Wednesday, May 11, 2011

அழகர்சாமியின் குதிரை - ப.வி

சுசீந்திரனுக்கு ஹாட் ட்ரிக். படம் எப்படி இருக்குனு சொல்லனும்னா, இந்த வார்த்தைய சொன்னா போதும். அவ்வளவு அழகான, எளிமையான, அமைதியான படம். இரண்டே மணி நேரப் படத்துல இருக்கற பாத்திரங்கள் எல்லாமே மனசுல பதியுது. படம் மொத்தமும் தூவினா மாதிரி, காமெடி கூடவே இருக்கு. எல்லா காட்சியுமே ரொம்ப புதுசா, திரைக்கதை யூகிக்கமுடியாத மாதிரி ஒரு படம். அளவான வசனங்கள், படம் பார்த்தவுடனே, ஒரு பாஸிடிவ் எனர்ஜிய நம்மால உணர முடியும். வழக்கம் போல ராஜா பிண்ணனில பின்னிட்டாரு. அந்த டைட்டிலோட வர இசைய மிஸ் பண்ணிடாதீங்க. ஆனா சில இடங்கள்ள பிண்ணனி இசை கொஞ்சம் பொருந்தல. பூவை கேளு பாட்டும் அவசியமானதா தெரியலை.


குறைனு என்ன சொல்றது, படம் கொஞ்சம் ஸ்லோனு சொல்லலாம், ஆனா அதுதான் படத்துக்கு அழகே. தேவையில்லாத அந்த ஒரு பாட்டு ஒரு குறை. படத்தோட ஆரம்பத்துலயே, படத்தோட காலத்தை சரியா உணர்த்தாம  இருக்கறதும் ஒரு மைனஸ் தான். இதுக்கு மேல எதுவும் தோணலை.
அட்டகாசமான லொகேஷன்ஸ், அதுக்கேத்தா மாதிரி கேமரா, சூப்பரான நடிகர்கள் தேர்வு, ஒவர் ஆக்‌ஷன் பண்ணாத ஆக்டர்ஸ், தோய்வில்லாத ஸ்கிரீன்ப்ளேனு ஒரு ஆர்ப்பாட்டமில்லாத படம். ரிலாக்ஸ்டா போய், என்ஜாய் பண்ணிட்டு வாங்க. கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.


சொல்ல மறந்துட்டனே, குதிரையும் நல்லா நடிச்சிருக்கு!!!!

Sunday, May 8, 2011

எங்கேயும் காதல் - ப.வி

சனிக்கிழமை நைட் படத்துக்கு புக் பண்ணிருந்தேன். அதனால, வெள்ளிக்கிழமைலேர்ந்தே படத்துக்கு பாதகமான விமர்சனம் வர ஆரம்பிச்சு, எல்லாத்துக்கும் ரெடி ஆகிட்டுதான் படத்துக்கு போனேன். சும்மா சொல்லகூடாது, செதுக்கு செதுக்கனு செதுக்கிருக்காரு டைரக்டர் பிரபுதேவா. கதையும் காணோம், திரைக்கதையும் காணோம். படத்துல வர சுமன் மாதிரி, டிடெக்டிவ் வெச்சு தேடினாலும், திரைக்கதைங்கற அம்சம் கிடைக்காது. ரெண்டு மணி நேர மியூசிக் வீடியோல, பாட்டுக்கு நடுவுல சீன் வெச்சா மாதிரி படா டமாஷு.

ஜெயம் ரவி, டைரக்டர் சொன்னதை செஞ்சிருக்காரு. நல்லா டான்ஸ் ஆடறாரு. ஹன்ஸிகா ஒரு தினுசா இருக்காங்க. கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் வருது. ஆனா சாதரணமா நடிக்க வரலை. சுமன் ஒகே. ராஜூ சுந்தரம் கடுப்பேத்தறாரு. படத்துல ப்ளஸ், படம் ரெண்டே மணி நேரம், அமர்க்களமான கேமரா, லொகேஷன், நாங்கை பாட்டு படமாக்கப்பட்ட விதம். வெள்ளைக்காரங்க தமிழ்ல் லிப் மூவ்மெண்ட் கொடுக்கும்போது, புல்லரிக்குது. ஹன்ஸிகாவுக்கே நிறைய இடங்கள்ல sync ஆகலை. என்னடா கடைசியா பார்த்த ரெண்டு படமும் மொக்கையா இல்லையேனு, நானும் ரமேஷ் அண்ணாவும், எங்களுக்கே கண்ணு வெச்சுகிட்டதுனாலதான், இந்தப் படம் இப்படினு நினைக்கறேன். எங்கேயும் காதல், வெங்காயம் மாதிரி. உரிக்க உரிக்க ஒண்ணும் இல்லை.
நன்றி ரமேஷ் அண்ணா...

Monday, May 2, 2011

SOURCE CODE - ப.வி

கொஞ்சம் குழப்பமான, யோசிக்க வைக்கற படங்கள்னா எனக்கு ஆர்வம் ஜாஸ்தியாகிடும். இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும்போதே, படத்தை பார்க்கணும்னு  முடிவு பண்ணிட்டேன். எதிர்பார்த்த அளவு சூப்பரா இல்லைனாலும், கொடுத்த காசுக்கு மோசமில்லாம இருந்துச்சு.

ஹீரோ ஸ்டீவன்ஸ் ஒரு ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, அவருக்கு முன்னாடி ஒரு மிடில் ஏஜ் பிகர் உட்கார்ந்துகிட்டு “தாங்கஸ் ஷான், உன் அட்வைஸ நான் எடுத்துகிட்டேன்”னு சொல்றா, ஆனா ஹீரோவுக்கு, அந்த பொண்ணு யாரு, தான் எப்படி இங்க வந்தோம்னு ஒண்ணும் ஞாபகம் இல்லை. குழப்பத்துல, அந்த ட்ரைன் சூழல்ல நடக்கற சில விஷயங்கள நோட்டம் விட்டுட்டே பாத்ரூம் போறாரு. கண்ணாடில வேற உருவம் தெரியுது. மறுபடியும் மண்டை காஞ்சு போய் வெளிய வராரு, அந்த பிகர் நிக்குது, பக்கத்து ட்ராக்ல இன்னொரு ட்ரைன் போகுது, பாம் வெடிச்சு, ரெண்டு ட்ரைனும் காலி. இப்போ மறுபடியும் ஹீரோ ஸ்டீவன்ஸ் அதே ட்ரைன்ல கண்ணு முழிக்கறாரு, எல்லா விஷயமும் மறுபடி நடக்குது. இதெல்லாம் என்னா மேட்டர்னு குழப்பத்தோட ஹீரோ கண்டுபிடிக்கறதை, சைன்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து பதில் சொல்லிருக்காங்க.

படம், கிராபிக்ஸ், எடிட்டிங், காமெரானு டெக்னிக்கலாவும் சூப்பர், நடிச்சவங்களும் நல்லா நடிச்சிருக்காங்க. நம்ம ரஸல் பீட்டர்ஸும் ஒரு சின்ன ரோல் பண்ணிருக்காரு. ஹீரோயின் கொஞ்சம் முத்தின கேஸ்தான், இருந்தாலும் இந்த படத்துக்கு பரவாயில்லை. ஹீரோ ஜேக், ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு விஷயம் தெரியவந்து தெளிவாகறதை, நல்லா வேறுபடுத்தி நடிச்சிருக்காரு. இந்த மாதிரி ஜானர் படங்கள் விரும்பறவங்க, கண்டிப்பா பார்க்கலாம். இன்ஸெப்ஷன் அளவு இல்லைனாலும், நல்லாதான் இருக்கு. படம் புரியாதவங்க பின்னூட்டத்துல கேளுங்க, விளக்கறேன் :)

Sunday, May 1, 2011

வானம் - ப.வி

படத்தோட டைட்டிலை படிக்கும்போதே, நிறைய பேர் ’வேணாம்’னுதான் படிக்கறாங்க. அவ்வளவு மோசமான படமில்லை. ஆனா சூப்பர் படமும் இல்லை. ஒரே நேரத்துல நாலு பேரலல் கதைகளை சொல்றது தமிழ் சினிமாவுக்கு புதுசுதான், ஆனாலும் இன்னமும் கொஞ்சம் சிரத்தை எடுத்து சுவாரசியமா சொல்லிருக்கலாம். இடைவேளை வரை, என்ன சொல்லவராங்கன்னே பிடிபடலை. அனுஷ்காவோட கதைய, தெலுங்குலேர்ந்து அப்படியே டப்பிருக்காங்க, கொஞ்சம் கூட ஒட்டலை. நல்லா இருந்த பாடல்களோட காட்சிகளும், சொதப்பல் ரகம்தான். சில பாடல்கள் தேவையே இல்லை.

படத்துல ஹைலைட், வழக்கம்போல சந்தானம் காமெடி, முக்கியமா சில இடங்கள்ல சிம்புவோட நடிப்பு, சரண்யா + அந்த தாத்தா நடிப்பு. ஒரு மத-நல்லிணக்க மெசேஜ சுத்தி கதையா, இல்லை, நாலு கதைக்கும் ஒரே கிளைமாக்ஸா இப்படி ஒரு மெசேஜ் சொல்லி முடிக்க வந்தாங்களான்னு, பத்து கெட்டெப் தசாவதாரம் மாதிரி ஒண்ணும் புரியலை. மெசேஜும், சுதந்திர தினத்துக்கு போடற ஸ்கூல் டிராமா மாதிரி இருந்துச்சு. ரொம்ப மேலோட்டமான, அரைவேக்காட்டுத்தனமான மெசேஜ். யாருமே பார்க்ககூடாத, மொக்கை படமில்லை. பட், இன்னும் கூட நல்லா இருந்திருக்கலாம். முடிஞ்சா பாருங்க.

பி.கு - போன பதிவுல, தேவி தியேட்டர்ல சவுண்டு நல்லா இல்லைனு எழுதிருந்தேன். ஆனா, வானம் படம் பாரடைஸ்ல பார்த்தேன். சவுண்டு வழக்கம் போல சூப்பர். கோ படத்துல தான் ஏதோ பிரச்சனையோ??