. பெரியது ஒன்று, சிறியது ஒன்று என அந்தப் பூனைகள் போடும் அட்டாகசங்கள் தாள முடியவில்லை. முக்கியமாக அவை கூடத்திற்குள் வர முயற்சிக்கும்போது ஏற்படுத்தும் சேதாரங்களே அதிகம். அவற்றை விரட்ட முடியவில்லை என்பதால், உள்ளே வருவதில் தானே பிரச்சனை, அதற்கு ஒரு வழி செய்யலாம் என முடிவு செய்து, தனது கூடத்தின் கதவில் ஓட்டை போட முடிவு செய்தார்.

பெரிய பூனைக்கு பெரிய ஓட்டையும், சிறிய பூனைக்கு சிறிய ஓட்டையும் !!!!!

படித்ததும் புரிந்தவர்கள், சிறிது யோசித்து "அட" என நினைத்து புரிந்தவர்கள், இன்னமும் புரியாதவர்கள் எல்லாரும் அடுத்து சம்பவத்தைப் படிக்கலாம்.

ஒவ்வொரும் மாதமும் என் சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டிற்கு தருவது வழக்கம். அந்த மாதம் சம்பளம் வந்த பிறகும் ஏதோ காரணங்களால் ஏடிஎம் சென்று எடுத்து வர முடியவில்லை. என் அண்ணன் மகளுக்கு நெட் பாங்கிங் முறையில் தான் ஃபீஸ் கட்ட வேண்டும் என்பதால் எனது அக்கவுண்டிலிருந்து கட்டிவிட்டேன். பதிலாக என் அண்ணன், காசை என் கையில் கொடுத்து விட்டான். இந்தப் பணமும், வீட்டிற்கு தரும் பங்கும் ஏறக்குறைய ஒரே அளவுதான். சரி, கத்தையாகப் பணம் வீட்டில் இருந்தால் செலவாகிவிடும் என்பதால் அதை எனது அக்கவுண்டில் டெபாஸிட் செய்துவிட்டு, வீட்டிற்கு தேவையான காசை எடுக்கலாம் என முடிவு செய்தேன். பேங்க் புறப்படும் வரை யாரும் எனது முட்டாள்தனத்தை சுட்டிக் காட்டவில்லை. 

பேங்கிற்கு சென்று, வரிசையில் நின்று, அக்கவுண்டில் பணத்தை செலுத்திவிட்டு, கீழே வந்து ஏடிஎம் மில் வீட்டிற்காக காசு எடுக்கலாம் என நினைக்கும்போது தான் உறைத்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று !!!

இன்னமும் உறைக்காதவர்கள் எனக்குப் போட்டியாக வரலாம், புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம்..  எனக்கும் அந்த விஞ்ஞானிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவ்வளவே.. 

Saturday, July 27, 2013

EA - சில அலட்சியங்கள்....


ஃபேஸ்புக்கில், நண்பர் கேபிளாரும், சுரேகா அவர்களும் ஆரம்பித்த குழுமம், கேட்டால் கிடைக்கும். வாடிக்கையாளர் உரிமை பற்றிய விழிப்புணர்வை, வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள். இன்று, அந்த குழுமத்தில் இருக்கும் பலர், அவர்கள் கேட்டுப் பெற்ற அனுபவங்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். சில பதிவுகளைப் பார்த்து, நானும் பல புதிய தகவல்களை மண்டையில் ஏற்றியிருக்கிறேன். இன்று, எனக்கு நேர்ந்த அனுபவத்தினால், சில சந்தேகங்கள் ஏற்பட்டது. அவற்றை அங்கே பதிவிட்டு, இங்கே காபி பேஸ்டுகிறேன். இதைப் படிக்கும் அன்பர்கள், இப்பதிவை முடிந்த வரை, மற்றவரிடத்தில் பகிருங்கள். நன்றி.  
//இங்கு பலர், எக்ஸ்பிரஸ் அவென்யூவில், அவர்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அங்கு கேட்டு கிடைத்த சம்பவங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளனர். இதோ, இன்று என் முறை.

புதிதாக ஆடை வாங்க, பல நாட்களாக திட்டமிட்டு, முடியாமல், வேறு வழியில்லாமல், நேரமின்மையால், பக்கத்தில் இருக்கும் EAவிற்கு செல்லலாம் என நானும் நண்பரும் முடிவெடுத்தோம். நண்பருக்கு, பசித்ததால், முதலில், அங்கு பேஸ்மன்ட் 1ல் இருக்கும் பிட் ஸ்டாப் எனும் கடைக்குச் சென்றோம்.


1. நண்பர் சாப்பிட்டார். நான் தண்ணீர் கேட்கப் போக, வழக்கம் போல, தண்ணீர் கொடுப்பதில்லை என்றும், பாட்டில் தான் வாங்க வேண்டும் என்றும், கிளிப்பிள்ளை போலக் கூறினார் கல்லாவில் இருந்த அப்பாவி இளைஞர். “வர கஸ்டமருக்கு ஃப்ரீயா தண்ணி தர வேண்டியது உங்க கடமை, உங்க மேனஜருக்கு சொல்லுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றோம். கண்டிப்பாக வேறொரு சந்தர்பத்தில், கேட்டு வாங்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன் (என் பிரச்சனை, நேரமின்மை). அடுத்து, இரண்டாவது தளத்தில் இருக்கும் மேக்ஸ் என்ற கடைக்குச் சென்றோம்.

2. 2000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கிவிட்டு, வெளியே வரும்போது, அங்கிருந்த ஃப்ளெக்ஸில், 1400 ரூபாய்க்கு மேல் வாங்குவோர்க்கு 200 மதிப்புள்ள வவுச்சர் தரப்படும் என்ற விளம்பரம் இருந்தது. மீண்டும் நான் உள்ளே சென்று, கவுண்டரில் இருந்தவரிடம் “வவுச்சர் இருக்குன்னு போட்டிருக்கீங்க, எதுவும் தரலியே”

“அது maxx ப்ராடக்ட்ல மட்டும்தான் சார்”

“ஆமாம், பாருங்க, நான் வாங்கினது எல்லாம் உங்க பிராண்ட் தான்” என எடுத்த ஆடைகளை எடுத்து காமிக்க. எனக்கு பில் போட்ட நபரைக் கூப்பிட்டு, “சரியா பார்க்க மாட்டியா, எடுத்து குடு” என சொல்ல, அவர் வவுச்சர் எடுக்க சென்றார்.
நான் விடாமல் அவரிடம் “ஏன் சார், கஸ்டமருக்கு சொல்ல வேண்டியது உங்க கடமைதான, அவங்க வந்து கேட்கற அளவுக்கு வெச்சீப்பீங்களா”

”நாங்க செக் பண்றோம் சார், இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சு, சாரி” என சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார். கேட்டு கிடைத்த வவுச்சருடன் திரும்பினோம்..
 
 3. அடுத்து, பார்க்கிங்க் கட்டணம் செலுத்தும் கவுன்டரில் இருந்த நபர்

“70rs சார்” என்றார்.

நான் “எவ்வளவு நேரம் ஆகிருக்கு” என கேட்க

“3rd hourல வெளிய வந்துருக்கீங்க” என பதில் வந்தது

"அதுக்கு 50rs தான? weekendலதான 70” என கேட்டேன்.

“ஆமா சார், 50 ரூபாதான்” என சொல்லிவிட்டு, கொடுத்த 100 ரூபாய்க்கு, 50 ரூபாய் மிச்சம் தந்தார். வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

1. இதில் எவ்வளவு வாடிக்கையாளர்கள், தண்ணீர் கொடுக்க வேண்டியது உணவகத்தின் பொறுப்பு என்பதைத் தெரியாமல் இருப்பார்கள்? இருக்கிறார்கள்? இன்றும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

2. என்னைப் போல, பார்த்து கேட்காமல் போனவர்களால், மேக்ஸ் நிறுவனத்திற்கு, எவ்வளவு 200 ரூபாய் வவுச்சர்கள் லாபத்தில் சேர்ந்திருக்கும்?

3. எப்படியும் மால்களில் பார்க்கிங்க் கட்டணம் அதிகம் தான் என்ற எண்ணத்தில் இருக்கும் எவ்வளவோ நண்பர்கள், சரியாகப் பார்க்காமல், 70 ரூபாயை கொடுத்து விட்டு வந்திருக்கலாமே?

கேட்டால் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எப்படி கேட்பது, எதையெல்லாம் கேட்பது என்பது பற்றிய விழிப்புணர்வு, பெரும்பாலனவர்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த குழுமத்தில் இருக்கும் சக உறுப்பினர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் என, ஒரு குறுகிய வட்டத்திலேயே விழிப்புணர்வு இருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை வாடிக்கையாளர் விழிப்புணர்வு பற்றிய தகவல்களை, இன்னும் பல்லாயிரம் பேருக்குத் தெரிவிக்க, வேறேதேனும் வழியுள்ளதா? ஃபேஸ்புக் பயன்படுத்தாத பெரும்பான்மையினருக்கு இதைக் கொண்டு செல்வது எப்படி? இதைப் பற்றி ஏற்கனவே யாராவது இங்கு பேசியிருக்கிறார்களா ? அதற்கான தீர்வு ஏதேனும் கிடைத்ததா?
//

Saturday, July 20, 2013

மரியான்


வழக்கமான எதிர்பார்ப்போட, வழக்கமான தேவி தியேட்டர் நடு செண்டர்ல சீட்டு புக் பண்ணி, வழக்கம் போல உட்கார்ந்தா, வழக்கம் போல அழ வெச்சு அனுப்பிய பெரும்பாலான படங்களில் இன்னொரு படம்தான் மரியான்.


கடல் ராசாவா வாழ்ந்துட்டு வர தனுஷ், காதலிக்காக சூடன் நாட்டுக்கு வேலைக்கு போய், ரெண்டு வருஷம் கழிச்சு, திரும்பி வர ரெடியா இருக்கற நாள்ல, அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகளால கடத்தடப்படறார் (நம்ம ஊர் ரவுடிகளுக்கு டாடா சுமோ மாதிரி, அவங்க ஊர்ல ஜீப்னு நினைக்கறேன். அயன் படத்துலையும் இப்படிதான் வந்துச்சு) அவர் பத்திரமா ஊர் திரும்பினாரா, காதலர்கள் ஒண்ணா சேர்ந்தாங்களான்னு, டிக்கெட்டுக்கு காசு இருந்தா போய் பாருங்க.


படத்துல தனுஷ், பார்வதி மேனன், ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க. இதனாலயே பார்வதி நிறைய படங்கள்ல நடிக்கறதில்லைன்னு நினைக்கறேன். மற்றபடி, படத்துக்கு தேவையான பாத்திரங்கள் எல்லாம், டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காங்க. முதல் பாதி கொஞ்சம் சுவாரசியமா இருந்தாலும், நிறைய பழக்கப்பட்ட காட்சிகள். எப்படியும் தனுஷ் லவ் பண்ணிடுவாருன்னு தியேட்டர்ல இருக்கற 900+ ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும், ஹீரோயின் கொஞ்சம் சூப்பரா இருக்கறதுனால, மக்கள் கொஞ்சம் பொறுமையோடதான் பாக்கறாங்க. இதையும் மீறி, எல்லாருமே பொறுமையிழந்தது, ரெண்டாவது பாதில. சுவாரசியமே இல்லாத திரைக்கதை. தனுஷ் மணல்ல உருண்டு விழறா மாதிரி, பொத்துனு விழுது, எந்திரிக்கவே இல்லை. வெளிநாட்டு கேமராமேனோட முத்திரை எதுவும் தெரியலை. நம்ம ஊர் ஆட்களே இதை பண்ணிருக்கலாம். மத்த விமர்சனங்கள்ல சிலாகிக்கறா மாதிரி ரஹ்மான் பாடல்கள், பி.இசை ஒண்ணும் படத்துல ஒட்டவே இல்லை. ஆனா, எப்பவும் போல, எல்லா பாட்டுலையும் பல்லவி மட்டும் நல்லா இருக்கு. தனுஷ், பார்வதியோட Top Notch நடிப்பைத் தாண்டி, படத்துலையே நான் ரொம்ப ரசிச்ச காட்சி, தனுஷ் வில்லனை கொல்றது. ”கடல் டா, கடல்” அப்படின்னு மணிரத்னம் சார் படத்தோட பேரை சொல்ல மிரட்ட, அங்கயே வில்லன் பாதி செத்துற்றான்.

இதுக்கு மேல சொல்லி உங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. தனுஷோட நடிப்பையும், தமிழ் சினிமால ஒரு ஹீரோயின் சூப்பரா நடிக்கறதையும் பார்க்கணும்னு ஆசை பட்டா, இந்த படத்தை, எதாச்சு ஒரு மல்டிப்ளெக்ஸ்ல பாருங்க. ஏன்னா, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது சுத்தமா ஒத்து வராத படம். எனக்கு மரிYAAAAAAWN....

ஐய்யயோ, இந்தப் பையன் விமர்சனம் எழுதறான். கடல் ஆத்தா, காப்பாத்து

Friday, February 1, 2013

கடல்


எப்படியோ வருஷத்தோட ஆரம்பத்துல வந்த முதல் கண்டமான அலெக்ஸ் பாண்டியன் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டோமேனு சந்தோஷத்துல இருந்தேன். அதுல யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, என்னை கடல்ல தள்ளி விட்டுட்டாங்க .Taking for grantedனு ஆங்கிலத்துல சொல்லுவாங்க. அப்படி, மணிரத்னம், தனக்குனு வர ரசிகர்கள், எதை எடுத்தாலும் பாராட்டிடுவாங்கனு குருட்டு நம்பிக்கைல, எதையோ எடுத்து தொலைக்க, இதுக்கு பேசாம தடை வாங்கிருக்கலாமேனு தோணிணதுதான் மிச்சம் ( நான் மணிரத்னம் ரசிகன் இல்லை)

 “இந்த படத்தில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”னு போடற இடத்துலேர்ந்தே ஜெயமோகன் கண்ணுக்கு தெரியராரு. ஏன்னா, அதுவும் படிக்க சிக்கலாதான் இருந்துது. அதை ஏன் மாத்தினாங்கன்னு தெரியலை. அடுத்து, டைட்டில்ஸ்ல வர மகுடி பாட்டு, யாருக்கு மகுடி, எதுக்கு மகுடி, என்ன மகுடினு நம்மளை நல்லா சிந்திக்க வைக்குது. கதைனு ஏதோ கதை பண்ணிருக்காங்க. திரைக்கதை செம்ம உதை வாங்கிருக்கு. நடிப்புனு பார்த்தா, கௌதம் கார்த்திக் நம்பிக்கை தராறு. எல்லா தமிழ் படங்கள்ளையும் அரை லூசா வர ஹீரோயின் பாத்திரத்துக்கு, இந்த படத்துல, அவங்களுக்கு மனநலம் கொஞ்சம் பாதிப்புனு justification சொல்லிருக்காங்க. அதுக்காக அந்த பொண்ணு நல்லா நடிச்சிருக்குனு சொல்ல வரலை. அரவிந்த்சாமி, அர்ஜுன் நடிப்பை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை. ஒருத்தர் தியாகத்தோட மறுவுருவம், அடுத்தவர், நேரெதிர். மற்றும் பலர், மற்றும் பலர் மாதிரியே நடிச்சிருக்காங்க.

ஏதோ வெனிஸ்ல இருக்கறா மாதிரி, எப்ப பார்த்தாலும், எல்லாரும் படகுலதான் பயணப்பட்றாங்க. பாடல்கள் ப்டத்துல வந்த விதம், எடுக்கப்பட்ட விதம், ரெண்டுமே மெகா சைஸ் கொட்டாவீஸ். ”நெஞ்சுக்குள்ள” பாட்டுல, ஹீரோயின், வடிவேலு மாதிரி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பண்ணுவாங்க பாருங்க, தியேட்டரே ஒத்த வார்த்தைல ஒரு சவுண்டு விட்டுச்சு. இதுல ”அடியே” பாட்டுதான் உச்சகட்டம். இடுப்பே இல்லாத பொண்ணுக்கு, பெல்லி டான்ஸ் ஸ்டெப் வேற. பிண்ணனி இசைல நீங்க இன்னும் வளரணும் சார். ராஜீவ் மேனனோட ஒளிப்பதிவு, சில இடங்கள்ள நல்லா இருக்கு. பல இடங்கள்ள, image quality அடி வாங்குது. இன்னும் சில காட்சிகள்ல out of focus. கிராபிக்ஸ், வழக்கம் போல தமிழ் சினிமா தரம். கடைசில வர ஆலேலூயா பாட்டுக்கு அடக்க முடியாம சிரிச்சிட்டேன், அதுலயும், அரவிந்த்சாமி ஏதோ பாப் சாங் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வாயசச்சிட்டு வருவாரு பாருங்க. priceless. கடல், பெயர் காரணம் கூறுகனு சொன்னா, டைரக்டர்கே தெரியாதுனு நினைக்கறேன். ஸ்தோத்திரம், தொம்மை, டாம், மகுடி, டாம் அண்ட் ஜெர்ரி, இப்படி பல டைட்டில்ஸ் இருக்க, இதை ஏன் வெச்சாருனு தெரியலை.

இந்த படத்தோட ஒரே ப்ளஸ், புது வருஷத்துல என்னை பதிவு எழுத வெச்சதுதான். நீச்சல் தெரிஞ்ச என் நண்பனும், இந்தக் கடல்ல ரொம்ப கஷ்டப்பட்டான். மொத்தத்துல பன்ச் மாதிரி சொல்லனும்னா இது கDULL.


பி.கு எனது வயற்றெரிச்சலை செம்மையாகக் கொட்டிக்கொண்ட மணிசார், என் money sir?? அதுக்கும் ஸ்தோத்திரமா?? 

Wednesday, July 18, 2012

மீள் பதிவும், நோலனும்

கடைசியாக நான் பதிவெழுதி 3 மாதம் 15 நாட்கள் ஆகிறது. உருப்படியாக எதுவும் எழுதவில்லையென்றாலும், எழுதும் பழக்கம் விட்டுப்போகக் கூடாது என்பதே நான் பதிவெழுத ஆரம்பித்தக் காரணம். "Writer's Block" இதை தமிழ்பெயர்ப்பது எப்படி எனத் தெரியவில்லை. ஆனால், இந்த மூன்றரை மாத இடைவேளைக்கு காரணம் அதுவே. இந்தப் பதிவிலும் உருப்படியாக எழுத ஒன்றுமில்லை. ஆனால், எழுதத் தூண்டியது, கிறிஸ்டோஃபர் நோலன் என்ற அதி அற்புதமான இயக்குனர். 

டார்க் நைட் ரைஸஸ் படத்தின் விளம்பரங்களைப் பார்க்கும் போது, நோலனின் கடைசி படமான இன்செப்ஷனைப் பற்றி நான் எழுதிய பதிவுகளும், அதற்கு கிடைத்த வரவேற்பும் நினைவிற்கு வந்தது. அவ்வளவு உற்சாகத்துடன் பதிவு எழுதிய கார்த்திக் எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன், கிடைத்ததால் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

830px-Thefirerises.jpg (595×363)

பல வலைதளங்களில், பதிவுகளில், கிறிஸ்டோஃபர் நோலன் என்கிற 
இயக்குனரைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். கூகுளில் கிறிஸ்டோஃபர் நோலன் என்று தமிழில் தேடினாலே, எக்கச்சக்க தள இணைப்புகள் உங்களுக்கு கிடக்கும். அவரது மெமண்டோவைப் முழுதாகப் பார்க்கும் தைரியம், இன்னும் எனக்கு வரவில்லை. கவனிக்கவும், பொறுமை என்று சொல்லவில்லை, தைரியம்தான் வரவில்லை. “என்னடா நமக்கு புரியாம ஒரு படமா, ஒரு வேளை இந்த படம் நமக்கு புரியாமலே போய்டுமோ” என்ற பயமே. எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் பார்த்துவிடும் நம்பிக்கை வரும் என நினைக்கிறேன். இவரது படங்களில், வசனங்களுக்கும், காட்சியமைப்புகளுக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் சரியான விகிதத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்பதால், வரப்போகும் புதிய பேட்மன் படத்தை சத்தியமாக சப்டைட்டில்ஸ் இல்லாமல் பார்த்தால் புரியாது. தமிழில் பார்க்கலாமென்றால், வெளியாகும் திரையரங்குகளின் தரம், சத்யம் திரையரங்க கழிவறைகளின் தரத்திற்கு கூட ஈடாகாது. எது எப்படியோ, புரியாவிட்டாலும், இரண்டு வாரங்களில் அந்தப் படத்தை சத்தியத்தில் பார்ப்பது என தீர்மானித்தாகிவிட்டது. 

என்னை மீண்டும் பதிவெழுதத் தூண்டிய கிறிஸ்டோஃபர் நோலனிற்கு நன்றி. 
டார்க் நைட் ரைஸஸ் வெளியாகப்போகும் இந்த வேளையில், இன்செப்ஷனைப் பற்றிய என் பழைய பதிவுகளுக்கு ஒரு சின்ன விளம்பரம் :)



Tuesday, April 3, 2012

3

கொலைவெறி இவ்வளவு பெரிய ஹிட்டானவுடனே எல்லாருக்குமே படம் சுமாராதான் இருக்கும்னு ஒரு பொதுப்படையான அபிப்ராயம் வந்துடுச்சு. இருந்தாலும் படத்துக்கு ஒரு ஒப்பனிங் வந்துதுக்கு காரணம்னு நான் நினைக்கரது, கொலைவெறியத் தாண்டி, மத்த பாடல்களும் நல்லா இருந்து ஹிட்டானதுனால, தனுஷோட நடிப்பு எப்படி இருக்கும்னு  பார்க்க , முக்கியமா ஐஸ்வர்யா தனுஷ் என்ன பண்ணிருக்காங்கன்னு பார்க்க. இதையெல்லாம் எதிர்பார்த்து வந்த மக்கள், முக்கியமான கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டாங்கன்னே சொல்லணும். செல்வராகவன் எழுதிகொடுத்த கதைய, தனுஷ் டைரக்ட் பண்ணி, ஐஸ்வர்யா பேர் மட்டும் போட்டுகிட்டாங்களோன்னு பலபேருக்கு சந்தேகம் வருது.

எனக்குத் தெரிஞ்ச படத்தோட ப்ளஸ், தனுஷோட அனாயாசமான நடிப்பு. பழக்கப்பட்ட கேரக்டர்ல நடிக்க வெச்சதால, பின்னிட்டாருன்னு நினைக்கறேன். அடுத்து இசை + பின்னணி இசை. பின்பாதில பல இடங்கள்ள ரெண்டு மூணு பீஸை திரும்ப திரும்ப வாசிச்சாலும், போர் அடிக்காம செட் ஆகிருக்கு. அனிருத் அடுத்த படத்துல என்ன பண்ணுவாருன்னு எதிர்பார்க்கறேன். முதல் பாதி ஸ்கூல் காட்சிகள். அதுல வர சிவ கார்திகேயனோட பன்ச், ரெண்டாவது பாதில நண்பனா வர சுந்தரோட பாத்திரம்.  தனுஷ், ஸ்ருதி ரொமான்ஸ். இப்படி சில விஷயங்கள சொல்லலாம்.

மைனஸ், மெதுவா நகர்ற திரைக்கதை, சுவாரசியமில்லாத ரெண்டாவது பாதி, பைபோலர் டிஸ்ஆர்டர்னு சொல்லிட்ட அப்பறமா, அதை வெச்சே கடைசி முக்கால் மணி நேரத்தை ஓட்றது,  ஈசியா சொல்லி புரியவேச்சிருக்கலாமேனு எல்லாருமே கேள்வி கேட்கற லாஜிக் ஓட்டை. அவருக்கு எதனால, எங்க அந்த பிரச்சனை ஆரம்பிச்சுது, அந்த சாமியார், குழந்தை உருவங்கள் யாருன்னு நிறைய கேள்விகளுக்கு விடை இல்ல. பெரிய மனசு பண்ணி, முதல் படத்துக்கு பரவால்லைன்னு சொல்ற பக்குவம் எனக்கில்ல. எல்லாரையும் அழகா ஆழ வெச்சிருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் பண்ணி அழ வெச்சிட்டாங்க ஐஸ்வர்யா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பி.கு - ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு படத்தைவிட இதுல நல்லாவே நடிச்சிருக்காங்க and தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது கிடச்சிருமோ. அந்த கிளைமாக்ஸ் நடிப்பு, சான்ஸே இல்ல.

பி.கு 2 - படம் பார்த்த அப்பறம், கண்ணழகா பாட்டு இன்னும் நல்லா இருக்கு

பி.கு 3 - சங்கம் தியேட்டருக்கு எதிரா கேஸ் போடலாம்னு இருக்கேன். டயலாக் ஒரு எழவும் சரியா காதுல விழல. சில காட்சிகள் கட் வேற பண்ணிட்டாங்க. தேவில பார்த்த அப்பறம்தான் விமர்சனமா போஸ்டனும்னு இப்போ போஸ்ட் பண்றேன். தேவி தியேட்டர் சவுண்டை அடிச்சிக்க முடியாது. சங்கம் தியேட்டர் ஆளுங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார். 

Tuesday, January 24, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 4

போன வருஷம் நான் பார்த்து ரசிச்ச படங்கள், பாடல்களோட லிஸ்ட் இது.
எதுவும் மிஸ் பண்ணலை. உங்க ரசனையோட ஒத்து போகலன்னா ரொம்ப அலட்டிக்காதீங்க. என்னடா இதெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்றானேன்னு கமெண்ட் பண்ண வேணாம்.

படங்கள்
சரியா எண்ணி பார்த்தா, போன வருஷம்தான் நான் நிறைய படங்கள் பார்த்திருப்பேன்னு நினைக்கறேன். ரசனையும் கொஞ்சம் liberalஆ மாறிருக்குன்னு தோணுது. லிஸ்ட் போட்டா அது பெருசா மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி போகுது. கொஞ்சம் கூட்டி குறைச்சு, இங்க ஃபைனல் லிஸ்டை கொடுக்கறேன்.

ஜாலியா ரசிச்ச படங்கள் - தமிழ்

  • ஆடுகளம்
  • காவலன்
  • யுத்தம் செய்
  • பயணம்
  • கோ
  • பயணம்
  • அழகர்சாமியின் குதிரை
  • எங்கேயும் எப்போதும்
  • ஆரண்ய காண்டம்
  • வேங்கை
  • தெய்வத் திருமகள்
  • மங்காத்தா
  • முரண்
  • வேலாயுதம்
  • மயக்கம் என்ன
  • ஒஸ்தி
  • போராளி

இதுல சூப்பர்
ஆடுகளம், காவலன், யுத்தம் செய், கோ, அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், ஆரண்ய காண்டம், முரண்

இதுல என்னோட PICK
ஆரண்ய காண்டம்

நான் மொக்கை வாங்கிய படங்கள்

  • சிறுத்தை (first half + சந்தானம் காமெடி மட்டுமே ரசிச்ச விஷயங்கள்), 
  • நடுநிசி நாயகள்
  • எங்கேயும் காதல்
  • அவன் இவன்
  • வந்தான் வென்றான்
  • வாகை சூட வா
  • 7ஆம் அறிவு (ஓவர் ஹைப் ஒடம்புக்கு ஆவாது), 
  • ராஜ பாட்டை
  • வானம்
இந்த லிஸ்ட்ல, மங்காத்தவையும், தெய்வத் திருமகள் படத்தையும் சேர்க்கலாம். மங்காத்தா புத்திசாலித்தனமா இருக்கறா மாதிரி ஏமாத்தின ஒரு படம். முதல் முறை அஜீத்தும் பாட்டும் படத்தை காப்பாத்தினாலும், ரெண்டாவது தடவை தியேட்டர்ல உட்கார முடியலை. மொக்கையான மேட்டரை நல்லா மூடி மறைச்சு, ஹைப் பண்ணி மக்களை ஏமாத்திருக்காங்கன்னே தோணிச்சு. கோவா படத்துல தெரிஞ்ச சின்ன சின்ன ஸ்மார்டான விஷயங்கள் கூட இதுல இல்லை. தெய்வத் திருமகள், காபி அடிச்ச படம்னு கடைசி வரைக்கும் படத்தோட சம்பந்தபட்டவங்க ஒத்துக்கவே இல்லை. அதுவே எனக்கு செம்ம கடுப்பு. இதுதான் என்னோட இன்ஸ்பிரேஷன்னு சொல்றது அவ்வளவு கஷ்டமா? விக்ரமும் நல்லா ஒப்பேத்தினாரு.

பார்க்க முடியாமல் போன படங்கள்
180, காஞ்சனா, வெப்பம், பட்டா பட்டி, மௌன குரு

இந்திய அளவுல ரசிச்ச படங்கள்
Telugu - Alaa Modalaindhi,
Hindi - Pyaar ka Punchnama, Delhi Belly, Dirty Picture

பார்க்க முடியாமல் போனது
Telugu - Dookudu, Sri Rama Rajyam, 100% love, Golconda High School,
Hindi - No one killed jessica, Stanley ka dabba, Shaitan, Buddha Hoga tera Baap, Aarakshan, That girl in yellow boots

மொக்கை
Ra - One - வலிக்காம அடிச்ச படம். அப்பறம் எல்லாம் ஊமை காயம்.

இதுல டெல்லி பெல்லி படத்துக்கும், தமிழ்ல வந்த ஓரம் போ படத்துக்கும் சில ஒற்றுமைகளை பார்க்க முடிஞ்சுது. ஹிந்தி அளவுக்கு இல்லைனாலும், தமிழ்ல வசனம் கொஞ்சம் வெளிப்படையா இருந்துச்சு. அதே மாதிரி, வைர கடத்தல் மேட்டரும்.

உலக அளவுல நான் ரசிச்ச படங்கள்
சில படங்கள் பத்தி, சில வரிகள்.
  • Harry Poter Final Part - கண்ணீர் மல்க விடை கொடுக்கலாம்னு நினைச்சேன். தனியா படம் பார்த்ததுனால அழ முடியலை :P
  • Kungfu Panda 2 - முதல் பார்ட் அளவு இல்லைனாலும் enjoyable.
  • Hangover 2 - அதே டெய்லர், அதே வாடகை, ட்ரெஸ் கலர் மட்டும் வேற. நல்லா யோசிக்கறாங்க ரூம் போட்டு.
  • Ides Of March - எவ்வளவு பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சரியான பொலிடிகல் த்ரில்லர் படம்
  • Source Code - கொஞ்சம் குழப்பறா மாதிரி எடுத்த படம். ஆனா அப்படி ஒண்ணும் இல்லை. 
  • Bridesmaids - பெண்கள் மட்டுமே முக்கிய பாத்திரங்கள்ள இருக்கற இந்த படத்தை எழுதினதும் ஒரு பெண்தான். அவங்களுக்குள்ள இருக்கற பாசம், நேசம், ஈகோ இப்படி நிறைய விஷயங்களை எந்த சப்பைகட்டும் இல்லாம சொல்லிருக்காங்க.
  • X Men First Class - இன்னா கிராபிக்ஸ். இன்னா ஸ்க்ரீன்ப்ளே.
  • Super 8 - momentum எப்படி கொஞ்சம் கொஞ்சமா ஏத்தறதுனு கண்டிப்பா அவங்க ஊருக்கு போய் ஒழுங்கா படிச்சிட்டு வரணும். சாதாரண சின்ன பசங்க கதைய, ஏலியன் இன்வேஷனோட முடிச்சு போட்டு, அட்டகாசமா present பண்ணிருந்தாங்க. என்னதான் இருந்தாலும் நம்ம ஸ்பீல்பெர்க் தயாரிப்பாச்சே.
  • Bad Teacher
  • Horrible Bosses
  • Crazy, Stupid Love
  • Rise Of Planet Of Apes - இந்த படத்துக்காவது Andu Serkisகு ஒரு ஆஸ்கர் கொடுத்தா நல்லா இருக்கும். சீஸர்னு மனித குரங்கா அவர் நடிச்சிருந்த விதம் எனக்கு தெரிஞ்சு வேற யாருமே பண்ண முடியாத ஒரு விஷயம். 
  • Johny English Reborn
  • MI 4 - Brad Bird மேல வெச்ச நம்பிக்கை வீண் போகலை. பின்னு பெடல் எடுத்திருந்தாரு
  • Tin Tin
  • Tangled

பார்க்க முடியாமல் போனது
Fast Five, Cars 2, Rio, Rango, Transformers, Attack the Block, Sherlock Holmes

இந்த படங்களோட என்னை யோசிக்க வெச்ச இன்னொரு முக்கியமான விஷயம் டிக்கேட் ரேட். ரேட் ஃபிக்ஸ் பண்ண சட்டம் இருக்குனு தெரியும். ஆனா நம்ம கேபிள் அண்ணாச்சி சொன்ன அப்பறம்தான் டிக்கேட்டோட ரேட் இவ்வளவுனு தெரிஞ்சுகிட்டேன். முடிஞ்ச வரைக்கும் சூப்பரான சத்யம்ல பாக்கறதுனால அவங்களுக்கு கொடுத்தா பரவாயில்லைனு தோணுது. ஆனா 
டிக்கேட் மட்டும் இல்லாம, பார்க்கிங் + காண்டீன் சமாச்சாரங்கள்ல மத்த தியேட்டர்கள் அடிக்கற கொள்ளை, யாரும் கண்டுகிட்டா மாதிரி தெரியலை. 


ரசித்த பாடல்கள்

அய்யய்யயோ நெஞ்சு - ஆடுகளம்
யாரது - காவலன்
நான் ரொம்ப ரொம்ப - சிறுத்தை
கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
என்னமோ ஏதோ, அக நக - கோ
வாடா பின்லேடா - மங்காத்தா
கொலைகாரி, நேற்று இல்லை - தம்பு வெட்டோத்தி சுந்தரம்
நெஞ்சில் நெஞ்சில், நாங்கை - எங்கேயும் காதல்
சந்திக்காத, ஊசெல்லா, நியாலமே - 180
காற்றில் ஈரம் - வெப்பம்
சர சர - வாகை சூட வா
சில்லாக்ஸ் - வேலாயுதம்
காதல் என் காதல் - மயக்கம் என்ன
வில்லாதி வில்லன் - ராஜ பாட்டை
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - கழுகு
Kutta - Pyar ka punchnama
Kalaya Nijama - Sri Rama Rajyam

எனவே, இப்படித்தான் எனது 2011 சினிமா வாழ்க்கை கழிந்தது. 2012ல் மேலும் நிறைய ரூபாய்களையும், சக்தியையும் செலவழித்து, படங்கள் பார்த்து மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளிக்கிறேன். இப்போதைக்கு டாடா :)

Monday, January 23, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 3

புது வருஷம் பொறந்து ஒரு மாசம் முடியப்போகுது, இன்னும் என்ன எண்ணிப் பாக்கறதுனு சில பேர் கேட்கலாம். என்ன செய்ய. ஏற்கனவே யோசிச்சு, ஹின்ட்ஸ் வேற எழுதி பதிவுல ஏத்தாம போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அதனால பொறுமையா படிச்சிருங்க. இதுக்கப்பறம் இன்னும் ஒரே ஒரு பதிவுதான். அப்பறம் வழக்கம் போல மொக்கை பதிவுகளை ஆரம்பிக்கறேன்.

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி... முடிவு

கன்னத்தில் குத்துவிட்டால்


நவம்பர் மாசம் விவாசயத்துறை அமைச்சர் சரத் பவார் வாங்கின அறையோட சத்தம் இந்தியா முழுக்க கேட்டுது. ஹர்விந்தர் சிங்னு ஒரு சீக்கிய இளைஞர் அத்தியாவசிய பொருட்களோட விலையேற்றத்துல காண்டாகி, நம்மளை மாதிரி பதிவு மட்டும் போடாம அமைச்சரோட கன்னத்துல ஒரு அறையும் போட்டாரு. 
அடிச்சு முடிச்சிட்டு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு இது என்னோட பதில்னு கையில கத்திய வெச்சிகிட்டே சத்தமும் போட்டாரு. இதுக்கப்பறம் இன்னும் நிறைய பேர் அடி வாங்குவாங்கன்னு நினைச்சேன், ஆனா நடக்கலை. still, கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்துட்டு வராங்கன்னு நினைக்கறேன். மாட்டிக்கமாட்டேன்னா கண்டிப்பா நானும் உதை கொடுக்க தயார் :)


கால்-திண்டாட்டம்


அடுத்த அதிர்ச்சி இண்டோர் நகரத்துலேர்ந்து வந்த செய்தி. அந்த ஊர் கால்பந்தாட்ட வீரர்கள் தங்களோட விளையாட்டுக்கான செலவுகளை பார்த்துக்க, கிரிக்கேட் ஸ்டேடியத்தை சுத்தம் பண்ணாங்களாம். என்ன கருமமோ. இந்த ஒரு செய்தியே, இந்தியால மற்ற விளையாட்டுகளோட நிலைமையையும்,  கிரிக்கேட்டுக்கு நாம தர தேவையில்லாத முக்கியத்துவத்தையும் காட்டிச்சு. தங்களோட கிழிஞ்ச ஷூக்களையும், விளையாட தேவையான பழைய பொருட்களையும் மாத்த இந்த காசு உதவும்னு அந்த வீரர்கள் சொல்லிருக்காங்க. இந்த நிலைமை அந்த மாநிலத்தில மட்டும்தானா இல்லை எல்லா இடத்துலையுமானு தெரியலை. ஒழுங்கா விளையாட தெரிஞ்சதா சொல்லிக்கற கிரிக்கேட்லையும் மரண அடி வாங்கிட்டு இருக்கோம். இதுக்கு செலவழிக்கற பணத்துல கால்வாசிய மத்த விளையாட்டுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி ஐடியாக்களை லட்சம் பேர் சொல்லிருப்பாங்க. என்ன நடந்துச்சு. எல்லாரும் ஒரு அறை கொடுத்தா சரியா வரும்னு நினைக்கறேன். 


குடிவெறி


கொலைவெறி ஹிட்டான கையோட தமன்னாவோட பர்த்டே பார்டில தனுஷ் போதைல பாடின கொலைவெறிக்கும் நல்ல ஹிட்ஸ் வந்துச்சு. கூடவே நல்ல போதைல தமன்னாவும் பூனம் பாஜ்வாவும் இருக்காங்க. வேற யாரெல்லாம் இருந்திருப்பாங்க்ன்னு ஊகிக்க முடியுது. இதை பார்த்த அப்பறம் நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ஒண்ணும் திருந்திடப்போறதில்லைனு நினைக்கறேன். தொடர்ந்து நடிகர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்போம். பாலாபிஷேகம் பண்ணுவோம். கோயில் கட்டுவோம். வாழ்க பாரதம்.

அடுத்த பதிவுல. இன்னும் ரெண்டு மூணு விஷயங்கள்,  2011 பாடல்கள் + படங்களை பத்தி சொல்லிட்டு, இந்த வருட எண்ணிப்பார்த்தேனை முடிச்சிக்கறேன்.. நன்றி :)

Saturday, January 7, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 2

பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி..

ஆயிரம் பித்தலாட்டம் பண்ண அபூர்வ சேனல்

நியூஸ் சேனல்கள் எவ்வளவு தூரம் தரம் இறங்க முடியும்னு (இதுக்கு முன்னாடியும் பெரிய தரம் இருந்ததா தெரியலை) போன வருஷம் மறுபடியும் தெரிஞ்சுது. CNN IBN சேனல், art of living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டில பண்ண தகிடுதத்தம் வெளிய வந்துச்சு. முன்னாடியே எடுத்த பேட்டிய, லைவ்னு சொல்லி, அவர் ஏதோ கேள்விக்கு பதில் சொல்லாம சமாளிக்கறா மாதிரி டெலிகாஸ்ட் பண்ணாங்க. ஆனா, அந்த பேட்டி ஒளிபரப்பான நாளே, அது பொய்னு தெரிய வந்து, வலைமனைல  பல இடங்கள்ள விவாதம் பண்ணாங்க. நிகழ்ச்சிய தொகுத்து வழங்கின சகரிகா கோஸ் (அந்த கோஸ் இல்லை), முதல்ல, இந்த மாதிரி பண்றதெல்லாம் எல்லா சேனல்லயும்  சகஜம்னு சொல்ல, ட்விட்டர்ல மக்கள் சகட்டு மேனிக்கு அவங்களை திட்ட, அப்பறம் வேற வழி இல்லாம, போலியா மன்னிப்பெல்லாம் கேட்டாங்க.  இப்படி ஒரு கேடுகட்ட விஷயத்தை பண்ணிட்டு இன்னும் அந்த சேனல் ஒளிபரப்பாகிட்டுதான் இருக்கு. மக்கள் எங்கயும் பொங்கி எழல. பாதிக்கப்பட்டவங்க யாரும் எந்த வழக்கும் தொடரலை. இன்னும் நிறைய பேர் அந்த சேனலை விசுவாசமா பாத்துட்டுதான் இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சேனல் முன்னாடியே போலியான ட்விட்டர் அக்கவுண்ட்ல ட்வீட் பண்ணி கேவலமா மாட்டிகிட்டாங்க. இது மாதிரியே நிறைய குற்றச்சாட்டு அந்த சேனல் மேல இருக்கு. வாழ்க ஜனநாயகம் #it only happens in india

டின் டின்

சின்ன வயசுல படிச்ச டின் டின் காமிக்ஸ், கார்டூன் நெட்வொர்க்ல வரும்போதே ரொம்ப ஆர்வத்தோட பார்த்த ஆள் நான். அதை ஸ்பீல்பெர்க் படமா எடுக்க போறாருன்னு ரெண்டு வருஷம் முன்னாடி அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே கதை தெரிஞ்சிருந்ததுனால படம் பெருசா சுவாரசியப்படுத்தல. ஆனா, அற்புதமான மேக்கிங். performance capture டெக்னாலஜியோட உச்சத்தை தொட்டிருக்காங்க. முக்கியமா, ஒரே ஷாட்ல வர சேஸிங் சீன். அதுல கொடுத்துருக்கற டீடைலிங். அதுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். அடுத்த பார்ட், டின் டின் ஸீரிஸ்லையே எனக்கு புடிச்ச ரெண்டு கதை. பீட்டர் ஜாக்சன் எடுக்கராராம். அதுக்கும் ஆர்வத்தோட வெய்டிங்.

கொலைவெறி

2010௦ல மாமனாரோட எந்திரன் மாதிரி, 2011ல மாப்பிள்ளையோட கொலைவெறி. ஆடுகளத்தை தவிர சொல்லிக்கறா மாதிரி வேற எந்த படமும் வராத நிலைல (மயக்கம் என்ன லிஸ்ட்ல சேர்க்கலாமா வேணாமானு தெரியலை), இந்தியா மொத்தமும் கொண்டாடற ஸ்டாரா தனுஷ் மாறினதுக்கு ஒரே காரணம்.. இந்த பாட்டை வெச்சு நிறைய case study பண்றதா கூட கேள்விபட்டேன். பாட்டு இப்படி ஆரம்பிச்சா, இப்படிதான் முடியும்னு, ரொம்ப நாளா பாட்டு கேட்கற யார் வேணாலும் சொல்லக்கூடிய predictable டியூன். ஆனா அதுதான் பாட்டோட வெற்றிக்கு காரணம்னு நினைக்கறேன். நிறைய பாராட்டுகளோட, நிறைய குற்றச்சாட்டும் வந்திருக்கு. இந்த பாட்டை பாபுலரைஸ் பண்ண நிறைய காசு செலவழிசாங்க. இவ்வளவு ஹிட்ஸ் வரவேயில்லைன்னு நிறைய சொல்றாங்க. எவ்வளவோ கொடிகள் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண ரா ஒன் படத்தோட சம்மக் சல்லோ பாடல் இவ்வளவு வெற்றி அடையலை. விஷயம் இல்லாம எந்த பாட்டுமே இவ்வளவு தூரம் ரீச் ஆகாதுங்கறது என் கருத்து. தினமும் கொலைவெறி பாடலோட தாக்கத்துல, அட்லீஸ்ட் ரெண்டு வீடியோவாவது யூடியூப்ல யாராவது அப்லோட் பண்றதா சொல்றாங்க. அவ்வளவு பேருக்கும் காசு கொடுத்துருப்பாங்களான்னு தெரியலை.

தற்கொலை


தினமும் நிறைய தற்கொலை செய்திகளை படிக்கறோம். தற்கொலைக்கான காரணத்தை பாத்துட்டு, எதாவது கமெண்ட் பண்ணிட்டு போறோம். ஆனா, அக்டோபர் மாசம் நான் படிச்ச ஒரு தற்கொலை நியூஸ், உண்மையிலேயே சுஜாதா கதைல வரா மாதிரி இருந்துது. கோவால, ஐ.டில வேலை செய்யற, லட்சக்கணக்குல சம்பாதிக்கற புருஷன் பொண்டாட்டி, ஆனந்த், தீபா தூக்குல தொங்கிட்டாங்க. தற்கொலைக்கு முன்னாடி ஒரு லெட்டர் வேற எழுதி வெச்சிருக்காங்க. அதுல “ நாங்க எங்க வாழ்க்கைய பரிபூரணமா வாழ்ந்துட்டோம். உலகம் முழுக்க சுத்தியாச்சு. பல இடங்களை பாத்தாச்சு. நாங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிச்சாச்சு. எங்க உயிர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற தத்துவத்துல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு தூரம் வாழ உரிமை இருக்கோ, அதே அளவு சாகவும் எங்களுக்கு உரிமை இருக்கு”னு எழுதி வெச்சிருக்காங்க. படிக்கும்போதே எனக்கு ஒரு அமானுஷ்ய ஃபீல் இருந்துச்சு. இதொட, அவங்களோட இறுதி சடங்குக்கு பணமும். அவங்களோட சொத்துக்கள் யார் யாருக்கு போகனும்னும், தெளிவா, கைபட எழுதி வெச்சிட்டு செத்துருக்காங்க. இந்த தற்கொலைய விட, இந்த காரணம்தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ பதிவு போடற வரைக்கும் பாதிச்சிருக்குனா பாருங்களேன். எதனால இந்த மாதிரி எண்ணங்கள் வருதுனு நினைக்கறீங்க?? கமென்ட்ல எழுதுங்க. அதை பத்தி தனியா வேற பதிவுல பேசலாம்.

தொடரும்....

Wednesday, January 4, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 1


வருஷக் கடைசில பதிவு போடறேன்னு சொன்னது வழக்கம் போல லேட் ஆனதுக்கு வழக்கம் போல மன்னிக்கனும். போன வருஷத்தை எண்ணிப் பார்த்ததுல, சில விஷயங்கள் நல்லதாவும், பல விஷயங்கள் கெட்டதாவும் நடந்திருக்கு. கெட்ட விஷயங்களை வாழ்க்கைப் பாடமா எடுத்துகிட்டேன். வேற என்ன பண்றது. இப்போ, போன வருஷம் நடந்து, பதிவு போட முடியாம போன சில விஷயங்களைப் பத்தி கடகடன்னு சுருக்கமா சொல்லிடறேன். அதை நீங்க விரிவா படிச்சு தெளிவாய்டுங்க :)

பவர் 

கரென்ட் கட் பிரச்னை பெருசாகி அதுவும் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமா இருந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா, தொடர்ந்து பல இடங்கள்ள பவர் கட் தொடர்ந்துட்டேதான் இருக்கு. என் நண்பர்கள் பல பேர் புலம்பிட்டே இருக்காங்க. இதனால அவங்களோட முக்கியமான வேலைகளும் கெட்டு போறதா பீல் பண்றாங்க. இருந்தாலும் வழக்கம் போல மக்கள் சுரணை இழந்து அதை தட்டி கேட்க மறந்துட்டாங்க. அடுத்த எலெக்ஷன்ல பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்களோ என்னமோ (ஆனாலும் உள்ளாட்சி தேர்தல்ல இவங்களேதான் வின் பண்ணாங்க). யார் செஞ்ச புண்ணியமோ தெரியலை, என் ஏரியால கரென்ட் கட் ஆகறதே இல்லை. (நான்  திருவல்லிக்கேணி வாசி). அதே மாதிரி இந்த லைப்ரரிய மாத்தற திட்டமும் ஏகோபித்த எதிர்ப்ப சம்பாதிச்சிருக்கு. மெட்ரோ ரயிலை மோனோ ரயில்னு வேற மாத்திட்டாங்களாம். இவங்களுக்கு யார் இப்டியெல்லாம் யோசிக்க சொல்லிதராங்கன்னு தெரியலை.

BBC பறந்து போச்சு 

என் BBC வேலையை விட்டதைப் பத்தி --> இங்க ரெண்டாவது பத்தில  எழுதிருந்தேன். இன்னமும் சரியான வேலை கெடைக்கல. மத்த துறைகள்ல இருக்கற ஒரு முக்கியமான விஷயம் மீடியால இல்லைன்னு படுது. வேற எங்கயுமே, அந்த கம்பெனி HR ஆளை நேரடியா காண்டாக்ட் பண்ணி வேலை கேட்கலாம். அவங்களும் பொறுப்பா இருக்கு இல்லைன்னு பதில் சொல்றாங்க. ஆனா, மீடியால மட்டும் HRனு ஒரு ஆள் இருந்தாலும், நாம அனுப்பற resume ஒழுங்கா போய் சேருதானு தெரியலை. கால் பண்ணாலும் ஒழுங்கான பதில் வரதில்லை. முக்கியமா ஏதாவது ஒரு வடிவத்துல சிபாரிசு தேவைப்படுது. கடுப்பா இருக்கு. சும்மா இருக்ககூடாதுன்னு பல வேலைகளை செஞ்சிட்டுதான் இருக்கேன். பார்க்கலாம், நமக்குன்னு ஒரு வேலை இல்லாமலா போய்டும்.

Revolution  2020

இந்த வருஷம் வெளியான சேட்டன் (மலையாளி இல்லை) பகத்தோட இந்த நாவல், ப்ரீ ஆர்டர் பண்ணி, ரிலீசுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்து சேர, ஒரே மூச்சுல படிச்சேன். அவரோட க்ளீஷே நிறைய இருந்துது.  ஒவ்வொரு கேரக்டரோட உணர்வுகளை கரெக்டா சொல்லிருந்தாலும், ஒரு கட்டத்துல கதை எழுத்தாளரோட கண்ட்ரோல்ல இல்லையோன்னு தோண ஆரம்பிச்சுது. க்ளைமாக்ஸ்ல அது conform ஆச்சு. ஆனாலும் சேட்டனுக்கு மற்றுமொரு வெற்றி.

Facebook Page
என்ன கருமத்துக்கெல்லாம் page ஆரம்பிக்கறதுன்னு இல்லையா. இந்த page பாருங்க. https://www.facebook.com/Tamilanchors . என்ன ஒரு மகா வெட்டி வேலை. சாதாரண போட்டோ இல்லமா, டிவில வரதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வேற போடறாங்க. இதை சில பேர் ஷேர் வேற பண்ணாங்க. கலி முத்திடுச்சுனு தெரிஞ்சுது.

நானும் ஜட்ஜ் ஆனேன்


காலேஜ்ல நடந்த பாட்டு போட்டியோட முதல் ரவுண்டுக்கு என்னை நாட்டமையா வர சொல்லி என் ஜூனியர்ஸ் கூப்டாங்க. முதல்ல தயக்கமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன். அங்க போன அப்பறம், இன்னும் பல பேர் என்னை ஞாபகம் வெச்சிருக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. வழக்கம் போல பல ப்ளாஷ் பேக் நிகழ்வுகள் வந்து மனசு கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துது. என்ன செய்ய. its all fate.

தொடரும்.....

Friday, December 23, 2011

ஒண்ணுமே புரியலை


சத்தியமா என்ன நடக்குதுன்னு தெரியலை.
நிறைய ஐடியாக்கள் இருந்தும் ஒரு கோர்வையா உட்கார்ந்து பதிவு போட முடியலை.
அடிக்கடி என் ப்ளாக் பக்கம் வந்து ஏமாறும் ஒரு சில நண்பர்களுக்கு என்னோட சிரம் தாழ்ந்த SORRY.
மன்னிச்சிடுங்க. கூடிய சீக்கரத்துல முன்னாடி மாதிரி FORM வந்துடும்னு நம்பறேன்.
நன்றி. விரைவில் சந்திப்போம்..


p.s. - வழக்கம் போல இந்த வருடக் கடைசியிலும் எண்ணிப் பார்த்தேன் பதிவுகள் எழுத்தப்படும். மீண்டும் நன்றி :)

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - ப.வி


கமல்ஹாசனோட நிறைய படங்கள்ல, அவருக்கு மட்டும் நல்ல பேரு கிடைக்கும். “படம் மொக்கை, ஆனா கமல் பின்னிட்டாரு”னு சொல்லுவாங்க. சூர்யாவும் அப்படிப்பட்ட ஹீரோவாகிட்டாருன்னு நினைக்கறேன். ஆனா, அவரும் கவர்ச்சி நடிகை மாதிரி அடிக்கடி உடம்பை காமிக்கறதை குறைச்சிகிட்டா நல்லா இருக்கும். சூர்யா மாதிரியே படத்துல தென்படற ஒரு ப்ளஸ், வில்லன் ஜானி. மிரட்டிருக்காரு. ஷ்ருதி ஹாசன், முதல் படத்துக்கு பரவாயில்லை. ஆனா மேக்கப் ஜாஸ்தி + தமிழ் கொலை. ரொம்ப சுமாரான மியூசிக், பிண்ணனி இசை, பழக்கப்பட்ட எடிட்டிங்னு கொஞ்சம் tiring.

தமிழன் தமிழன்னு சொல்லியே படத்தை ஓட வெச்சிடலாம்னு நினைச்சாரு போல நம்ம முருகதாஸ். சண்டை காட்சிகள் மகா நீளம். நோக்கு வர்மம்னு சொல்லி சொல்லி, ஒரு கட்டத்துக்கு மேல, யாரு நோக்கு வர்மம்ல திடீர்னு வில்லனா மாறி அடிக்க ஆரம்பிப்பாங்களோன்னு த்ரில்லிங்கா இருக்கு. அழுத்தமில்லாத திரைக்கதைல ஒன்றவே முடியலை. தமிழரோட முயற்சிய குறை சொல்றாங்க, உழைப்ப மதிக்கத் தெரியலை, அது இதுனு பேச்சுக்களும் வரும். அதுக்காக பயந்துகிட்டு படம் சூப்பர்னு சொல்லிடாதீங்க. தமிழர்களை பெருமை படுத்துற எண்ணத்துல இந்தப் படத்தை முருகதாஸ் எடுத்திருக்கலாம். ஆனா சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுவாரசியமா, அழுத்தமா சொல்லிருக்கலாம். முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனா Strictly average - இதை தவிர இந்தப் படத்தை பத்தி சொல்ல ஒண்ணும் இல்லை.

பி.கு - தெலுங்குல என்னானு டயலாக் பேசுவாங்க?? ஆந்திராலேர்ந்துதான் ஆவக்காய் போச்சுன்னா??

Sunday, October 23, 2011

மற்றும் பல - 23/10/2011

வழக்கம் போல அப்படியே சோம்பேறித்தனத்துல இங்க எதுவும் எழுதாம விட்டுட்டேன். என்னோட பழைய பதிவுகளை கொஞ்சம் பார்க்கலாம்னு நினைச்சா, கடைசியா எழுதின 10 பதிவுகளுமே விமர்சனங்களாவே இருக்கு. சங்கடமா போச்சு. இனிமேலாவது ஒழுங்கா அப்டேட் பண்ண முயற்சி பண்ணனும். தட்டிக் கேட்க ஆள் இல்லாம போச்சுல. அதான்.. :)
-----------------------------------------------------------------------
பிபிசி வேலையை விட்டுட்டேன். என் மேல அக்கறை இருக்கற எல்லாரும் என்னை திட்டியாச்சு. உங்க அக்கறைக்கு நன்றி மக்களே :) ஆனா என்னை புரிஞ்சிகிட்ட யாரும் எதுவும் சொல்லல. அதுவே சந்தோஷமா இருக்கு. பிபிசில வேலை செஞ்ச இந்த ஒரு வருஷம் எப்படி போச்சுனே தெரியலை. எக்கச்சக்க நண்பர்கள், புரிஞ்சிகிட்ட விஷயங்கள், புதுப்புது அனுபவங்கள்னு மிக வேகமான ஒரு வருஷம். நான் எங்கெல்லாம் போக முடியாதுன்னு நினைச்சனோ, யாரையெல்லாம் பார்க்க முடியாதுன்னு நினைச்சனோ, எல்லாமே நடந்துச்சு. (என்னோட facebook ஆல்பம பார்த்தா உங்களுக்கு புரியும் :P) சம்பந்தமே இல்லாத இடங்களுக்கும் போனேன். இந்த முதல் வேலை அனுபவம் கண்டிப்பா என்னோட எல்லா எதிர்கால வேலைகள்லையும் எதிரொலிக்கும்னு நம்பறேன். நன்றி டு பிபிசி :) அடுத்து என்னான்னு கேட்காதீங்க. இன்னும் யோசிச்சிக்கிட்டுதான் இருக்கேன் :) 
-----------------------------------------------------------------------
ராக் ஸ்டார் மற்றும் ரா ஒன் படத்தோட பாடல்கள் கொஞ்சம் ஈர்த்திருக்கு.
முதல்ல
, ராக் ஸ்டார்..... 
படத்துக்கு, ரஹ்மான், சூப்பர்லேடிவா இசை அமைச்சிருக்கர்தா இசை விமர்சகர்கள் நிறைய பேர் சொல்றாங்க. பாடல்கள் நல்லா இருந்தாலும் நம்ம நேட்டிவிட்டி இருந்தாதான ஓட்டும். அது எனக்கு கஷ்டம். டில்லி 6க்கு அப்பறம், ஹிந்தில ரஹ்மானோட பெஸ்ட்டுன்னு சில பேர் சொல்றாங்க. நமக்கு ஒண்ணும் புரியல. என்னதான் இருந்தாலும் ரஹ்மானுக்கு மற்றுமொரு வெற்றிப் படம்.
அடுத்து ரா ஒன் பத்தி சொல்லனும்னா, சம்மக் சல்லோ பாடல் மட்டுமே நிறைய பேரை கவனிக்க வெச்சிருக்கு. அதோட மேக்கிங் வீடியோ பாத்திருப்பீங்க. ஏகான் ஹிந்தி பாடினது ஆச்சர்யம்னா, பாடல்ல தமிழ் வரிகள் இருக்கறது அடுத்த ஆச்சர்யம். ஆனா படத்தோட ட்ரைலர பார்க்கும்போது ஆச்சரியப்பட முடியலை. ஷாருக் ஒவ்வொரு தெரு முனைல நின்னும் படத்துக்கு பிரமோஷன் பண்றாரு. படம் எப்படி இருக்குனு பார்க்கலாம். தலைவர் வேற வராரே.
-----------------------------------------------------------------------
குறுஞ்செய்தி என்கின்ற எஸ்.எம்.எஸ்க்கு கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க மாண்புமிகு ட்ராய். அதுக்கு அவங்க சொல்ற காரணம், டெலி மார்க்கெட்டிங் ஆளுங்களை கட்டுப்படுத்தவாம். அதுக்கு எதுக்கு நம்ம மடில கை வெக்கணும்னு தெரியலைநிறைய பேர் இந்தக் கட்டுப்பாடை ஆதரிக்கறாங்க. தேவையில்லாத  எஸ்.எம்.எஸ் வராதுன்னு. இவ்வளவு கோடி மக்களை கட்டுப்படுத்த முடியரவனுக்கு, நூறு டெலி மார்க்கெட்டிங் கம்பெனிகளை கட்டுப்படுத்த முடியாதா? இல்லை வேற ஏதாவது காரணங்களாநான் காசு குடுக்கறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு  எஸ்.எம்.எஸ் அனுப்பறதுன்னு நான் முடிவு பண்ணிக்கறேன். இவனுங்க யாரு அதை கட்டுப்படுத்த? இன்னைக்கு இதுல கட்டுப்படுத்தரவனுங்க, நாளைக்கு "நீ இவ்ளோதான் பேசணும், இதுக்கு மேல பேசகூடாது"னு கட்டுப்படுத்தினா?? இதுல ஆச்சர்யம் என்னான்னா, இதுக்கு எதிரா, காதுல விழறா மாதிரி எந்தக் குரலும் வரலை. அவ்வளவு கூடவா யோசிக்க திராணி இல்லாம ஆகிட்டோம்? 
-----------------------------------------------------------------------
ரெண்டு பாட்டுக்காகவே சதுரங்கம் படம் பார்த்தேன். கிளைமேக்சை தவிர படம் சுவாரசியமாத்தான் இருந்துச்சு. சோனியா அகர்வாலைப் பத்தி நிறைய கமெண்ட்ஸ் சொல்லிட்டே படம் பார்த்தோம் நானும் என் நண்பனும். நல்ல வேளை சத்தமா சொல்லலை. பின்னாடி ரோல சோனியாவே உட்கார்ந்திருந்தாங்க. படம் முடிஞ்சா பின்னாடி, வெளிய கரு பழனியப்பன் நின்னுகிட்டு இருந்தாரு. போய் என்ன பேசறதுன்னு தெரியலை. அப்படியே வந்துட்டேன். 
-----------------------------------------------------------------------
முரண் படமும் நல்லா இருந்துச்சு. ஆனா கொஞ்சம் யோசிச்சா படத்தோட எல்லா டிவிஸ்டயும் பத்தாம் கிளாஸ் பையனே / பொண்ணே (நான் ஆணாதிக்கவாதி இல்லீங்கோ :P ) கண்டுபிடிக்கறா மாதிரி இருந்துச்சு. பிரசன்னா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. சேரனுக்கு, எதையோ முழுங்கிட்டு வயித்துல சங்கடம் பண்றா மாதிரியான அதே லுக்கை, படம் முழுக்க மெய்ன்டெய்ன் பண்ணாரு. அவருக்கு ஏத்த ரோல். ஆனா, படம் நல்லா ஓடலைன்னு  கேள்விப்பட்டேன். pity. பாட்டு எல்லாம் மொக்கை.