வழக்கம் போல, படம் செம்ம மொக்கை. அதாவது நீங்க எவ்வளவு மொக்கைனு நினைக்கறீங்களோ, அத விட மொக்கை. வழக்கம் போல, நானும் அண்ணாவும் அடுத்தடுத்து வர காட்சிகள யூகிச்சிட்டே வரோம், அதே மாதிரி வந்துகினே இருக்கு. நாங்களும் எவ்வளவு தான் யூகிக்கறது. ஒரு கட்டத்துல, நாங்க சொல்றது எல்லாமே வந்ததால, போர் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. ஹீரோ முகத்த தியேட்டர்ல அவ்வளவு பெரிய ஸ்க்ரீன்ல பார்க்க முடியல. ஹீரோயினயாவது கொஞ்சம் கமர்ஷியலா காமிச்சிருக்கலாம், அவங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க. அதனால, அதுவும் தேறலை. அவங்க டான்ஸராமா, சங்கமம் விந்தியா கிட்ட கத்துகிட்டாங்கன்னு நினைக்கறேன். இடைவேளைக்கு அப்பறம், நாங்களாகவே சில சீனுக்கு கை தட்டி, சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, "சூப்பரப்பு" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். காமெடி track இருந்ததா வெளிய பேசிக்கறாங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியல.
கிளைமாக்ஸ்ல, ஹீரோ சண்டை போடுறப்போ, எனக்கு பசங்க படம் டயலாக் ஞாபகத்துல வர, நானே சத்தமா "அய்யய்யோ, மாசி கைய முறிக்கிட்டானே, அவனுக்கு கோவம் வந்துருச்சே, இப்ப பல்லக் கடிப்பான் பாரு"னு சத்தமா கமெண்ட் விட்டேன். அந்த ஹீரோவும் அதே மாதிரி செய்யறாரு. ஷப்பா, முடியல. 2.5 மணி நேரம், மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கி வீட்டுக்கு வந்தோம். படம் நல்லா இல்லைன்னு அவங்களுக்கே தெரியும் போல. அதனாலேயே படத்துல அவங்களே "சூப்பரூ"அப்படின்னு ஒரு பாட்டு பாடிக்கறாங்க. சன் டிவிக்கு மட்டும் மற்றொமொரு வெற்றிப் படம். எங்களுக்கு வழக்கம் போல, ஒரு நாள் தூக்கம் + 100 ரூவா காலி. எவ்வளவு மொக்கை படம் வந்தாலும் பார்க்கராணுங்கடா, இவனுங்க ரொம்ப நல்லவங்கனு நீங்க சொல்றது எனக்கு காதுல விழுது. என்ன செய்ய.
மீண்டும், மீண்டு வந்து, அடுத்து ஒரு படத்த பார்த்து, பதிவறேன். வர்ட்டா....
அய்யயோ, ஸாரி, ஸ்டில் மாறிடிச்சு. விடுங்க, எல்லாம் ஒண்ணுதான்.