Monday, August 17, 2009

சிகாமணியின் சின்னபிள்ளைத்தனமான கதைகள் -3 (அவ்ளோதான்)

சி.சி.கதை 1 --> இங்க
சி.சி.கதை 2 --> இங்க

விடாம தொடர்ந்தான் சிகாமணி, "என்னதான் producer இளிச்சவாயா இருந்தாலும், நமக்கும் கொஞ்சம் நேர்மை வேணும்டா. அதனால, பாவப்பட்ட producer யாருவேனாலும் இந்த கதைய எடுத்துக்கலாம்"

"நீ கதைய முதல்ல சொல்லு" என நான் அவசரப்படுத்த,

"அவசரப்படாத, நம்ம ஹீரோ ஒரு ஏழை. அவருக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். அதோட ஒரு தங்கச்சி வேற, அந்த தங்கச்சிக்கு வயசு 4",

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி மச்சான்???"

"அட, இரண்டு குழந்தைக்கு நடுவுல ஒரு இடைவேளைனு வெச்சிக்க, கதைய கேளு, நம்ம ஹீரோவுக்கு ஒரே ஒரு வேலைதான் தெரியும், அதாவது அப்பளம் விக்கறது. நம்ம அம்மா செஞ்சு தருவாங்க, ஹீரோ வித்துட்டு வருவாரு"

"முதல் சீன்ல, நம்ம ஹீரோ, தான் தூங்கியெழுந்த கிழிஞ்ச படுக்கைய மடிக்கராறு, அப்பறமா பல்லு வெளக்கி தண்ணி குடுக்கிறாரு, அப்புறம் குளிக்கராறு, அப்புறம்........." நான் பொறுமையிழந்து, "கொட்டிகிராறு, ஜீரணம் ஆவுது, ஏப்பம் விடுவாரு, இதெல்லாம் விடு, நீ கதைய மட்டு சொல்லு" என எரிச்சலாக, அவன் தொடர்ந்தான்,

"இருக்குற அப்பளத்தை எடுத்திட்டு போறாரு. ஆனா அந்த அப்பளத்த யாருமே வாங்கலை. இந்த இடத்துல, நம்ம சமுதயாம் எப்படி அப்பளம்னு ஒரு அயிட்டம் இருக்கறதையே மறந்து, pizza வெறி பிடிச்சி அலையராங்கன்னு, montagela காமிக்கறோம். சாயங்காலம் வரை எதுவுமே போனி ஆகாம, நம்ம ஹீரோ வீட்டுக்கு வராரு"

"வீட்டுக்குள்ள நுழையும்போதே கவனிக்கராறு. ஹீரோவோட தங்கச்சி பாப்பா ஒரு பக்கம் அழுவுது, இன்னொரு பக்கம் அம்மா சோகமா இருக்காங்க. வீட்டு நடுவுல ஒரு மெழுகுவர்த்திய கொளுத்தி வெச்சிருக்காங்க. கரெண்ட் இல்லையே.
அம்மா ஹீரோவா பார்த்து கேட்கறாங்க, "பாப்பாவுக்கு ரொம்ப பசிக்கிது. வீட்ல எதுவுமே இல்லை. அப்பளம் வித்த காசுல ஏதாவது வாங்கிட்டு வாப்பா"னு.

நம்ம ஹீரோவுக்கோ பயங்கர குழப்பம். "கைல காசு இல்லை, தங்கைக்கு பசிக்குது, வீட்ல ஒண்ணும் இல்லை. என்ன செய்ய"னு think பண்றாரு. தங்கைய பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, தன் கைல இருக்குற அப்பளத்தை பாக்குறாரு. அப்பளத்தை பாக்குறாரு, அம்மாவ பாக்குறாரு, விளக்க பாக்குறாரு, தங்கைய பாக்குறாரு"

"டேய் போதும் சொல்லுடா"

"இப்படி மாறி மாறி பார்த்து என்ன பண்றாருன்னா.........." என கண்கலங்க ஆரம்பித்தான். நான் பதறிப் போய் "டேய் கதைய சொல்லிட்டு feel பண்ணுடா" என்றேன். அவன், "சொல்றேன் மச்சான். அப்புறம் என்ன பண்றாருன்னா, தன் கைல இருக்குற அப்பளக் கட்டுலேர்ந்து ஒரே ஒரு அப்பளத்தை எடுத்து, அந்த விளக்குல சுட்டு, தங்கச்சிக்கு குடுக்கறாரு பாரு........."

நான் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தேன்.

தூரத்தில் அவன் குரல் கேட்டது, "டேய் அடுத்த முறை முழு கதைய சொல்லாம விட மாட்டேன். இப்ப பொழச்சிப் போ".....

அவனை நான் இன்னொரு முறை பார்ப்பதாக இல்லை......

சிகாமணியின் சேட்டைகள், இப்போதைக்கு முற்றும்...

5 comments:

kanagu said...

Sigamanikku periya ethirkalam iruku :P
sentiment ah puzhuchitar :) aana andha oru paatu vara varavaraikum katha kaetu irundurukalam ;-)

கலையரசன் said...

அடுத்த தடவை சிகாமணிய பார்த்தா தங்கச்சி அப்பளத்தை சாப்டிச்சான்னு கேட்டு சொல்லுங்க!

கா.கி said...

@kanagu
idhukke kaadhula blood vandhaachu...

@kalai
adhula innoru sogam. appalam odanjiduchu... :(

இராகவன் நைஜிரியா said...

இப்போ வருகின்ற தமிழ் சினிமாவுக்கு தேவையான கதாசியர்தான் உங்க சிகாமணி..

இன்னும் இரண்டு இடுகைகள் போட்டால் நீங்க 100 இடுகைகள் போட்டவங்க பட்டியலில் சேர்ந்துவிடுவீங்க.

அட்வான்ஸ் வாழ்த்துகள்.

கா.கி said...

@இராகவன்..
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி...
அந்த 100 சமாசாரம் நானே கவனிக்கலை.
அதைச் சொன்னதற்கு இன்னொரு நன்றி....