Friday, June 26, 2009

MASS - இல்லா - mani

வழக்கம் போல, இந்த வாரமும் ஏதாவது படம் பார்க்கணுமே, So, வழக்கம் போல ரமேஷ் அண்ணாவ இட்டுகுனு, அண்ணா theatre பக்கம் போனேன். அங்க, முத்திரை படம் ரிலீஸ். படம் கொஞ்சம் சுமாரா இருப்பதாகவே கேள்விப்பட்டதனாலதான் போனேன். ஆனா டிக்கெட் கிடைக்கல. நாமதான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா யார் பேச்சையுமே கேட்கமாட்டோமே, படம் பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, பார்த்தே தீரணும். அண்ணா கிட்ட, "வேற வழியில்லை, மாசிலாமணி பார்ப்போமா"னு கேட்டேன். அவரும் "எதுவா இருந்தாலும் ஓகே" அப்படின்னாரு. அங்கேர்ந்து ஆல்பர்ட் theatre. டிக்கெட் வாங்கிட்டு (85ஓவா) உள்ள போனோம்.

வழக்கம் போல, படம் செம்ம மொக்கை. அதாவது நீங்க எவ்வளவு மொக்கைனு நினைக்கறீங்களோ, அத விட மொக்கை. வழக்கம் போல, நானும் அண்ணாவும் அடுத்தடுத்து வர காட்சிகள யூகிச்சிட்டே வரோம், அதே மாதிரி வந்துகினே இருக்கு. நாங்களும் எவ்வளவு தான் யூகிக்கறது. ஒரு கட்டத்துல, நாங்க சொல்றது எல்லாமே வந்ததால, போர் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. ஹீரோ முகத்த தியேட்டர்ல அவ்வளவு பெரிய ஸ்க்ரீன்ல பார்க்க முடியல. ஹீரோயினயாவது கொஞ்சம் கமர்ஷியலா காமிச்சிருக்கலாம், அவங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க. அதனால, அதுவும் தேறலை. அவங்க டான்ஸராமா, சங்கமம் விந்தியா கிட்ட கத்துகிட்டாங்கன்னு நினைக்கறேன். இடைவேளைக்கு அப்பறம், நாங்களாகவே சில சீனுக்கு கை தட்டி, சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, "சூப்பரப்பு" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். காமெடி track இருந்ததா வெளிய பேசிக்கறாங்க, எங்களுக்கு ஒண்ணும் தெரியல.

கிளைமாக்ஸ்ல, ஹீரோ சண்டை போடுறப்போ, எனக்கு பசங்க படம் டயலாக் ஞாபகத்துல வர, நானே சத்தமா "அய்யய்யோ, மாசி கைய முறிக்கிட்டானே, அவனுக்கு கோவம் வந்துருச்சே, இப்ப பல்லக் கடிப்பான் பாரு"னு சத்தமா கமெண்ட் விட்டேன். அந்த ஹீரோவும் அதே மாதிரி செய்யறாரு. ஷப்பா, முடியல. 2.5 மணி நேரம், மூச்சுத் திணறத் திணற மொக்கை வாங்கி வீட்டுக்கு வந்தோம். படம் நல்லா இல்லைன்னு அவங்களுக்கே தெரியும் போல. அதனாலேயே படத்துல அவங்களே "சூப்பரூ"அப்படின்னு ஒரு பாட்டு பாடிக்கறாங்க. சன் டிவிக்கு மட்டும் மற்றொமொரு வெற்றிப் படம். எங்களுக்கு வழக்கம் போல, ஒரு நாள் தூக்கம் + 100 ரூவா காலி. எவ்வளவு மொக்கை படம் வந்தாலும் பார்க்கராணுங்கடா, இவனுங்க ரொம்ப நல்லவங்கனு நீங்க சொல்றது எனக்கு காதுல விழுது. என்ன செய்ய.

மீண்டும், மீண்டு வந்து, அடுத்து ஒரு படத்த பார்த்து, பதிவறேன். வர்ட்டா....


அய்யயோ, ஸாரி, ஸ்டில் மாறிடிச்சு. விடுங்க, எல்லாம் ஒண்ணுதான்.

6 comments:

kanagu said...

சன் டி.வி வாங்குன முக்கால்வாசி படங்கள் (அயனை தவிர) போஸ்டரில் ம்ட்டும் தான் ஓடியது என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் :)

Anonymous said...

Eppadi intha padam kooda pakka mudiyuthu...it shows how brave you are...

BTW i watched Angels and demons...it was good. Much better than da vinci code.

கா.கி said...

@kanagu
ஆமோதிக்கிறேன்

@vani
என்ன செய்ய, media student ஆச்சே...
and i differ abt ur opinion on angels and demons...

EdieTeddy said...

அரமணி நேரமா எனக்காக இவன் பொணம் மாதிரி நடிசிட்டிருகாநேன்னு heroin பீல் பண்ற scenela நம்ம நண்பன் 2.30 மணி நேரமா theatrela நாங்க அப்படித்தாண்டி உக்கதிர்கொம்னு comment விட்டாரு பாருங்க.. சூபறு..

btw கொஞ்ச நாலா(நான் blog பண்ண அரம்பிச்சதலிருந்து) உங்கள பாலோ பண்ணிட்டு இருக்கேன்.. very நைசுங்க..

கா.கி said...

@edie
frnd comment sooper. and வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. மீண்டும் வருக..

Karthik Lollu said...

Thalaivara asingapaduthithe irukaan ya ivan!!