Wednesday, May 11, 2011

அழகர்சாமியின் குதிரை - ப.வி

சுசீந்திரனுக்கு ஹாட் ட்ரிக். படம் எப்படி இருக்குனு சொல்லனும்னா, இந்த வார்த்தைய சொன்னா போதும். அவ்வளவு அழகான, எளிமையான, அமைதியான படம். இரண்டே மணி நேரப் படத்துல இருக்கற பாத்திரங்கள் எல்லாமே மனசுல பதியுது. படம் மொத்தமும் தூவினா மாதிரி, காமெடி கூடவே இருக்கு. எல்லா காட்சியுமே ரொம்ப புதுசா, திரைக்கதை யூகிக்கமுடியாத மாதிரி ஒரு படம். அளவான வசனங்கள், படம் பார்த்தவுடனே, ஒரு பாஸிடிவ் எனர்ஜிய நம்மால உணர முடியும். வழக்கம் போல ராஜா பிண்ணனில பின்னிட்டாரு. அந்த டைட்டிலோட வர இசைய மிஸ் பண்ணிடாதீங்க. ஆனா சில இடங்கள்ள பிண்ணனி இசை கொஞ்சம் பொருந்தல. பூவை கேளு பாட்டும் அவசியமானதா தெரியலை.


குறைனு என்ன சொல்றது, படம் கொஞ்சம் ஸ்லோனு சொல்லலாம், ஆனா அதுதான் படத்துக்கு அழகே. தேவையில்லாத அந்த ஒரு பாட்டு ஒரு குறை. படத்தோட ஆரம்பத்துலயே, படத்தோட காலத்தை சரியா உணர்த்தாம  இருக்கறதும் ஒரு மைனஸ் தான். இதுக்கு மேல எதுவும் தோணலை.
அட்டகாசமான லொகேஷன்ஸ், அதுக்கேத்தா மாதிரி கேமரா, சூப்பரான நடிகர்கள் தேர்வு, ஒவர் ஆக்‌ஷன் பண்ணாத ஆக்டர்ஸ், தோய்வில்லாத ஸ்கிரீன்ப்ளேனு ஒரு ஆர்ப்பாட்டமில்லாத படம். ரிலாக்ஸ்டா போய், என்ஜாய் பண்ணிட்டு வாங்க. கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.


சொல்ல மறந்துட்டனே, குதிரையும் நல்லா நடிச்சிருக்கு!!!!

3 comments:

சுதா SJ said...

கா கி அண்ணா சொன்னா சரியாத்தான் இருக்கும்.. :)

கா.கி said...

அடடா, என்னை அண்ணானு சொல்லி உங்க வயசை குறைக்க முயற்சி பண்றீங்களா?? மக்கள் ஏமாற மாட்டாங்க :)

Unknown said...

சரி, படம் பாத்துட்டு வந்து சொல்றேன்..