என்னை பற்றி சொல்ல முக்கியமா ஒண்ணும் இல்லை. So, lancelot சொன்ன சில விஷயங்கள நான் அடாப்ட் பண்ணிக்கிட்டு, என் ஸ்டைல்ல சில விஷயங்களையும் சேர்த்து சொல்றேன். விருப்பம் இருந்தா படிங்க, இல்லைனாலும் படிங்க.
1. நிறைய பாட்டு கேட்பேன். நிறைய புக்ஸ் படிப்பேன். கொஞ்சம் சுமாரா பாடுவேன். நான் பாடுவது முக்கால்வாசி கேள்வி ஞானத்தாலா மட்டுமே... பல போட்டிகள்ல, நிறைய பரிசுகளும், மொக்கைகளும் வாங்கிருக்கேன்...
2. (உபயம்: lancelot) என் தலைமுடி படியவே படியாது.. எவ்வளவு ட்ரை பண்ணாலும், அது என் நெற்றியில வந்து விழும். சில சமயம், என் முகம் கூட சரியா தெரியாது. வூட்ல வசவு விழுந்துகிட்டே இருக்கும்...
3. (உபயம்: lancelot) ரொம்ப சுத்தமா சாப்பிடுவேன் (நம்புங்க). அதாவது, கீழ சிதறாம, உள்ளங்கைல படாம, ரொம்ப கலீஜ் பண்ணாம சாப்பிடுவேன்.
4. (உபயம்: lancelot) யாராவது இங்கிலிஷ்ல தப்பா பேசுனா கண்டுபிடிச்சிடுவேன், ஆனா எனக்கு பேசும்போது கொஞ்சம் தகராறு பண்ணும். அதற்கான காரணத்த முன்னாடியே சொல்லிட்டேன்...
5. (உபயம்: lancelot) சூப்பரா பொய் சொல்லுவேன். உண்மை மாதிரியே சொல்லுவேன். சில சமயம் நான் சொல்ற உண்மை கூட அவ்ளோ நேர்த்தியா இருக்காது. ஆனா, LL சொன்னா மாதிரி, என் பொய்யினால யாருக்கும் பாதிப்பு வராம பாத்துப்பேன்..
6. (உபயம்: lancelot) குளிப்பது எனக்கு ஒரு வேலை மாதிரி. அதனால, எனக்கா தோணிச்சுனா மட்டுமே, லீவு நாட்கள்ல குளிப்பேன். மத்த நாட்கள்ல வேற வழி இல்லை :(...
7. முடிஞ்சவரை யாரையும் பகைச்சுக்க மாட்டேன். எல்லாரும் ஒரு வகைல நல்லவங்கதான்னு நினைக்கற பார்ட்டி நான். இதனால பல முறை, பல பேர் கிட்ட பல்பு வாங்கிருக்கேன். (இப்ப கூட latesta காலேஜ்ல ஒண்ணு வாங்கினேன்)...
8. என்னால, மத்தவங்க போல, கவிதை, பூக்கள் மாதிரி, சில விஷயங்கள ரசிக்கத் தெரியாது. ஏன்னு தெரியல. சம்திங் fundamentally wrong with the ethos ah???...
9. சுலபத்துல கோபம் வராது. ஆனா வந்தா, பயங்கரமா வரும். நிஜமாகவே, கோபம் கண்ணை மறைக்கும். மரியாதையே பார்க்காம கத்திடுவேன். அடிக்க சக்தி இல்லைனாலும், அடி வாங்க சக்தி இருக்கு. அதனால, சில சமயங்கள்ல கை நீட்டவும் தயங்க மாட்டேன்.
10. புதுசா ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும்னு விரும்புற ஆள். Repetition பிடிக்காது. For ex: நிறைய பேர் பண்றா மாதிரி, போட்டியில, ஒரு முறை பாடி ஜெயிச்ச பாடல, அடுத்த முறை பாடமாட்டேன். (ஒரே ஒரு exception காதல் கசக்குதய்யா)..
எக்ஸ்ட்ராவா ஒரு விஷயம்
11. எனக்கு கூச்ச சுபாவாம் ஜாஸ்தி. சொன்னாதான் யாரும் நம்பமாட்டாங்க :)
அவ்வளவே... "எனக்கு இன்னும் ஏன் இந்த அவார்ட் குடுத்தாங்கன்னு தெரியல" அப்படீன்னு பெருந்தன்மையா சொல்லமாட்டேன். என் மேல, அண்ணன் வெச்சிருக்குற நம்பிக்கைய காப்பாற்ற முயற்சி பண்றேன். Thanks For the AWARD தல.. ஆனா, மறுபடியும் நீங்க பண்ண பெரிய தப்பு, மத்தவங்களுக்கு விடாம, நீங்களே நிறைய பேருக்கு AWARD குடுத்தது. மென்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆனாலும் நீங்க ஒரு ஆள விட்டுட்டீங்க. அது, poorna...
அவங்க blog ரொம்ப எளிமையா, அழகா இருக்கு. பதிவுகள தேவையில்லாம இழுக்காம, short & ஸ்வீட்டா முடிக்கறாங்க. எழுதும் நடையும் நல்லா கீது. So i give her this "AWARD FOR CUTENESS"... ஜோரா ஒரு முறை கிளாப்புங்க...
மேடம், நீங்க செய்ய வேண்டியது, உங்கள பற்றி 10 விஷயங்கள ப்லோகனும்/braganum. அவங்க blog லிங்க் --> இங்க <--
மறுபடியும் நம்ம lancelot அண்ணாத்தைக்கு நன்றி...
5 comments:
Good Read and Congrats Pooma...
bit adichavakittayae bit adichaa paaru...un thiramaya paaratren...
Hi KK! Thank you for your award :)And you have been awarded too......Please visit this link to pick your award
http://sayhai2poorna.blogspot.com/2009/03/blog-awards.html
@poorna
tit for tat maadhiriya??? ;)
Hi KK! appaddiyum sollalam............. but the truth is I am very vetti now...ennakkum polluthu poga vendama :)
@poorna
இப்படி சட்டுனு உண்மைய சொல்லிட்டீங்களே மேடம்...
வெட்டியா இருந்தா நிறைய ப்ளோக வேண்டியதுதானே..
அத விட்டுட்டு என்ன சின்ன புள்ளத்தனமா அவார்ட வெச்சு வெளையாட்டு???
ஆனாலும், குடுத்ததற்கு இன்னொருதபா டேங்க்ஸ்....:)
Post a Comment