பொங்கலுக்கு வந்த படங்கள்ல, ஆடுகளமும் காவலனும் பிடிச்சிருந்துது. சிறுத்தைல காமெடி நல்லா இருந்துச்சு. ஆனா tiring. ஒரு கட்டத்துக்கு மேல அந்த சில்லறைத்தனங்களை பொறுத்துக்க முடியலை. காவலன், விஜயோட நடிப்புக்காகவே ரெண்டாம் முறை பார்த்தேன். இதுவரைக்கும் எந்த விஜய் படத்தையும் ரெண்டு முறை தியேட்டர்ல பார்த்த்ததில்லை. முக்கியமா அந்த பார்க் சீன், "எனக்காக கொஞ்சம் வேண்டிக்குங்கனு சொல்லும்போது, ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டீங்களா"ன்னு கேட்கும்போதும், நிஜமாவே நல்லா இருந்துச்சு. (காவலனின் கோ.பா.சே ரேஞ்சுக்கு மாறிட்டனோ??)
------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தம் செய் படத்துல இருக்கற அந்த ஒரே ஒரு பாடலை ஒளிபரப்பும்போது பார்த்தேன். அமீர் செம்மையா ஆடிருக்காரு. இவருக்குள்ள இப்படியொரு டான்சாரானு ஆச்சரியமா இருந்துச்சு. அடுத்த ஹிட்டு பாட்டு ரெடி. செவ்வாய் கிரக புகழ் சாரு அவர்கள், மொத்தம் அஞ்சு செகண்ட் வராரு. அவரோட விரல் நல்லா டான்ஸ் ஆடிருக்கு.

ரொம்ப கஷ்டப்பட்டு, நேரம் ஒதுக்கி, ஒரு வழியா, கடைசி நாள், புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன். என்னோட ஒரே நோக்கம், சுஜாதாவோட எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கணும்ங்கறது. இந்த முறை குறு நாவல்கள் இரண்டு, மூணாம் தொகுதிகள், எப்போதும் பெண், ரத்தம் ஒரே நிறம், (என் தொலஞ்சு போன) கனவுத் தொழிற்சாலை மற்றும் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகங்களை வாங்கினேன். நம்ம கேபிளாரோட சினிமா வியாபாரம், ரொம்ப நேரம் தேடிகிட்டு இருந்தேன். நமக்கு தான் பார்வை கீழயே போகாதே ;). அந்த புத்தகம், கீழ் வரிசைல, கடைசில அடுக்கிருந்தாங்க. வாங்கினேன். என் அண்ணன் சுவாரசியாம படிச்சிகிட்டு இருக்கான்.

சில சினிமா சம்மந்தப்பட்ட ஆட்களை பேட்டிக்காக சந்திச்சேன்... அங்க கிடைச்ச tidbits
ஐபிஎல் ஏலம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. ஏலம் விட்ட ரிசர்ட் ஹாட்லி பிரமாதாமா கொண்டு போனாரு. பார்க்கும்போது இருந்த ஒரே ஒரு வயத்தெரிச்சல், இந்த காசெல்லாம் எதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்தாம, இப்படி கேவலமா செலவழிக்கராங்களேன்னு தான். ஒரு பக்கம் இந்திய ஏழை நாடுன்னு வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்கடா வெச்சிருக்கீங்க எல்லா காசையும்??

இந்த முறையும் ஆஸ்கர் பந்தயத்துல, நோலனை ஒத்துக்கிட்டாங்க. சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டாலும், சிறந்த இயக்குனர்னு, நோலன் ப.படலை. என்ன டகால்டி நடக்குதுன்னு புரியலை. அட்லீஸ்ட் நோலனுக்கு, திரைக்கதைக்கும், படத்துக்குமான அவார்டாவது கிடைக்கணும். ஜெய் ஜக்கம்மா.

நண்பன் ஒருத்தன் ரொம்ப சின்சியரா காதலிச்சிகிட்டு இருந்தான். ரெண்டு பேருமே பயங்கர அன்யோன்யமா இருந்தாங்க. ரெகுலரா முகபுத்தகத்துல, நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள்னு போய்கிட்டு இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ தெரியலை, இப்போ பிரிஞ்சிட்டாங்க. அதுல ரொம்பவே மனம் நொந்து போன நண்பன், அந்த பெண்ணை திட்டி நிறைய ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்கான். இதை பார்த்த அப்பறம், நான் அடிக்கடி பாக்கற ஒரு பிரபல sms தான் நினைவுக்கு வந்துச்சு
காதலில் தோற்ற ஆணின் மனதின் புண்பட்ட வார்த்தைகள்
அவ ஒரு தேவ____ மச்சி....
நான் இப்போதைக்கு அப்பீட்டு...

- பாரதிராஜா அடுத்து, தென்கிழக்கு சீமையிலே ஒரு அப்பனும் ஆத்தாளும், அப்படின்னு ஒரு படம் எடுக்க போறாராம். அவருடைய கனவு படம், குற்ற பரம்பரையை கண்டிப்பா எடுப்பேன்னும் சொன்னார்
- காவலன் படத்தோட இன்னொரு கதாநாயகி மித்ரா குரியன், நல்லாவே தமிழ் பேசறாங்க. ரொம்ப அப்பாவியா, வெள்ளந்தியா இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்.
- நடிகை ராதாவோட மகள் கிருத்திகா, 12ஆம் வகுப்பாம். பார்த்தா அப்படி தெரியலை.
- 3 இடியட்ஸ் பத்தின கேள்விகளுக்கு, டைரக்டர் ஷங்கர், ரொம்ப மழுப்பாலனா பதில்களே தந்தார். என்ன நடக்குதுன்னு புரியலை.
- வைரமுத்துவோட வீடு, அடேங்கப்பானு இருக்கு. விவரிக்க வார்த்தையே இல்லை. ரொம்ப நல்லா பேசினார்.
- பிரபல புகைப்படக் கலைஞர் ஜி வெங்கட்ராமன், காலேண்டர்னு ஒண்ணு போட்டுருக்காரு. நடிகர், நடிகைகள, அந்தக் கால வண்டிகளோட சேர்த்து போட்டோ எடுத்துருக்கார். இவ்வளவு கவனிச்சஅவங்க, காலெண்டர்ல வெறும் தேதிகள் மட்டும்தான் இருக்குனு கவனிக்காம விட்டுட்டாங்க. நாட்கள் இல்லவே இல்லை. அப்பறம் என்ன ______கு இதை காலேண்டர்னு சொல்றாங்க???