இப்பதான் குசேலன் நைட் ஷோ பாத்துட்டு உள்ள நுழையறேன். வந்த உடனே டிரஸ் change பண்ணிட்டு ப்ளோக உட்கார்ந்தா, அம்மா திட்றாங்க(time is 1.39am). இருந்தாலும் இந்த மனக்கஷ்டத்த share பண்ணாம தூங்க முடியாது. so here s my short review of kuselan.(blog title புரியுதா?)
படம் ரொம்ப average, dont xpect too much lik rajni said in the film's pooja. தலைவர் appears for around 35mins only and அதுலயும் 2 பாட்டு வேற. எல்லாருக்கும் story தெரிஞ்சிருக்கும், சிம்பிளா சொல்லனும்னா, நம்ம புராணத்துல வந்த குசேலன்-கிருஷ்ணன் ஸ்டோரி. அதுக்கு கொஞ்சம் கலியுக டச் குடுத்து டேக்கிருக்காங்க. சும்மா சொல்லக்கூடாது, நம்ம p.வாசு creativetyku ஒரு கன்ட்ரோல் இல்லாம போச்சு. ஒரு பாடல, ஒரு பெரிய மலைக்கு நடுவுல falls மாதிரி வெச்சு graphics பண்ணிருக்காங்க + கிராமத்து riverla dolphins குதிச்சு விளையாடுது. அதுக்கு அடுத்த scene, அதே riverla மீன் பிடிக்கறாங்க, ஆனா ஒண்ணும் மாட்ட மாட்டேங்குது.
கல்யாண cassette vdo editing பண்றவங்க உஷாரா இருங்க, futurela உங்களுக்கு கடுமையான competition இருக்கு. In most of the scenes, characters, sun glass wearing, ஆனா அந்த எல்லா scenelayum, அவங்க glassla, thermacol, light, camera எல்லாம் reflect ஆகுது. எப்படி யோசிக்கறாங்களோ. படத்துல ரஜினிய விட நயன்தாராவ கொஞ்சம் ஓவரா "காமிச்சுருக்காங்க". nayan's costume designer, போன படத்துல மிச்சம் இருந்த துணிய எல்லாம் வெச்சு costumes design பண்ணிருக்காரு பாருங்க, சிம்பு பாத்தா சொல்லுவாரு
"lightttaaa"......
வடிவேலு காமெடி - b grade. But அவரு குடுக்குற expressions, நெஜமாவே super. songs எல்லாம் கேக்கணுமே, ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும்போது, நிறைய பேரு அப்படியே எழுந்து வெளிய போறாங்க பாருங்க, கண் கொள்ளா காட்சி. Music director, namea, g.v.பிரகாஷ்
சுமார் னு மாத்திக்கலாம். எதையும் காத பொத்திகிட்டு கூட கேக்க முடியல. படத்துல ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு. எல்லாரும் வராங்க - போறாங்க. பசுபதி, படம் fulla, "ஏன் இந்த படத்துல கமிட் ஆனோம்" மாதிரி ஒரு ரியாக்ஷன் குடுக்குறாரு.
climaxla அழுக இருக்கு ஆனா அழுத்தமே இல்ல. படம் முடிஞ்சா அப்பறம், ஒண்ணுமே ஒட்டல. ஒரே ஒரு சீன் worth seeingnu சொன்ன, tat r.சுந்தரராஜன் and
rajni conversation scene is good. r.
சுந்தரராஜன் - நெஜமாவே நல்ல ரோல். ஒரு சிம்பிள் படத்த, தேவையே இல்லாம, heroism, மொக்க graphics, glamour, vulagarity, cheap comedies போட்டு, போட்டு தள்ளிட்டாங்க. correcta சொல்லனும்னா, this film is on par with baba. U can c it if u don hav any work to do and hav a good company. Nagu anna ramesh anna, ரொம்ப பாவம். அம்மா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க, நான் போய் தூங்க try பண்றேன். ஏதாவது கெட்ட கனவு வந்தா, குசேலன் டிக்கெட்ட தலைமாட்ல வெச்சுக்கோங்க.
remember tat azhagiya theeye dailogue?? "Konjam commerciala panrom"