Sunday, November 15, 2009

உலகம் சூப்பரா அழியுதுடோய்.....

அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அழகா உலகத்தை அழிக்கறாங்க பாருங்க. கண்கொள்ளா காட்சி. அட அட அட.சொல்ல வார்த்தையே இல்லை. கிராபிக்ஸ்ல விளையாடியிருக்காங்க. இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை. வருமான்னும் தெரியலை. என்ன, இந்த டைரக்டரோட The Day After Tomorrow பார்க்கும்போதும் நான் இப்படிதான் நினைச்சேன். Raising the bar அப்படின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி, அந்த படத்தை விட, இந்த படம் ஒரு விஷுவல் விருந்து. 2012 படத்துலதான் இந்த கூத்தெல்லாம்.

கதைனு பார்த்தா..... இந்த மாதிரி படத்துக்கு கதை ரொம்ப அவசியமா?? இங்க கதைன்னு பார்த்தோம்னா, இத மாதிரி படத்துக்கு இருக்குற ஒரு default கதைக்களம்தான். உலகம் அழியுது. ஒருத்தர் அத தொலைநோக்கராறு. அதுக்கான ஏற்பாட, அரசாங்க உதவியோட செய்யறாரு. நினைச்சத விட சீக்கிரமாவே அந்த அழிவு வர, பல மக்கள் மண்டையப் போட, சில மக்கள் தப்பிக்கறாங்க. இதுக்கு நடுவுல, நம்ம ஹீரோ, அவரோட மனைவி மக்களோட எப்படி தப்பிக்கராருன்னு, லைட்டா ஊறுகா மாதிரி செண்டிமென்ட தொட்டுகிட்டு, காமிக்கறாங்க.

முழுக்க முழுக்க VFX ஆதிக்கம்தான். படம் பார்க்கும்போது வேற ஒண்ணும் யோசிக்கவே தோணாது. கலிபோர்னியா அழியும்போது, வெள்ளை மாளிகை நொறுங்கும்போது, yellow stone எரிமலை உருவாகும்போது, ஹிமயமலைல கடலலை வரும்போது இப்படி பல காட்சிகள் இன்னும் கண்ணுலேயே நிக்குது. தமிழ் சினிமா மாதிரி, இந்த படத்துலயும், ஹீரோவுக்கு எதுவுமே ஆகாம, கடைசி வரை, அவர் பல மயிறிழைகள்ல தப்பிக்கராறு. அதுலயும் ஒரு சீன், விஜய் படம் பாக்கறா மாதிரியே இருந்துச்சு. ஒரு சில டச்சிங்கான சீன்கள் இருந்தாலும், அதனால பெரிய பாதிப்பு எதுவும் இல்ல.   

படத்துல முதல்ல ஒரு இந்தியர்தான் ஆபத்தை கண்டுபுடிச்சு சொல்றாரு. தப்பிக்கறதுக்கு கட்டற பெரிய நோவா ஆர்க் கப்பலுக்கு போக, அவருக்கு பிளைட் அனுப்பறாரு அவர் நண்பர், ஆனா அது அவரை பிக் அப் பண்ணாம, கடைசியில தன குடும்பத்தோட அவர் இறந்துபோராறு. எல்லா விஷயமும் இந்தியாவிலிருந்து போய், அது நமக்கே ரிவர்ஸ்ல ஆப்பா மாறுதுன்னு ரொம்ப அழகா காமிச்சிருக்கார் இயக்குனர். (அவர் அப்படி நினைக்கலைன்னா என்ன, நான் சொல்லுவேன். எப்படி நம்ம நுண்ணரசியல் கண்டுபிடிப்பு??)

என்னதான் இருந்தாலும், இது போல ஒரு படத்தை எடுத்ததுக்காக, டைரக்டர் Roland Emmerich மற்றும் கொலம்பியா பிக்ச்சர்சுக்கும், முக்கியமா கிராபிக்ஸ் பண்ண Uncharted Territory, Digital Domain, Double Negative, Scanline, Sony Pictures Imageworks ஆகிய நிறுவனங்களுக்கு மூன்றாவது வட்டம் சார்பாகவும், என் ரசிகர் மன்றம் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுகள். படத்தை கண்டிப்பா ஒரு பெர்ய ஸ்க்ரீன்ல, நல்ல சவுண்டோட பாருங்க. என்னுடைய ஆதரவு தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளுக்கு. அடுத்ததா நான் எதிர்பார்க்கும் படம், ஜேம்ஸ் கேமரூனோட "அவ்தார்". Lets Wait......


விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா??

16 comments:

உங்கள் ராட் மாதவ் said...

//என் ரசிகர் மன்றம் சார்பாகவும், மனமார்ந்த பாராட்டுகள். //

Super Punch :-))

உங்கள் ராட் மாதவ் said...

Super Review pa... Congrats...

கா.கி said...

@rad - nandri :)

Prasanna said...

//அவர் அப்படி நினைக்கலைன்னா என்ன, நான் சொல்லுவேன்//
ஹா ஹா ஹா..

விமர்சனம் நல்ல இருக்கு.. கடைசி பட டச் சூப்பர் :)

Ando-Karthik said...

//விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா??//

Erkanave Ajith padam paarthaala thaan Inda padathoda karuve uruvaachu theriyuma?? Eana 2012 la thala yoda 50 film varudu.. :D

கா.கி said...

@prasanna
நன்றி... வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்

கா.கி said...

@karthik
இந்த தன்னடக்கம்தான் விஜய் ரசிகர்கள் கிட்ட எனக்கு பிடிச்சதே...

kanagu said...

nalla review kaki... aana ipdi kathaye ilama padam edukurathu sema mokka...

general ah ve enaku ronald Emmerich padam avalava pudikkathu...

/*விஜய் படம் பாத்து உலகம் அழியராப்போல ஒரு கான்செப்ட் இருக்கு. நடிக்கறீங்களா?*/

he he he :)

கா.கி said...

@kanagu
அவர் படத்துக்கு கதையே வேணாம்.... எனக்குத் தெரிஞ்சு, பிரம்மாண்டத்தையும், கதையையும் ஒரு சேரக் கலந்து கொடுக்குற இயக்குனர்கள் மூணு பேர்தான்.. james cameron, steven spielberg அப்பறம் நம்ம ஷங்கர்....

Unknown said...

ethana thadava solrathu nalla iruku nalla iruku nu poda , dubbing review in tamil

Jay said...

kk anna:

naan final a ungaloda oru blogpost a complete a padichittaen! yay! :) :) naan ezhuththa kootti kootti padikaradhukkulla sunrise ae vandhudum! adhunaala dhaan idhuvaraikkum first para vai thaandi endha post a yum padichadhu illai....but i wanted to read this 2012 review completely, at any cost! lol! ur writing's sooooper! as in, neenga indha magazines la ezhudhaam nnu ninaikiraen! kudos to u!

கா.கி said...

@jayashree,
so un tamil reading level paathaa, nee en blog fulla padichu mudikkaradhukulla ulagam azhinjirumnu nenaikkaren.. anyways, thanks for the visit and the comment.. try to visit regularly

Jay said...

yeah! true that! but u seem to be just as fluent in telugu, so why dont u try an exclusive blogpost in telugu.....or even an exclusive english/hindi blogpost wud do! wat say anna?? :D :D

கா.கி said...

@jayshree
tats jus a butler telugu. basic stuff i learned frm my cousins and telugu movies. kaani prathyeganka oka telugu blog ante adhi chaala kashtamaina pani. kaani, na thammudu, nee cheppinattu oka blogki owner. idhigo url www.kk05zz.wordpress.com

Jay said...

oh sure i'll definitely check that out ANNAIYA! :) :) btw, mee intlo andhuru 'kk' ane alias name pettundaerenti?!

கா.கி said...

Nenu Karthick Krishna..
Vaadu Krishna Kumar