Monday, March 30, 2009

ஒரு வழியா...

இப்படியெல்லாம் busy ஆவேன்னு கனவுல கூட நினைச்சதில்லை. ப்ளோக் பக்கம் வர முடியாம போக முக்கிய காரணம், எங்க காலேஜ் சார்பா, ஜெயா டிவில ஒரு நிகழ்ச்சியில participate பண்றோம். அதுக்கான practice + shooting. வெற்றிகரமா, முதல் மூணு rounds win பண்ணிட்டோம். மீதி இருப்பது, quarter, semi and final மட்டுமே. வெற்றி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. நிகழ்ச்சிய, ஞாயிறு மதியம் 12-1 பார்க்கலாம்.

இது மட்டும் இல்லாம, சில பல assignments வேற. அதற்காகவும் இராப்பகலா வேலை. எனக்கு time management வேற அவ்வளவா வராது. So, கொஞ்சம் சொதப்பவும் செய்யறேன். இருந்தாலும், இன்னும், பெருசா ஒண்ணும் பாதிப்பு வரலை. என்ன, சரியா தூங்க முடியறதில்லை. மத்தபடி எல்லாம் ஓகே. எல்லாம் okனு சொல்லும்போதுதான் இன்னொரு மேட்டர் ஞாபகம் வருது. நேத்து, "யாவரும் நலம்" படம் பார்த்தேன். இவ்வளவு நாளா, stereo typela இருந்த horror genre, இந்தப் படம் மூலமா, வேற வடிவம் எடுத்திருக்கு.

நிஜமாவே, நல்லா இருந்துச்சு. பாட்டு மட்டும் செம்ம மொக்கை. ஆரம்பத்துல கொஞ்சம் நாடகத்தனமா இருந்தாலும், போகப் போக interesting. அதுவும், கிளைமாக்ஸ் சூப்பர். P.C. ஸ்ரீராம், நல்லா பண்ணிருக்கார். (DI உதவியோட). இந்தப் படத்தை, ஹாலிவுட்ல ரீமேக் பண்றதா செய்தி. நல்ல விஷயம். ஒரு வழியா, கொஞ்சம் ஒரிஜினலா ஒரு படம் பண்ணிருக்காங்க. படத்துல, ஓரிரு continuity mistakes இருக்கு, கவனிச்சேளா???

heroine, make-up இல்லாம வந்தா, இன்னும் பயங்கரமா இருக்கும்

Tuesday, March 17, 2009

ஒரு மொக்கை...


மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..


கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது

அப்படியே ஆகுகன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.


ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
யாரப்பா.. நீ?ன்னு கேட்டாராம்..


இவன் சொன்னானாம்...மொக்கைமி


பாவம்.. அவனுக்கு சாவே வரல!

Monday, March 16, 2009

மற்றும் பல...

காலேஜ்ல பயங்கராம வேலை குடுத்துகினே இருக்காங்க. இதுக்கு நடுவுல, music events வேற வருது. என்ன பண்றதுன்னு தெரியல. எனக்கு time management சரியா வராது, இருந்தாலும், இவ்வளவு வேலைய ஒரே நேரத்துல manage பண்றது பொதுவா எல்லாருக்குமே கஷ்டம்னு நினைக்கறேன். So, blog பக்கம் வர முடியலன்னா (both urs and mine) தப்பா நினைக்காதீங்க.

--------------------------------------------------------------------------------------------------

அடுத்த முக்கியமான விஷயம், கார்த்திக் தம்பி ஒரு tag குடுத்துருக்காரு. மேல சொன்ன விஷயத்துனால, எனக்கு time அவ்வளவா இல்லை. எனக்கு யோசிச்சு bloga கொஞ்சம் time வேணும். இதுக்கு முன்னாடி நீங்க குடுத்த theatre tag still pending. அதுக்கும் ஒரு தடவை sorry. கூடிய விரைவுல, அடுத்தடுத்து ரெண்டையும் ப்ளோகறேன்.

--------------------------------------------------------------------------------------------------

காலேஜ்ல என்னை சுற்றி சில கிசுகிசுக்கள் வருது. என் பெர்சனாலிடிக்கு இது கொஞ்சம் ஓவர். அதனால, எல்லாத்தையும் இதோட நிறுத்திருங்க. எனக்கு அவ்வளவு scope இல்லை. ஒரு எதிர்கால சினிமா ஆளுக்கு, இதெல்லாம் சகஜமாக இருந்தாலும், இத மாதிரி, ஒரு பெண்ணை சேர்த்து வெச்சு பேசுவதை நான் விரும்பலை. (மத்தவங்களுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம் ;). Default celebrity reply will be: "இந்த கிசுகிசுக்கள் எல்லாத்தையும் பார்த்தா எனக்கு சிரிப்புதான் வருது. எங்களுக்குள்ள இருப்பது, வெறும் நட்பு மட்டும்தான். மத்தபடி ஒண்ணும் இல்லை" :)

--------------------------------------------------------------------------------------------------

Saturday, March 14, 2009

ஒரு விளம்பரம்.... :)

நம்மையும் மனுஷன்னு மதிச்சு, ஒரு ஆள் interview எடுத்துருக்காரு. அத அவரோட சைட்லயும் போட்டுருக்காரு. இதோ அந்த லிங்க்.


அநேகமா, என் பெயர போட்டு குடுத்தது, அண்ணன் LLதான்னு நினைக்கிறேன். அவ்வளவு நல்லா answer பண்ணல, இருந்தாலும், நமக்கு ஒரு வெளம்பரம்.... ;)


update: அதேபோல, நம்மையும் மனுஷன்னு மதிச்சு, ரெண்டு பேர் கலாய்க்கறாங்க. இதோ அந்த லிங்க்

லாய்

என்ஸாய்....

Tuesday, March 10, 2009

எங்கம்மா அப்பவே சொல்லிச்சு...

உங்களுக்கு ஜாதகம், ஜோசியம், கை ரேகை, கால் ரேகை இத மாதிரி நம்பிக்கையெல்லாம் இருக்கா?? எனக்கு இருக்கு.. ஆனா அளவு கடந்த நம்பிக்கையெல்லாம் இல்லை. என் அம்மா நல்லா ஜாதகம் analyse பண்ணுவாங்க. கடந்த குரு பெயர்ச்சி அப்போ என்கிட்டே சொன்னாங்க, "நீயே போய் எந்த பொறுப்பையும் எடுத்துக்காத, உன்னால ஒழுங்க செய்ய முடியாது. கெட்ட பெயர் வந்துரும். So, பார்த்து நடந்துக்க", அப்படீன்னு. சிம்பிளா சொல்லனும்னா, "சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்காத"னு சொன்னாங்க.

நான் கேட்டனா? இல்லை. வர வேலையெல்லாம், "its ok, சொல்லுங்க. its ok சொல்லுங்க"னு ஏத்துகிட்டு, சொதப்பிகிட்டு இருக்கேன். இப்போ ஊட்டி போனது, ஒரு வீடியோ feature எடுக்க. என் groupla நான்தான் camera handling. shoot பண்ணிட்டு இப்ப இங்க வந்து capture பண்ணலாம்னு, என் friend கிட்ட, fireware வாங்க சொல்லி, அத என் systemla connect பண்ணா, அது work ஆகல. அப்படி இப்படி ஏதோ செஞ்சு, work பண்ண வெச்சா, sound card work ஆகல. sound card work அஆகலன்னா adobe premiere work ஆகாது. வேற softwarela capture பண்ணலாம்னு அதுல போட்டா, முதல் 30 நிமிஷம் கரெக்டா வந்துச்சு. அதுக்கு அப்பறம், cassettela ஏதோ problem வந்து எடுத்த interview எல்லாம் struck ஆகுது.

I feel really sick. தப்பே பண்ணாம, உழைச்சது எல்லாம் வீணா போகும்போது வர கோபமும், சுய இரக்கமும், அழுகையும் விவரிக்கவே முடியல. இப்ப மட்டும் இல்லை. ஒரு ரெண்டு மூணு மாசமாகவே (techofes, jaya tv incidents) நிறைய சொதப்பல்ஸ். நான் மட்டும் பாதிக்கப் படாம, என் ராசியால மத்தவங்களும் பாதிக்கப் படறாங்கன்னு நினைக்கும்போது தான் வருத்தமா இருக்கு. இதை படிக்கும்போது நீங்க என்ன நினைப்பீங்கன்னு ஓரளவு ஊகிக்க முடியுது. இதெல்லாமே psychologicala, நானாகவே நினைப்பதா கூட இருக்கலாம். "உன் வாழ்கை உன் கையில், இத மாதிரி மூட நம்பிக்கையெல்லாம் வளர்த்துக்காத, dont worry" மாதிரியான
கமெண்டுகள் போடவேண்டாமென கேட்டுகொள்கிறேன். Iam ready to face the brute asusual. நல்லதே நடக்குமென நம்புவோம்.

p.s.1 - இந்தப் பதிவு, என் தன்னம்பிகையை பிரகடனம் செய்ய எழுதியது அல்ல. யாரிடமாவது சொல்லனும்னு தோணிச்சு, சொல்றேன்.

p.s.2 - p.s.1 தன்னடக்கத்துல தற்பெருமைக்காக போட்டது அல்ல. இந்த p.s.ம் அப்படியே.


Monday, March 9, 2009

மறுபடியும் பார்ரா....

இப்ப பூர்ணா அக்கா எனக்கு அவார்ட் givings...நான் அவகளுக்கு அவார்ட் குடுத்த ஒரே காரணத்துனாலதான் குடுக்கராங்களோன்னு தோணுது... இருந்தாலும் accountla keeping... குடுத்த அவார்ட் "significant blogger award". காரணம் "for constantly encouraging me in the blogosphere"... encouraging எல்லாம் நமக்கு சகஜம். இதுக்கு ஒரு award குடுத்து என்னை கௌரவப் படுத்தியதற்கு நன்றி.. :)

இதோ அந்த award

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo7w2jmowm1Rr7zE1-iiUo5XZuTVGncHnB34EPpMqjHNsDoW-9B1Xe1EomRAKM2f77v79u_dayu1UP1AFRn7jBVfHC1FcAbnfqMUQKgCPWl0X_Sjlbfip-7D61cFRutZnKf-nh33acYfU/s320/SignificantBloggerAwards.jpg

Sunday, March 8, 2009

அடுத்த அவார்ட்....



நிஜ வாழ்க்கைல கூட நான் அடுத்தடுத்து விருதுகள் வாங்கினது இல்ல. ஆனாஇங்க குடுத்துகினே இருக்காங்க. இப்ப அவார்டியது, நம்ம lancelotஅண்ணன்.என்ன அவார்ட்னு பாத்தீங்கன்னா, " AWARD FOR CUTENESS". தமிழ்ல எப்படி சொல்லுவாங்கன்னு தெரியல. அதாவது, அழகா (நான் இல்லை, என் blog) இருப்பதால குடுக்குற அவார்ட். இதுல இன்னொரு மேட்டர் இன்னானா, என்னை பற்றி ஒரு 10 விஷயம் தம்பட்டம் அடிச்சுக்கணும்.

என்னை பற்றி சொல்ல முக்கியமா ஒண்ணும் இல்லை. So, lancelot சொன்ன சில விஷயங்கள நான் அடாப்ட் பண்ணிக்கிட்டு, என் ஸ்டைல்ல சில விஷயங்களையும் சேர்த்து சொல்றேன். விருப்பம் இருந்தா படிங்க, இல்லைனாலும் படிங்க.

1. நிறைய பாட்டு கேட்பேன். நிறைய புக்ஸ் படிப்பேன். கொஞ்சம் சுமாரா பாடுவேன். நான் பாடுவது முக்கால்வாசி கேள்வி ஞானத்தாலா மட்டுமே... பல போட்டிகள்ல, நிறைய பரிசுகளும், மொக்கைகளும் வாங்கிருக்கேன்...

2. (உபயம்: lancelot) என் தலைமுடி படியவே படியாது.. எவ்வளவு ட்ரை பண்ணாலும், அது என் நெற்றியில வந்து விழும். சில சமயம், என் முகம் கூட சரியா தெரியாது. வூட்ல வசவு விழுந்துகிட்டே இருக்கும்...

3. (உபயம்: lancelot) ரொம்ப சுத்தமா சாப்பிடுவேன் (நம்புங்க). அதாவது, கீழ சிதறாம, உள்ளங்கைல படாம, ரொம்ப கலீஜ் பண்ணாம சாப்பிடுவேன்.

4. (உபயம்: lancelot) யாராவது இங்கிலிஷ்ல தப்பா பேசுனா கண்டுபிடிச்சிடுவேன், ஆனா எனக்கு பேசும்போது கொஞ்சம் தகராறு பண்ணும். அதற்கான காரணத்த முன்னாடியே சொல்லிட்டேன்...

5. (உபயம்: lancelot) சூப்பரா பொய் சொல்லுவேன். உண்மை மாதிரியே சொல்லுவேன். சில சமயம் நான் சொல்ற உண்மை கூட அவ்ளோ நேர்த்தியா இருக்காது. ஆனா, LL சொன்னா மாதிரி, என் பொய்யினால யாருக்கும் பாதிப்பு வராம பாத்துப்பேன்..

6. (உபயம்: lancelot) குளிப்பது எனக்கு ஒரு வேலை மாதிரி. அதனால, எனக்கா தோணிச்சுனா மட்டுமே, லீவு நாட்கள்ல குளிப்பேன். மத்த நாட்கள்ல வேற வழி இல்லை :(...

7. முடிஞ்சவரை யாரையும் பகைச்சுக்க மாட்டேன். எல்லாரும் ஒரு வகைல நல்லவங்கதான்னு நினைக்கற பார்ட்டி நான். இதனால பல முறை, பல பேர் கிட்ட பல்பு வாங்கிருக்கேன். (இப்ப கூட latesta காலேஜ்ல ஒண்ணு வாங்கினேன்)...

8. என்னால, மத்தவங்க போல, கவிதை, பூக்கள் மாதிரி, சில விஷயங்கள ரசிக்கத் தெரியாது. ஏன்னு தெரியல. சம்திங் fundamentally wrong with the ethos ah???...

9. சுலபத்துல கோபம் வராது. ஆனா வந்தா, பயங்கரமா வரும். நிஜமாகவே, கோபம் கண்ணை மறைக்கும். மரியாதையே பார்க்காம கத்திடுவேன். அடிக்க சக்தி இல்லைனாலும், அடி வாங்க சக்தி இருக்கு. அதனால, சில சமயங்கள்ல கை நீட்டவும் தயங்க மாட்டேன்.

10. புதுசா ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும்னு விரும்புற ஆள். Repetition பிடிக்காது. For ex: நிறைய பேர் பண்றா மாதிரி, போட்டியில, ஒரு முறை பாடி ஜெயிச்ச பாடல, அடுத்த முறை பாடமாட்டேன். (ஒரே ஒரு exception காதல் கசக்குதய்யா)..

எக்ஸ்ட்ராவா ஒரு விஷயம்
11. எனக்கு கூச்ச சுபாவாம் ஜாஸ்தி. சொன்னாதான் யாரும் நம்பமாட்டாங்க :)

அவ்வளவே... "எனக்கு இன்னும் ஏன் இந்த அவார்ட் குடுத்தாங்கன்னு தெரியல" அப்படீன்னு பெருந்தன்மையா சொல்லமாட்டேன். என் மேல, அண்ணன் வெச்சிருக்குற நம்பிக்கைய காப்பாற்ற முயற்சி பண்றேன். Thanks For the AWARD தல.. ஆனா, மறுபடியும் நீங்க பண்ண பெரிய தப்பு, மத்தவங்களுக்கு விடாம, நீங்களே நிறைய பேருக்கு AWARD குடுத்தது. மென்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆனாலும் நீங்க ஒரு ஆள விட்டுட்டீங்க. அது, poorna...

அவங்க blog ரொம்ப எளிமையா, அழகா இருக்கு. பதிவுகள தேவையில்லாம இழுக்காம, short & ஸ்வீட்டா முடிக்கறாங்க. எழுதும் நடையும் நல்லா கீது. So i give her this "AWARD FOR CUTENESS"... ஜோரா ஒரு முறை கிளாப்புங்க...
மேடம், நீங்க செய்ய வேண்டியது, உங்கள பற்றி 10 விஷயங்கள ப்லோகனும்/braganum. அவங்க blog லிங்க் --> இங்க <--

மறுபடியும்
நம்ம lancelot அண்ணாத்தைக்கு நன்றி...



Sunday, March 1, 2009

ஊட்டில ஒரு கான்வெண்டு....

காலேஜ் industrial visitகாக, நாளைக்கு ஊட்டி கிளம்பறேன்.. so, ஒரு வாரத்துக்கு no blogging... ப்ளோகில் பதிவ, சில செய்தி கிடைக்கும்னு நம்பறேன்... வாழ்த்தி வழி அனுப்புங்கள்... கட்டாயமாக அடுத்த ஞாயிறு ஒரு பதிவு போடறேன்.. அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது,
கார்த்திக்
கார்த்திக்
கார்த்திக்
கார்த்திக்
கார்த்திக்...