Monday, February 21, 2011

PLAYLIST - JANUARY '11

ஆடுகளத்தோட அய்யயோ, எங்கேயும் காதலின் நெஞ்சில் நெஞ்சில் + நாங்கை ஆகிய பாடல்கள் இன்னமும் லிஸ்ட்ல இருக்கு. புதுசா உள்ள வர பாடல்கள்

கன்னித்தீவு பொண்ணா - யுத்தம் செய்
மெதுவான ஷாட்ஸ், கீழயே பார்க்கற ஹீரோ, இதோட, மிஷ்கின் படத்தை அடையாளப்படுத்தும் இன்னொரு விஷயம் இந்த மஞ்சப் புடவை பாடல். கார்திகேயன்னு ஒருத்தர் நல்லா பாடிருக்காரு. நல்ல catchy டியூன். முதல் முறை கேட்டவுடனேயே பிடிச்சிருந்துது. அமீர் ஆட்டமும் சூப்பர். ஆனா, படத்தோட பார்க்கும்போது தேவையில்லைனுதான் தோணிச்சு.

என்னமோ ஏதோ, அக நக - கோ
என்னமோ ஏதோ, ட்ரெய்லர்ல கேட்டவுடனேயே அடுத்த ஹிட்டு ரெடின்னு முடிவு பண்ணிட்டேன். ஹாரிஸ் பிராண்ட் பாட்டு. அக நக பாடலும் அப்படிதான். அதுவும், நடுவுல ஒரு தெலுங்கு வரிகள் வர இடம் ரொம்ப அழகா இருக்கு. என்னதான் பாடல்கள் நல்லா இருந்தாலும், ஹாரிஸ் கொஞ்சம் அரச்ச மாவையே அரைக்கராறு. கவனிச்சிகிட்டா நல்லா இருக்கும்.

ராக்கெட் ராஜா - சிறுத்தை
ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு நல்ல ஹீரோ என்ட்ரி சாங். வழக்கம் போல, வித்யாசாகர் பேரு வெளிய வராமலே பாடல் ஹிட் ஆகிடுச்சு. போன ஜென்மத்துல என்ன பண்ணாரோ பாவம், எக்கச்சக்க ஹிட் பாடல்கள் கொடுத்தும் புகழடைய முடியல. கவலைபடாதீங்க சார், நாங்க இருக்கோம். 

யுவன் இசைல, பேசு, பதினாறு ஆகிய படங்கள் வந்தாலும், பாடல்கள் பெருசா எடுபடலை. போனா போகட்டும்னு இசையமைச்சா மாதிரி இருக்கு. அதே மாதிரி, ராஜாவின் அய்யன்னு ஒரு படம், அதுலயும் பாடல்கள் ரொம்ப சுமார்தான். ராஜாவோட பழைய பாடல்களோட ஒப்பிட்டு பார்க்கும்போதே, அய்யன் பாடல்கள் கொஞ்சம் பழசா இருக்கு. மணிரத்னம், பாலுமகேந்திரா மாதிரியான டைரக்டர்ஸ் மறுபடியும் எப்போதான் ராஜாவோட சேருவாங்களோன்னு இருக்கு.

இந்த மாசத்துலேர்ந்து, ஒவ்வொரு ப்ளேலிஸ்ட்லயும் எனக்கு பிடிச்ச பழைய பாடல்களை, ஒண்ணு ஒண்ணா உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். அது வேற மொழிப் பாடலா கூட இருக்கலாம். இந்த மாத பிளாஷ்பேக் பாடல், சுபாஷ் படத்துல வர ஹே ஸலோமா ஸலோ..


படம் ப்ளாப்னு தான் நினைக்கறேன். இருந்தாலும், இந்தப் பாடல், சில்க் ஸ்மிதாவோட கடைசி பாடல்னு விளம்பரப்படுத்தப்பட்டு கொஞ்சம் கவனிக்கப்பட்டுது. உங்கள்ள எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கும்னு தெரியலை. வித்யாசாகர் - அர்ஜுன் காம்பினேஷன்ல நிறைய நல்ல பாடல்கள் இருக்கு. அதுல இதுவும் ஒண்ணு. வில்லன் கும்பல் நடுவுல, ஹீரோ மாறுவேஷம் போட்ட, அங்க வர ஒரு ஐட்டமோட பாடரா மாதிரி ரொம்ப புதுமையான சிச்சுவேஷன். மறைந்த பாடகி சுவர்ணலதாவோட, வித்யாசாகரே பாடியிருக்காரு. குரல் சில இடங்கள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி இருக்கும். மொத்த பாடல்லையே ஒரு charm இருக்கும்.கேட்டுப் பாருங்க. 

4 comments:

எஸ்.கே said...

கோ தவிர மீதி பாடல்கள் கேட்டிருக்கிறேன். நன்றாக இருக்கும்! அதையும் கேட்கிறேன்!

கா.கி said...

@எஸ்.கே

வேற நல்ல பாடல்கள் இருந்தா சொல்லுங்க, அதையும் கேக்கறேன்..
இன்னும் நீங்க பட்டாம்பூச்சி தருணங்கள் பதிவு போடலை..

ippadikku murugan said...

ராணி முத்து பாணியில இருக்கு உன்னோட எழுத்து நடை.
"சத்யராஜுக்கு மேலும் ஒரு வெற்றிப்படம்" என்கிற மாதிரி
பாடல்களை பற்றி எழுதியிருக்க. அதில என்ன குண விசேஷம்,
ராகம் என்ன, எங்கிருந்து காபி இதெல்லாம் போட்டா சுவாரஸ்யமா இருக்கும்.

கா.கி said...

@anna
குண விசேஷம் என்னான்னு சொல்லத் தெரிஞ்சா சொல்லிருக்க மாட்டேனா. நான் ரசிச்ச விஷயத்தை மத்தவங்க கிட்டையும் பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்த பதிவே. காபி அடிச்சிருந்தா அதைப்பத்தி கண்டிப்பா எழுதுவேன். எழுதிருக்கேன். முந்தின ப்ளேலிஸ்ட் பதிவுகளை பாருங்க...