Monday, August 9, 2010

Inception பற்றிய கேள்விகளுக்கு

நான் ஏதொ பெரிய லாடு லபக்கு தாஸ் மாதிரி பேசறேன்னு நினைக்காதீங்க... இந்தப் படம் எனக்கு கொஞ்சம் நல்லாவே புரிஞ்சிருச்சுனு தைரியத்துல சொல்றேன். உங்களுக்கு இந்த படத்தைப் பத்தின எதாவது சந்தேகம் இருந்தா, பின்னூட்டமா போடுங்க, பதில் சொல்றேன். பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் மூடிகிட்டு இருக்கும்போது, உனக்கென்னனு ஈகோவோட யோசிக்காதீங்க. ஏதொ என்னால முடிஞ்ச சமூக சேவை.. :)

பி.கு யாரும் எந்த சந்தேகமும் கேட்காம மொக்கை கொடுத்துருவாங்கனு ஒரு பயமும் இருக்கு. இருந்தாலும் பரவால்ல. வந்தா மலை.

பி.கு 2 - ஏதோ யோசிச்சேன். மறந்துட்டேன்

எதுவா இருந்தாலும் தைரியமா பயப்படமா கேளுங்க...

7 comments:

ஓஜஸ் said...

please explain the story na?

ரமி said...

Is the movie is begin in dream or real?

Actually what is the climax in this movie?

Different between extraction and inception?

Is there any explanation in movie that these are all possible or not?

கா.கி said...

@padmanaban and ரமி

இன்னும் ஒரு ரெண்டு நாள் போகட்டும், மேலும் கேள்விகள் சேரும்னு நினைக்கறேன்... இல்லனாலும், மொத்தமா ஒரு பதிவுல பதில் சொல்லிடறேன்..கேள்விக்களுக்கு நன்றி :)

ஜெய் said...

சூப்பர் தல... நீங்களாவது இதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க... ஒன்னும் புரிய மாட்டேங்குது...

அந்த நாலாவது லெவல் லிம்போவா இல்லையா?
அதிக மயக்கமருந்து எடுத்துகிட்டபின் கனவுல செத்தாதான் லிம்போ-க்கு போகமுடியும், அங்க செத்தா ரியாலிடிக்கு வரமுடியும்னு சொல்லறாங்க இல்லையா? ஆனா ஹீரோவும் அரியாட்னியும் நாலாவது லெவலுக்கு சாகாமலே போறாங்க... அரியாட்னியும் ஃபிஷரும் ஜாலியா கிக் மூலமாவே திரும்ப வர்றாங்க... அதுனால அது லிம்போவா இருக்க முடியாது இல்லையா?
ஆனா, அது லிம்போ இல்லைன்னா செத்துப்போன ஃபிஷர் எப்படி அங்க இருக்காரு? ஃபிஷர் திரும்ப மூணவது லெவலுக்கு வந்தபின் ஏன் குண்டடி பட்ட வலி இல்லை?
ஒருவேளை நாலாவ்து லெவல், ஹீரோவோட சப்கான்ஷியஸ் லெவல்னு வச்சுகிட்டா, அங்க ஃபிஷரோட ப்ரொஜக்‌ஷன் (மால் மாதிரி) இருக்கலாம்... ஆனா ஃபிஷரே எப்படி இருக்க முடியும்? அந்த லெவலுக்கு ஹீரோவும் அரியாட்னியும் போரதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் செத்துப்பொன ஃபிஷர் எங்க இருந்தாரு?
முக்கியமான விஷயம்... நாலாவது லெவல் முடியறப்போ, அரியாட்னி கீழே குதிக்கும் முன், ஹீரோகிட்ட “சைடோ லிம்போல இருக்காரு... போய் அவரைக்காப்பாத்து”-ன்னு சொல்லி துப்பாக்கி எடுத்து ஹீரோவை சுட பார்க்கிறாங்க... (அப்படின்னா நாலாவது லெவல் லிம்போ இல்லைதானே?)

ஹீரோவும் அவ்ர் மனைவியும் 50 வருஷம் வாழ்ந்ததா சொல்லற இடத்துல ஒரு ஷாட்ல அவங்களை பின்பக்கத்துல இருந்து காண்பிக்கறாங்க... அவங்க ரெண்டு பேரோட கையும் சுருங்கி வயசாகி இருக்காங்க... ஆனா, அதுக்கப்பறம் தற்கொலை பண்ணிக்கறப்போ இளமையா இருக்காங்களே? 50 வாழ்ந்தது பல லெவல் கனவுக்குள்ளா? இல்ல லிம்போலயா?

முடிவு ஓபன் எண்ட்தானே? ஒருவேளை மொத்த படமும் கனவுன்னு ஒரு argument இருந்தா எப்படி அதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி எப்படி டோட்டம் விழுந்துச்சு?

க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா? படம் முழுக்க கனவா?, ஏன் குழந்தைகள் அதே இடத்துல இருக்காங்க(ஆனா க்ளைமாக்ஸ்ல வர்றது வேற செட் குழந்தகளாம்...!!), ஏன் டோட்டம் சுத்தறப்போ ஒரு தடவை சைட்டோவும், க்ளைமாக்ஸில் மைக்கேல் கெயினும் வந்து டிஸ்டர்ப் பண்ணறாங்க?, அப்படின்னா அவங்க ஹீரோவுக்கு பண்ணற இன்செப்ஷனா இது? அதுக்கு அரியாட்னி உதவியா? (அந்த பொண்ணுதான் முக்கியமான எதிர்பாராத பல விஷயங்கள் பண்ணுது படத்துல) இல்ல ஹீரோவே அவருக்கே இன்செப்ஷன் பண்ணிக்கறாரா? (to get rid of his guilt) ஏன்னா மெமெண்டோவும் ஒரு வகையில இதேதான்... மனைவி தற்கொலைக்கு ஹீரோ காரணமா இருந்து, அந்த குற்ற உணர்ச்சியை போக்க ஹீரோ பண்ணற கிறுக்குத்தனமான விஷயங்கள்தான் மொத்த படமே.. ஹீரோ ஏன் கனவுல மட்டும் திருமண மோதிரம் போட்டு இருக்காரு, க்ளைமாக்ஸ்ல போடலையே? (அதை க்ளோஸ் அப்ல வேற காண்பிக்கறாங்க) அப்ப க்ளைமாக்ஸ் நிஜமா? மால் சொல்லற அதே “take a leap of faith” டயலாக் ஏன் சைடோ சொல்லறாரு? சம்பந்தமே இல்லாம நோலன் க்ளைமாக்ஸையே (speaking with saito in limbo) முதல் காட்சியா காண்பிப்பாருன்னு தோணலை... அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா?

SurveySan said...

பனிமலை ஏன் குண்டு வச்சு தகர்க்கப்பட்டுது?

கா.கி said...

@survey and jai

my last comment repeat..... rende naal pls...

கா.கி said...

பதில் சொல்லி்ட்டேன். :)