Sunday, May 1, 2011

வானம் - ப.வி

படத்தோட டைட்டிலை படிக்கும்போதே, நிறைய பேர் ’வேணாம்’னுதான் படிக்கறாங்க. அவ்வளவு மோசமான படமில்லை. ஆனா சூப்பர் படமும் இல்லை. ஒரே நேரத்துல நாலு பேரலல் கதைகளை சொல்றது தமிழ் சினிமாவுக்கு புதுசுதான், ஆனாலும் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்து சுவாரசியமா சொல்லிருக்கலாம். இடைவேளை வரை, என்ன சொல்லவராங்கன்னே பிடிபடலை. அனுஷ்காவோட கதைய, தெலுங்குலேர்ந்து அப்படியே டப்பிருக்காங்க, கொஞ்சம் கூட ஒட்டலை. நல்லா இருந்த பாடல்களோட காட்சிகளும், சொதப்பல் ரகம்தான். சில பாடல்கள் தேவையே இல்லை.

படத்துல ஹைலைட், வழக்கம்போல சந்தானம் காமெடி, முக்கியமா சில இடங்கள்ல சிம்புவோட நடிப்பு, சரண்யா + அந்த தாத்தா நடிப்பு. ஒரு மத-நல்லிணக்க மெசேஜ சுத்தி கதையா, இல்லை, நாலு கதைக்கும் ஒரே கிளைமாக்ஸா இப்படி ஒரு மெசேஜ் சொல்லி முடிக்க வந்தாங்களான்னு, பத்து கெட்டெப் தசாவதாரம் மாதிரி ஒண்ணும் புரியலை. மெசேஜும், சுதந்திர தினத்துக்கு போடற ஸ்கூல் டிராமா மாதிரி இருந்துச்சு. ரொம்ப மேலோட்டமான, அரைவேக்காட்டுத்தனமான மெசேஜ். யாருமே பார்க்ககூடாத, மொக்கை படமில்லை. பட், இன்னும் கூட நல்லா இருந்திருக்கலாம். முடிஞ்சா பாருங்க.

பி.கு - போன பதிவுல, தேவி தியேட்டர்ல சவுண்டு நல்லா இல்லைனு எழுதிருந்தேன். ஆனா, வானம் படம் பாரடைஸ்ல பார்த்தேன். சவுண்டு வழக்கம் போல சூப்பர். கோ படத்துல தான் ஏதோ பிரச்சனையோ??

5 comments:

Unknown said...

eppadiyo enna kapathita.. illna nalaiku intha veenam oh! vaanam paaka poi irupen..

கா.கி said...

உஙகளுக்கு ஒரு வேளை பிடிக்கலாம். நீங்க ஒரு வித்தியாசமான ஆள் :)

Ramanathan said...

சிம்பு படம்னு கூப்பிட்டாலே நண்பர்கள் யாரும் வர மாடிங்கறாங்க பாஸ்!! அதனால படம் பாக்கற
ஐடியா-வ விட்டுட்டேன் !!!

Unknown said...

nalla review... :) :)

கா.கி said...

@ramanathan - அவ்வளவு மோசம் இல்லை பாஸ், இத்தனைக்கும் இந்த படத்துல சிம்பு கொஞ்சம் அடக்கியே வாசிச்சிருக்காரு..


@tanya
நன்றி, மீண்டும் வருக :)