கொஞ்சம் குழப்பமான, யோசிக்க வைக்கற படங்கள்னா எனக்கு ஆர்வம் ஜாஸ்தியாகிடும். இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும்போதே, படத்தை பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். எதிர்பார்த்த அளவு சூப்பரா இல்லைனாலும், கொடுத்த காசுக்கு மோசமில்லாம இருந்துச்சு.
ஹீரோ ஸ்டீவன்ஸ் ஒரு ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, அவருக்கு முன்னாடி ஒரு மிடில் ஏஜ் பிகர் உட்கார்ந்துகிட்டு “தாங்கஸ் ஷான், உன் அட்வைஸ நான் எடுத்துகிட்டேன்”னு சொல்றா, ஆனா ஹீரோவுக்கு, அந்த பொண்ணு யாரு, தான் எப்படி இங்க வந்தோம்னு ஒண்ணும் ஞாபகம் இல்லை. குழப்பத்துல, அந்த ட்ரைன் சூழல்ல நடக்கற சில விஷயங்கள நோட்டம் விட்டுட்டே பாத்ரூம் போறாரு. கண்ணாடில வேற உருவம் தெரியுது. மறுபடியும் மண்டை காஞ்சு போய் வெளிய வராரு, அந்த பிகர் நிக்குது, பக்கத்து ட்ராக்ல இன்னொரு ட்ரைன் போகுது, பாம் வெடிச்சு, ரெண்டு ட்ரைனும் காலி. இப்போ மறுபடியும் ஹீரோ ஸ்டீவன்ஸ் அதே ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, எல்லா விஷயமும் மறுபடி நடக்குது. இதெல்லாம் என்னா மேட்டர்னு குழப்பத்தோட ஹீரோ கண்டுபிடிக்கறதை, சைன்ஸ் ஃபிக்ஷன் கலந்து பதில் சொல்லிருக்காங்க.
படம், கிராபிக்ஸ், எடிட்டிங், காமெரானு டெக்னிக்கலாவும் சூப்பர், நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. நம்ம ரஸல் பீட்டர்ஸும் ஒரு சின்ன ரோல் பண்ணிருக்காரு. ஹீரோயின் கொஞ்சம் முத்தின கேஸ்தான், இருந்தாலும் இந்த படத்துக்கு பரவாயில்லை. ஹீரோ ஜேக், ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு விஷயம் தெரியவந்து தெளிவாகறதை, நல்லா வேறுபடுத்தி நடிச்சிருக்காரு. இந்த மாதிரி ஜானர் படங்கள் விரும்பறவங்க, கண்டிப்பா பார்க்கலாம். இன்ஸெப்ஷன் அளவு இல்லைனாலும், நல்லாதான் இருக்கு. படம் புரியாதவங்க பின்னூட்டத்துல கேளுங்க, விளக்கறேன் :)

5 comments:
நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போது படம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது... ஆனால் ஒன்றும் புரியாது என்பது மட்டும் நன்றாக புரிகிறது...
நான் ஏதோ சாப்ட்வேர் கம்பெனி பற்றிய படம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்...
@பிலாஸபி
புரியாத அளவுக்கு ஒண்ணும் இல்லை பாஸ். கண்டிப்பா பாருங்க.
wow... a nice review.. was waiting for one like diz.... nandri :) & un review oda 2nd para padikum pothey padampaathey aaganumnu decided.. thank u :P
@sri
நன்றி :)
Post a Comment