பதிவிட முடியாமல் போன சில random விஷயங்களை பத்தின தொடர்ச்சி..
ஆயிரம் பித்தலாட்டம் பண்ண அபூர்வ சேனல்
நியூஸ் சேனல்கள் எவ்வளவு தூரம் தரம் இறங்க முடியும்னு (இதுக்கு முன்னாடியும் பெரிய தரம் இருந்ததா தெரியலை) போன வருஷம் மறுபடியும் தெரிஞ்சுது. CNN IBN சேனல், art of living ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டில பண்ண தகிடுதத்தம் வெளிய வந்துச்சு. முன்னாடியே எடுத்த பேட்டிய, லைவ்னு சொல்லி, அவர் ஏதோ கேள்விக்கு பதில் சொல்லாம சமாளிக்கறா மாதிரி டெலிகாஸ்ட் பண்ணாங்க. ஆனா, அந்த பேட்டி ஒளிபரப்பான நாளே, அது பொய்னு தெரிய வந்து, வலைமனைல பல இடங்கள்ள விவாதம் பண்ணாங்க. நிகழ்ச்சிய தொகுத்து வழங்கின சகரிகா கோஸ் (அந்த கோஸ் இல்லை), முதல்ல, இந்த மாதிரி பண்றதெல்லாம் எல்லா சேனல்லயும் சகஜம்னு சொல்ல, ட்விட்டர்ல மக்கள் சகட்டு மேனிக்கு அவங்களை திட்ட, அப்பறம் வேற வழி இல்லாம, போலியா மன்னிப்பெல்லாம் கேட்டாங்க. இப்படி ஒரு கேடுகட்ட விஷயத்தை பண்ணிட்டு இன்னும் அந்த சேனல் ஒளிபரப்பாகிட்டுதான் இருக்கு. மக்கள் எங்கயும் பொங்கி எழல. பாதிக்கப்பட்டவங்க யாரும் எந்த வழக்கும் தொடரலை. இன்னும் நிறைய பேர் அந்த சேனலை விசுவாசமா பாத்துட்டுதான் இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சேனல் முன்னாடியே போலியான ட்விட்டர் அக்கவுண்ட்ல ட்வீட் பண்ணி கேவலமா மாட்டிகிட்டாங்க. இது மாதிரியே நிறைய குற்றச்சாட்டு அந்த சேனல் மேல இருக்கு. வாழ்க ஜனநாயகம் #it only happens in india
டின் டின்
சின்ன வயசுல படிச்ச டின் டின் காமிக்ஸ், கார்டூன் நெட்வொர்க்ல வரும்போதே ரொம்ப ஆர்வத்தோட பார்த்த ஆள் நான். அதை ஸ்பீல்பெர்க் படமா எடுக்க போறாருன்னு ரெண்டு வருஷம் முன்னாடி அறிவிப்பு வந்தவுடனேயே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே கதை தெரிஞ்சிருந்ததுனால படம் பெருசா சுவாரசியப்படுத்தல. ஆனா, அற்புதமான மேக்கிங். performance capture டெக்னாலஜியோட உச்சத்தை தொட்டிருக்காங்க. முக்கியமா, ஒரே ஷாட்ல வர சேஸிங் சீன். அதுல கொடுத்துருக்கற டீடைலிங். அதுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம். அடுத்த பார்ட், டின் டின் ஸீரிஸ்லையே எனக்கு புடிச்ச ரெண்டு கதை. பீட்டர் ஜாக்சன் எடுக்கராராம். அதுக்கும் ஆர்வத்தோட வெய்டிங்.
கொலைவெறி
2010௦ல மாமனாரோட எந்திரன் மாதிரி, 2011ல மாப்பிள்ளையோட கொலைவெறி. ஆடுகளத்தை தவிர சொல்லிக்கறா மாதிரி வேற எந்த படமும் வராத நிலைல (மயக்கம் என்ன லிஸ்ட்ல சேர்க்கலாமா வேணாமானு தெரியலை), இந்தியா மொத்தமும் கொண்டாடற ஸ்டாரா தனுஷ் மாறினதுக்கு ஒரே காரணம்.. இந்த பாட்டை வெச்சு நிறைய case study பண்றதா கூட கேள்விபட்டேன். பாட்டு இப்படி ஆரம்பிச்சா, இப்படிதான் முடியும்னு, ரொம்ப நாளா பாட்டு கேட்கற யார் வேணாலும் சொல்லக்கூடிய predictable டியூன். ஆனா அதுதான் பாட்டோட வெற்றிக்கு காரணம்னு நினைக்கறேன். நிறைய பாராட்டுகளோட, நிறைய குற்றச்சாட்டும் வந்திருக்கு. இந்த பாட்டை பாபுலரைஸ் பண்ண நிறைய காசு செலவழிசாங்க. இவ்வளவு ஹிட்ஸ் வரவேயில்லைன்னு நிறைய சொல்றாங்க. எவ்வளவோ கொடிகள் கொடுத்து மார்க்கெட்டிங் பண்ண ரா ஒன் படத்தோட சம்மக் சல்லோ பாடல் இவ்வளவு வெற்றி அடையலை. விஷயம் இல்லாம எந்த பாட்டுமே இவ்வளவு தூரம் ரீச் ஆகாதுங்கறது என் கருத்து. தினமும் கொலைவெறி பாடலோட தாக்கத்துல, அட்லீஸ்ட் ரெண்டு வீடியோவாவது யூடியூப்ல யாராவது அப்லோட் பண்றதா சொல்றாங்க. அவ்வளவு பேருக்கும் காசு கொடுத்துருப்பாங்களான்னு தெரியலை.
தற்கொலை
தினமும் நிறைய தற்கொலை செய்திகளை படிக்கறோம். தற்கொலைக்கான காரணத்தை பாத்துட்டு, எதாவது கமெண்ட் பண்ணிட்டு போறோம். ஆனா, அக்டோபர் மாசம் நான் படிச்ச ஒரு தற்கொலை நியூஸ், உண்மையிலேயே சுஜாதா கதைல வரா மாதிரி இருந்துது. கோவால, ஐ.டில வேலை செய்யற, லட்சக்கணக்குல சம்பாதிக்கற புருஷன் பொண்டாட்டி, ஆனந்த், தீபா தூக்குல தொங்கிட்டாங்க. தற்கொலைக்கு முன்னாடி ஒரு லெட்டர் வேற எழுதி வெச்சிருக்காங்க. அதுல “ நாங்க எங்க வாழ்க்கைய பரிபூரணமா வாழ்ந்துட்டோம். உலகம் முழுக்க சுத்தியாச்சு. பல இடங்களை பாத்தாச்சு. நாங்க நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சம்பாதிச்சாச்சு. எங்க உயிர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற தத்துவத்துல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. எவ்வளவு தூரம் வாழ உரிமை இருக்கோ, அதே அளவு சாகவும் எங்களுக்கு உரிமை இருக்கு”னு எழுதி வெச்சிருக்காங்க. படிக்கும்போதே எனக்கு ஒரு அமானுஷ்ய ஃபீல் இருந்துச்சு. இதொட, அவங்களோட இறுதி சடங்குக்கு பணமும். அவங்களோட சொத்துக்கள் யார் யாருக்கு போகனும்னும், தெளிவா, கைபட எழுதி வெச்சிட்டு செத்துருக்காங்க. இந்த தற்கொலைய விட, இந்த காரணம்தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு. இப்போ பதிவு போடற வரைக்கும் பாதிச்சிருக்குனா பாருங்களேன். எதனால இந்த மாதிரி எண்ணங்கள் வருதுனு நினைக்கறீங்க?? கமென்ட்ல எழுதுங்க. அதை பத்தி தனியா வேற பதிவுல பேசலாம்.

தொடரும்....
3 comments:
//CNN IBN சேனல்//
இவங்க பண்றதெல்லாம் தகிடுதத்தம், ஆனா இந்த சேனலோட ராஜ்தீப் சர்தேசாய் என்னவோ உலக உத்தமர் மாதிரி ட்விட்டர்ல நம்ம நாட்டையும், நாட்டு மக்களையும் குறை சொல்லிக்கிட்டு இருப்பாரு. அதே மாதிரிதான் NDTV பர்கா தத்தும். இவங்களோட Sanctimony & Hypocrisy தான் கடுப்பேத்துது.
tintin உண்மையாலுமே சுவாரசியம்தான்!
@prasanna
இப்படி நிறைய கைக்கூலிங்க இருக்காங்க.. முதுகெலும்பில்லாத ஆளுங்க
Post a Comment