Monday, April 25, 2011

கோ - ப.வி

சாதரணமா கேட்கும்போது நம்ப முடியாத கதையா இருக்கறத, நம்பறா மாதிரி, கொஞ்சம் மசாலா தூவி எடுத்திருக்காங்க. ரொம்ப தோண்டினா, முதல் பாதி கொஞ்சம் நீளம், தேவையில்லாத வெண்பனி, அமளி துமளி பாடல்கள் மாதிரி சில குறைகள் தெரியலாம். ஆனா, ரெண்டே முக்கால் மணி நேரமுமே நல்ல எண்டெர்டெயின்மெண்ட். ஜீவா, அஜ்மல், (கொஞ்ச நேரமே வந்தாலும் பிரகாஷ்ராஜ்,) அந்த எடிட்டர், பியா, சிறகுகள் அணி, இப்படி எல்லாருமே கச்சிதமா நடிச்சிருக்காங்க. ஹீரோயின் கார்த்திகாவை தவிர. பாவம் நடிக்கவும் வரலை, அவ்வளவு சூப்பராவும் இல்லை. ஓவர் மேக்கப். அயன் மாதிரியே, இதுலையும், விட்டு போன குட்டி குட்டி டீடெய்ல்ஸை, ஃப்ளாஷ்பாக்ல சொல்றது, டெக்னாலஜிய யூஸ் பண்றதுனு சில விஷயங்கள் இருக்கு. நல்ல திருப்பங்களோட, வசனங்களோட சுறுசுறுப்பான படம். கண்டிப்பா பாருங்க. மிஸ் பண்ணாதீங்க.

எப்பவும் தேவி தியேட்டர்ல சவுண்டு சும்மா பட்டைய கிளப்பும். ஆனா, கோ பார்க்கும்போது ரொம்ப மோசமா இருந்துச்சு. முக்கியமா பாட்டும், பிண்ணனியும் ஒழுங்கா sync ஆகாம, செம்ம கடுப்பு. யார் கண் பட்டுதோ. வேற தியேட்டர்ல பாருங்க.

2 comments:

சுதா SJ said...

//எல்லாருமே கச்சிதமா நடிச்சிருக்காங்க. ஹீரோயின் கார்த்திகாவை தவிர. பாவம் நடிக்கவும் வரலை//

அழாக இருந்தா போதுமே பாஸ் நடிப்பு தேவ இல்லைன்னு நினையுடான்களோ..?

அத விட அழகான பொண்ண திட்டாதீங்க பாஸ்
மனசு வலிக்குது பாஸ்
lol

கா.கி said...

:) உங்கள மாதிரி ஆட்களாலதான், நல்ல நடிகைகள் உருவாக மாட்டேங்கறாங்க.. :P

இந்த பதிவிலும், சமீபத்திய பதிவிலும் கமெண்டியதற்கு நன்றி :)