5 நாட்களில், தினம், இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உட்கார்ந்து, எழுதினேன். யார் எழுதும் டைரியையும், ஏதாவது ஒரு காலத்தில், வேறொருவர் படிப்பார் என்பது திண்ணம். என்னுடையதும் அப்படியே. ஆனால், முடிந்த வரை, எனக்கென இருக்கும் ஞாபகங்களை, எண்ணங்களை, (i.e. exclusive thoughts and memories of mine) யாரிடமும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. So, நான் மொத்தமாக எதையும் எழுதப் போவதில்லை. இங்கே, என் டைரியின் முதல் பக்கத்தை மட்டும் கொடுக்கிறேன். படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று (உண்மையை மட்டும்) சொல்லுங்கள். முக்கியமான விஷயம், இதற்கு மேல் என் டைரியிலிருந்து வேறெந்த பக்கங்களும், ப்ளோகில் வராது...
-------------------------------------------------------------------------------------------------
23 ஏப்ரல், 00:18am
"இது, கடந்த நான்கு மாதங்களாக (ஜனவரி 09 - ஏப்ரல் 09), என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றிய, என் நினைவில் நின்ற, நான் இனி மறக்க முடியாத, மறக்கக் கூடாத, மறக்க விரும்பாத சம்பவங்களைப் பற்றியவை. இவ்வளவு நாள், டைரி எழுதும் பழக்கம் எனக்கில்லை. இரண்டு முறை முயற்சித்து, சோம்பேறித்தனத்தினாலும், பயத்தினாலும், தொடர்ந்து எழுத முடியாமல் போனது. கடந்த ஒரு வாரமாகவே, டைரி எழுதும்படி என் instinct சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனாலேயே, இந்த அகால வேளையில், நிறைய யோசித்ததின் விளைவாகவும், பழைய நினைவுகளின் தொல்லைகளாலும், எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒருவேளை, இதை நானல்லாது, வேறு யாரேனும் படித்துக் கொண்டிருப்பீர்களேயானால், தயவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். மற்றவர்களது டைரியை படிக்கும் ஆர்வம் எத்தகையது என்பதை நானும் அறிவேன். நான் இங்கே கேட்டுக் கொண்டாலும், அலட்சியம் செய்துவிட்டுப் படிக்கத் தொடர்வீர்கள் எனவும் தெரியும். அப்படிப் பட்டவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இனி வரும் பக்கங்களை படித்து விட்டு, என் மேல் உங்களுக்கிருந்த அபிப்பிராயம், நல்லதோ கெட்டதோ, மாறினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இதை டைரியை நீங்கள் படித்துவிட்டது எனக்கு தெரிந்தாலும், உங்களிடம் எப்போதும் பழகுவது போலவே பழகுவேன். முடிந்தவரை, படித்ததை, வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------
இதற்குப் பிறகே, விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய எழுத்து நடை, ப்ளோகின் உதவியால், சிறிது முன்னேறி இருப்பதாக, எழுதி முடித்ததைப், படித்துப் பார்த்ததில் தெரிந்தது. அதை நானே சொல்லிக் கொள்ளக் கூடாதல்லவா, அதனாலேயே, ஒரு சோறு பதமாக, முதல் பக்கம் இங்கே. நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். நன்றி...