Saturday, July 31, 2010

இசை விமர்சனம் - கொஞ்சம் பெரிய முன் குறிப்பு

இனி வரும் இசை சம்பந்தப்பட்ட பதிவுகள் விமர்சனம் அல்ல. ரசனைப் பகிர்தல் என்று சொல்லலாம். பொதுவாகவே திரைப்படங்களைப் பற்றி பேசும் அளவுக்கு, இங்கே இசையைப் பற்றி நான் பேசுவதில்லை. பிடித்த, பிடிக்காத இசையைப் பற்றி விவரிக்க, சரியான வார்த்தைகள் கிடைக்காமல் இருப்பதே பொதுவான காரணம். பயன்படுத்தும் ஓரிரு வார்த்தைகளும், அனேக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, படிக்கும்போது, எனக்கே புதியதாக இருக்காது. இப்படி பல இசைப் பற்றிய பதிவுகள் எழுதி, அதை அழித்திருக்கிறேன். எவ்வளவு நாள்தான் இப்படியே இருப்பது. போரடித்தாலும், படிப்பவர்கள் படிக்கட்டும் என்று இப்போது துணிந்துவிட்டேன். யார் வேண்டுமானாலும் இசையை விமர்சனம் செய்யலாம் என்ற நிலையில், என்னுடைய இந்தப் பதிவுகளை விமர்சனம் என்று கூற விரும்பவில்லை. என் இசை அறிவுக்கு எட்டிய விஷயங்களை, என் ரசனையைப் பொருத்து, அதைப்  பதிவு செய்கிறேன். இதில் கண்டிப்பாக உங்கள் ரசனைக்கு மாறான கருத்துக்கள் இருக்கும். எனவே, தேவையில்லாமல் விவாதித்து அலட்டிக்கொள்ளாதீர்கள்.

இவ்வளவு பெரிய முன்குறிப்புக்கு அவசியமில்லைதான். இருந்தாலும் எழுத ஒரு விஷயம் கிடைத்து விட்டதல்லவா. விட்டு விட மனமில்லை. இசையைப் பற்றி நான் பேசுவதற்கான காரணம், (ஒரு சின்ன தம்பட்டம்) நான் ஒரு பாடகன். முறையான சங்கீதம் கற்றிருக்கிறேன். சில பல காரணங்களால் தொடர முடியவில்லை. தொடருவதற்கு எண்ணங்கள் இருக்கின்றன. இசையைப் பற்றிய பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இருக்கிறது. இன்றும் பல்வேறு மேடைகளில் பாடிக்கொண்டிருக்கிறேன். இது போதுமென நினைக்கிறேன் :P

இந்தத் தருணத்தில், நண்பர் அகிலன், வல்லினத்தில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையிலிருந்து சில வார்த்தைகள், "இசையோடு வருபவர்களை காட்டிலும் சினிமா கனவோடு வருபவர்கள்தான் அதிகம். ஒன்றை கண்டிப்பாக நம்புங்கள். சினிமா இசையின் காலம் முடிந்து விட்டது அதன் கடந்த கால வெற்றிகளில்தான் பலரும் அதன் ஆயுளை நீட்டி வருகிறார்கள். புதிய இசைகளுக்கான வாய்ப்புகள் விஸ்தாரமாக இருக்கிறது. அவைகளுக்கான தளம் சினிமா அல்ல. அப்படி வலிய முயற்சிக்கும் போது கார்த்திக்ராஜாவின் அச்சமுண்டு அச்சமுண்டு இசைபோலவோ அல்லது உன்னைப் போல் ஒருவன் இசைப்போலவோ யாராலும் கவனிக்கப்படாமல் போகும். சினிமாவில் இசை கவனிக்கப்படுவது இல்லை. எந்த சினிமா விமர்சனமும் இசையை பொருட்படுத்தியதும் இல்லை" - உன்னைப்போல் ஒருவனைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்த்து, வழிமொழிகிறேன்.

சரி, அடுத்த பதிவிலிருந்து வேலையை ஆரம்பிக்கிறேன்.

2 comments:

Jeyamaran said...

அருமையான பதிவு நண்பரே உங்கள் பதிவை tamil.kijj.in இணைப்பதன் மூலம் உங்களில் டிராபிக்கை அதிகரிக்கலாம்

கா.கி said...

nandri :)