Wednesday, February 23, 2011

நடுநிசி நாய்கள் - edge of the seat

இரு கோடுகள் லாஜிக்க நான் பல சமயங்கள்ல நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு. இந்தப் படம் பார்க்கும்போதும் அதுதான் தோணிச்சு. எப்படின்னு சொல்றேன். இந்தப் படத்தை பத்தி ஒரு பக்கம் என்னடான்னா "இதெல்லாம் ஒரு படமா, கவுதம் மேனன் என்ன நினைச்சிகிட்டு இருக்காரு, இவ்வளவு வக்கிரமான படம் பார்த்தா அப்பாவி மக்கள் கெட்டுப் போய்ட மாட்டாங்களா, ச்சே ச்சே அபசாரம் அபசாரம்"னு கூவிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், "அவரு அப்படி என்ன சொல்லிட்டாரு.இருக்கர்ததான சொல்லிருக்காரு, இதுல என்ன கெட்டுப்  போச்சு, கரை நல்லது"னு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கு படம் அப்படி வக்கிரமா, டிஸ்டர்பிங்கா தெரியல. ஏன்? ஏன்னா நான் இத விட வக்கிரமான, வயலன்டான, இன்டேன்ஸோட இருக்கற படம் பாத்துருக்கேன். அதான் இரு கோடுகள் லாஜிக்.

படத்தைப் பத்தி சொல்லனும்னா, ஒரு புது முயற்சி, அப்படிங்கற ஒரு ப்ளஸ் பாயின்ட்ட தவிர, வேற ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல. படம் ஆரம்பிக்கும்போதே, வீரா மாட்டிகிட்டு, வாக்குமூலம் தரா மாதிரிஇருக்கர்தால, அதான் மாட்டிகிட்டாரே, எப்படி மாட்டிகிட்டாருன்னு பார்க்கலாம்னு புஸ் ஆயிருச்சு. அப்படி காமிக்கப் பட்ட விஷயமும் ஒண்ணும் சுவாரசியமா இல்லை. ரொம்ப predictable. படத்துல நல்ல விஷயங்கள்னு பார்த்தா, டெக்னிக்கலா நல்லா இருந்துது. இசை இல்லாத மாட்டேர் சொல்லலைன்னா தெரிஞ்சிருக்காது. மீனாட்சி அம்மாவா வந்த ஸ்வப்னா ஆபிரகாமின் நடிப்பு கொஞ்சம் நல்லா இருந்துச்சு. முடிவா என்ன சொல்ல விரும்பறேன்னா, சாரி கவுதம் சார். ஏமாத்திட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.


பி.கு. ஆது என்ன edge of the seatனு சொல்லிருக்கேன்னா, நிறைய பேரு படம் 
எப்ப முடியும், கிளம்பலாம்னு edge of the seatla ரெடியா இருந்தாங்க. அதான்

8 comments:

எஸ்.கே said...

இருந்தாலும் இப்படம் தமிழுக்கு கொஞ்சம் அதிகமோ என்றுதான் நினைக்க வைக்கிறது!

(பட்டாம்பூச்சி தருணங்கள் விரைவில் எழுதிவிடுகிறேன்!:-))

கா.கி said...

@எஸ்.கே
அதிகம், கம்மினு எப்படி அளவிடறீங்க. அப்போ ஷங்கர் காமிக்கற பிரம்மாண்டமும் தமிழ் படத்துக்கு அதிகம் தான.

எஸ்.கே said...

:-) அளவு கம்மினுலாம் ஒன்னுமில்லை. பழக்கமாகி போகணும் அதான். இதே மாதிரி படங்கள் பல வந்து ஹிட்டானா அப்புறம் இதுவும் பழக்கமாகிடும்.

கா.கி said...

எல்லா விஷயமுமே அப்படிதான். அதுக்காக, அதிகம், தேவையில்லைனு சொல்றது ஞாயமா.. ஏதோ இதனால மட்டுமே எல்லாம் கெட்டு போகற மாதிரி.. நான் இதை வரவேற்கலை, ஆனா இப்படி பழி சொல்ற அளவுக்கு ஒண்ணும் குடி முழுகி போகலைனு சொல்றேன்..

எஸ்.கே said...

/ஏதோ இதனால மட்டுமே எல்லாம் கெட்டு போகற மாதிரி.. //

அது உண்மைதான். ஆனால் சிலரின் பார்வைகள் வேறு விதமாக இருக்க காரணம் இவ்வகை படங்கள் இங்கு அதிகமாக வராததாலும், அவர்களின் எண்ண ஓட்டங்களாலும்தானே! ஆனால் அதுவும் தவறென எனக்கு தோன்றவில்லை.

கா.கி said...

அப்படி பட்ட எண்ண ஓட்டமும் exposureம் இல்லாத ஆட்கள் எழுதற சில பதிவுகள் மோசமா இருக்கறதையும் படிச்சிருக்கேன். அவங்களுக்கு அந்த content மேல கோபம் இல்லை, சொல்ற ஆள் மேலதான். என்ன பேசி என்ன விடுங்க பாஸ்.. perception differs...

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html

கா.கி said...

மிக்க நன்றி எஸ்.கே... :))))) உங்களுக்கு ஒரு சிலை ரெடி பண்றேன் :))