Sunday, May 8, 2011

எங்கேயும் காதல் - ப.வி

சனிக்கிழமை நைட் படத்துக்கு புக் பண்ணிருந்தேன். அதனால, வெள்ளிக்கிழமைலேர்ந்தே படத்துக்கு பாதகமான விமர்சனம் வர ஆரம்பிச்சு, எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டுதான் படத்துக்கு போனேன். சும்மா சொல்லகூடாது, செதுக்கு செதுக்கனு செதுக்கிருக்காரு டைரக்டர் பிரபுதேவா. கதையும் காணோம், திரைக்கதையும் காணோம். படத்துல வர சுமன் மாதிரி, டிடெக்டிவ் வெச்சு தேடினாலும், திரைக்கதைங்கற அம்சம் கிடைக்காது. ரெண்டு மணி நேர மியூசிக் வீடியோல, பாட்டுக்கு நடுவுல சீன் வெச்சா மாதிரி படா டமாஷு.

ஜெயம் ரவி, டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காரு. நல்லா டான்ஸ் ஆடறாரு. ஹன்ஸிகா ஒரு தினுசா இருக்காங்க. கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் வருது. ஆனா சாதரணமா நடிக்க வரலை. சுமன் ஒகே. ராஜூ சுந்தரம் கடுப்பேத்தறாரு. படத்துல ப்ளஸ், படம் ரெண்டே மணி நேரம், அமர்க்களமான கேமரா, லொகேஷன், நாங்கை பாட்டு படமாக்கப்பட்ட விதம். வெள்ளைக்காரங்க தமிழ்ல் லிப் மூவ்மெண்ட் கொடுக்கும்போது, புல்லரிக்குது. ஹன்ஸிகாவுக்கே நிறைய இடங்கள்ல sync ஆகலை. என்னடா கடைசியா பார்த்த ரெண்டு படமும் மொக்கையா இல்லையேனு, நானும் ரமேஷ் அண்ணாவும், எங்களுக்கே கண்ணு வெச்சுகிட்டதுனாலதான், இந்தப் படம் இப்படினு நினைக்கறேன். எங்கேயும் காதல், வெங்காயம் மாதிரி. உரிக்க உரிக்க ஒண்ணும் இல்லை.
நன்றி ரமேஷ் அண்ணா...

6 comments:

Unknown said...

oh... waited for ur review.. neeyum negative view solltien.. so padam paakama poitome nu nenaikamaten... :) Nandri :)

கா.கி said...

welcome :)

shortfilmindia.com said...

nice

சுதா SJ said...

படத்தில் பாடலும் ஆடலும் மட்டும் நல்ல இருக்கு பாஸ்,

கதைதான் இல்லை அதுசரி டான்மாஸ்ர்ட்ட கதைய எதிர் பாக்க முடியுமா..??

Thanigaivel said...

நானும் அனுபவபட்டுடேன் ..... சன் பிச்சர்ஸ் படம் வாங்கினாலே இப்படி தான் இருக்கும் போல

கா.கி said...

@short

thank you :)


@துஷ்யந்தன்
இவரு தெலுங்குலயும் இப்படிதான் மொக்கை கொடுத்தாரு, பவுர்ணமினு ஒரு படம் எடுத்து..


@தணிகை
எல்லாம் நம்ம தலையெழுத்து பாஸ் :(