------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து, மறுபடியும், நான் ரொம்பவே ரசிச்ச, கோவா பத்தி பேச வேண்டியிருக்கு. படம் பார்த்து முடிச்ச உடனே சொன்னேன், வயசான ஆளுங்களுக்கு இந்த படம் பிடிக்காதுன்னு. அதேமாதிரி, பல பதிவர்களுக்கு இந்த படம் பிடிக்கல. என்ன குறைய கண்டாங்கன்னு தெரியலை. படத்தை கண்டபடி கண்டம் பண்ணாங்க. வெங்கட் பிரபு, சவுந்தர்யா காசுல கூத்தடிச்சிருக்காரு, ரெண்டாவது பாதி சரியில்லை, blah blah blah. படம் பார்க்கும்போது எந்த குறையும் தெரியலை. எனக்கு மட்டும்தான் இப்படியான்னு பார்த்தா, என் நண்பர்கள் எல்லாருக்குமே படம் ரொம்ப பிடிச்சிருந்துது. முக்கியமா சில பொண்ணுங்களுக்கு, சம்பத் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்துது. ஒரு வேளை எங்களுக்கு படம் பார்க்க தெரியலியோ???
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் படம்னு ஒரு படம் வந்துருக்கு இல்லையா. எல்லாருமே சிலாகிச்சு, தலைல தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. நானும் ரொம்பவே எதிர்பார்த்தேன். நேத்து அந்த படத்தை பார்த்தேன். Surprisingly, என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலை. முதல் பாதி நல்லா இருந்துச்சு. இரண்டாவது பாதி ரொம்ப இழுவை. அதுவும் கிளைமாக்ஸ்ல, ஒவ்வொரு தடையா தாண்டி போறது, ரொம்ப மொக்கை. கண்டிப்பா படம் மோசம் இல்லை. நிஜமாவே பாராட்டப் படவேண்டிய முயற்சி தான். எல்லாருக்கும் செம்ம தில்லுதான். ஆனா, என்னால புரண்டு புரண்டு சிரிக்க முடியலை. சில காட்சிகள் எல்லாம், கண்டிப்பா இந்த படத்தை கலாய்ச்சே ஆகணும்னு திணிச்சா மாதிரி இருக்கு. இதோட பார்ட்-2 வந்தா எப்படி இருக்குன்னு பார்க்கணும். (வரவிடுவாங்களா, நான் எடுக்கறேன்...:)
------------------------------------------------------------------------------------------------------------------
இன்னிக்கு காலேஜ் டூர் விஷயமா டெல்லி போறேன். வர ஒரு பத்து நாள் ஆகும். ஏதாவது சுவாரசியமா நடந்தா, வந்து பதிவரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்... டாட்டா..... :)
ஒரு வேளை நகசுத்தியோ????