உங்களில் எவ்வளவு பேர் கெட்ட வார்த்தை பேசுவீங்க? நான் பேசுவேன். அதுவும் கோபம் வந்தா, நானேகூட காது கொடுத்து கேட்க முடியாத படி திட்டுவேன். இருந்தும், ஒரு சென்னை தமிழனா, நான் என் கடமைய சரியா செய்யறேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. பொதுவா சினிமால கெட்ட வார்த்தைகள் வந்தா அந்த "டோயங்" சத்தம்தான் நிறைய வரும்.
நம்மூரு சினிமாக்கள், ஆபாசத்துலையும், கெட்டவார்த்தைகள்ளையும் மட்டுமே உலகத்தரத்த அடைஞ்சிகிட்டு இருக்கு. ஆனா, ஒரு சில நல்ல படங்கள்ல கெட்ட வார்த்தைகள் வரும்போதும் "டோயங்" சத்தம் வந்து எரிச்சல் குடுக்கும். சென்சார் செய்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. ஏதோ மக்கள், இதனால மட்டுமே கெட்டு போய்டுவாங்க, இல்லைனா அவங்க ரொம்ப அப்பாவினு நினைப்பாங்க போல. U படத்துல சென்சார் செய்யறது ஓகே, ஆனா A படத்துலையுமா??
ஹாலிவுட்ல, படங்களோட certification ஏத்தா மாதிரி அதோட contents இருக்கும். அங்கயும் சில சமயங்கள்ல, கெட்ட வார்த்தைகள் மாட்டுவதுண்டு. இங்க நாம எப்பவும் கேட்கும்/சொல்ற ஒ** வார்த்தை மாதிரி, அங்க F*** வார்த்தை. படங்கள்ல மட்டும் இல்லாம, பாடல்கள், புத்தகங்கள் எல்லதுலயுமே அந்த வார்த்தைய முடிஞ்ச வரை சென்சார் பண்ணிருவாங்க. ஒரு முறை நான் லோக்கல் trainla வரும்போது கேட்ட conversation, சரியான காமெடி. ஒரு பையன் போன்ல யார பத்தியோ இங்கிலீஷ் + தமிழ்ல மாறி மாறி பேசுறான். இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னானா, அவன் கெட்ட வார்த்தைய பேச மட்டுமே தமிழ் use பண்ணான்.
அவன் பேசுனதுல ஒரு சில வரிகள் (கரெக்டா புரிஞ்சிகிட்டு படிங்க) ,
"மச்சான், i was comin da, ஒ** he didnt notice. ஒ** i was lik fell down. ஒ** it was all of A sudden. ஒ** i didnt expect. ok மச்சான், where are U now.... ஒ** no, wait in this side, ஒ**................................". இப்படியாக ஒ** ஒ**னு பேசிகிட்டே இருந்தான். தமிழ் எப்படியெல்லாம் வளருது பாருங்க. இங்க மட்டும் இல்ல, ஹிந்தி பேசுற பல பேர், கெட்ட வார்த்தைய மட்டும் தமிழ்ல பேசி கேட்டிருக்கேன். அது ஏன்னு தெரியல. ஒரு வேலை, தமிழ் ரொம்ப expressive மொழியா இருப்பதனால இருக்கும். ஆனா ஒரு விஷயம், மந்திரம் சொல்றதுனால எப்படி உடம்புல positive vibes வருமோ, அது மாதிரி, கெட்ட வார்த்தைகள் பேசுனா நம்ம உடம்புல மட்டும் இல்ல, நம்மள சுற்றி இருக்குற எல்லார் உடம்புலயும், மனசுலயும் negative vibes வரும்.
எனவே, கெட்ட வார்த்தை பேசும் அன்பர்கள், அதனை குறைக்கவோ, ஒழிக்கவோ பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நானும் கடுமையான முயற்சி செய்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ் (ஒ** எப்படி நம்ம தமிழ் பற்று)
p.s. எந்த இங்கிலீஷ் படத்துல, maximum f word வருதுன்னு யாருக்காவது தெரியுமா???