Saturday, February 21, 2009

F வார்த்தையும் - ஓ வார்த்தையும்

p.s. இந்தப் பதிவை, அம்பிகள், அப்பாவிகள் படிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்...(அப்பதான படிப்பீங்க ;)

உங்களில் எவ்வளவு பேர் கெட்ட வார்த்தை பேசுவீங்க? நான் பேசுவேன். அதுவும் கோபம் வந்தா, நானேகூட காது கொடுத்து கேட்க முடியாத படி திட்டுவேன். இருந்தும், ஒரு சென்னை தமிழனா, நான் என் கடமைய சரியா செய்யறேன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. பொதுவா சினிமால கெட்ட வார்த்தைகள் வந்தா அந்த "டோயங்" சத்தம்தான் நிறைய வரும்.

நம்மூரு சினிமாக்கள், ஆபாசத்துலையும், கெட்டவார்த்தைகள்ளையும் மட்டுமே உலகத்தரத்த அடைஞ்சிகிட்டு இருக்கு. ஆனா, ஒரு சில நல்ல படங்கள்ல கெட்ட வார்த்தைகள் வரும்போதும் "டோயங்" சத்தம் வந்து எரிச்சல் குடுக்கும். சென்சார் செய்கிற காமெடிக்கு ஒரு அளவே இல்ல. ஏதோ மக்கள், இதனால மட்டுமே கெட்டு போய்டுவாங்க, இல்லைனா அவங்க ரொம்ப அப்பாவினு நினைப்பாங்க போல. U படத்துல சென்சார் செய்யறது ஓகே, ஆனா A படத்துலையுமா??

ஹாலிவுட்ல, படங்களோட certification ஏத்தா மாதிரி அதோட contents இருக்கும். அங்கயும் சில சமயங்கள்ல, கெட்ட வார்த்தைகள் மாட்டுவதுண்டு. இங்க நாம எப்பவும் கேட்கும்/சொல்ற ஒ** வார்த்தை மாதிரி, அங்க F*** வார்த்தை. படங்கள்ல மட்டும் இல்லாம, பாடல்கள், புத்தகங்கள் எல்லதுலயுமே அந்த வார்த்தைய முடிஞ்ச வரை சென்சார் பண்ணிருவாங்க. ஒரு முறை நான் லோக்கல் trainla வரும்போது கேட்ட conversation, சரியான காமெடி. ஒரு பையன் போன்ல யார பத்தியோ இங்கிலீஷ் + தமிழ்ல மாறி மாறி பேசுறான். இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னானா, அவன் கெட்ட வார்த்தைய பேச மட்டுமே தமிழ் use பண்ணான்.

அவன் பேசுனதுல ஒரு சில வரிகள் (கரெக்டா புரிஞ்சிகிட்டு படிங்க) ,
"மச்சான், i was comin da, ஒ** he didnt notice. ஒ** i was lik fell down. ஒ** it was all of A sudden. ஒ** i didnt expect. ok மச்சான், where are U now.... ஒ** no, wait in this side, ஒ**................................". இப்படியாக ஒ** ஒ**னு பேசிகிட்டே இருந்தான். தமிழ் எப்படியெல்லாம் வளருது பாருங்க. இங்க மட்டும் இல்ல, ஹிந்தி பேசுற பல பேர், கெட்ட வார்த்தைய மட்டும் தமிழ்ல பேசி கேட்டிருக்கேன். அது ஏன்னு தெரியல. ஒரு வேலை, தமிழ் ரொம்ப expressive மொழியா இருப்பதனால இருக்கும். ஆனா ஒரு விஷயம், மந்திரம் சொல்றதுனால எப்படி உடம்புல positive vibes வருமோ, அது மாதிரி, கெட்ட வார்த்தைகள் பேசுனா நம்ம உடம்புல மட்டும் இல்ல, நம்மள சுற்றி இருக்குற எல்லார் உடம்புலயும், மனசுலயும் negative vibes வரும்.

எனவே, கெட்ட வார்த்தை பேசும் அன்பர்கள், அதனை குறைக்கவோ, ஒழிக்கவோ பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நானும் கடுமையான முயற்சி செய்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ் (ஒ** எப்படி நம்ம தமிழ் பற்று)

http://sororitysecrets.files.wordpress.com/2008/08/bad_words.jpg

p.s. எந்த இங்கிலீஷ் படத்துல, maximum f word வருதுன்னு யாருக்காவது தெரியுமா???

14 comments:

Lancelot said...

me the first..

Lancelot said...

maximum F word used in the movie PHONEBOOTH...
and he he chennai la iruntha varaikkum O word eppovumae varum- even before lecturers and amma i have used F word and Shit word often....

but after coming to Singapore no chance of using it...

கா.கி said...

@ll
i thought its frm departed or pulp fiction..
please double chk...

//i have used F word and Shit word often....//
kd pullai

//to Singapore no chance of using it...//
pesunaalum yaarukkum puriyaadhu...

Sudha said...

good post :) nalla vishayatha sollarathukku pala pala nalla example lam sollirka! ;)

swearing in public in any language is unacceptable and hope people realise it!

aana enakku theriju pala paer scene podarthukagave andha vaarthaigala use pannaradhundu!
indha vishayam avanga kaadhukkum poi serndha nalla irukkum! :)

கா.கி said...

@sudha
//good post :)//
nandri

//pala paer scene podarthukagave andha vaarthaigala use pannaradhundu!//
oh, i missed this aspect..

//avanga kaadhukkum poi serndha nalla irukkum!//
popularise the blog's URL

mudhal varugaikkum commentirkum nandri... thodarndhu varavum

Lancelot said...

Departed will be on the same lines- but Phonebooth Region 1 (American edition) full of bad words every two word will have a F or B or B or S word...

Saggi ellamae KD pullai thaanae

inga ellarum Chinese ketta varthai thaan en boss maximum use panrathey F word thaan athukkum 100 times sorry solluvaru :P

inga locala ketta varthai naa CHEEBEY - meaning ennanu yaarumae solla mattengranga... :((

கா.கி said...

@ll
cheebey edho thamizh madhiri keedhe??

Lancelot said...

i guess it is malay or chinese...wil check again...

Karthik said...

O**a sema post le!!! O*** naanum have 2 reduce the frequency of using this word!! :P F word mostly in DEPARTED and SHOOT EM PU la varum!!! :))))))))))))

Kamarajsivam said...
This comment has been removed by the author.
ருத்ர வீணை® said...

அட எல்லாரும் F ல பின்னூட்டம் நான் ஓ போட்டுடறேன்,, என் நண்பன் கூட ஒ பார்டி தான்.. ஒரு முறை போட்டியே வைத்தோம்.. ஒரு ஒ கூட சொல்லாம நீ இருந்தா 500 ரூபா பந்தயம் அதும் 5 நிமிஷத்துக்குத்தான்.. பாவி பய புள்ள எப்படியோ சமாளிச்சு 5 நிமிஷம் முடிய 2 செகண்ட் இருக்கும்போது கேட்டான் ஒ... இன்னும் எவ்ளோ நேரம்ட இருக்கு??? இன்னொருத்தன் இருக்கான் பாசக்கார பய... அவனுக்கு வாயில F ம் வராது அனா அதா யூஸ் பண்ணுவான் எப்படி தெரியுமா போடா பகிட்.... ஹும்ம் இதுக்கும் பதிவு போட்டு பின்னூட்டம் வாங்கி.. நானும் ஒரு நல்ல படம் போட்டு கேள்வி கேக்குறேன் ஒருத்தரும் பாக்கலியே மக்கா..

கா.கி said...

@ஜொள்ளு சபா
அருமையான கதைங்க... மைண்ட்ல வெச்சிக்கிறேன்....

//துக்கும் பதிவு போட்டு பின்னூட்டம் வாங்கி//
என்ன செய்ய... இந்த உலகமே இப்படிதான்..

கனவுகள் said...

ஏனுங்க கடைசில நீங்களே ஓ******ன்னு
சொல்லிபோட்டீங்களே.....

கா.கி said...

ellam oru finishing touch dhaan