இடம்: ஆர். பி. சௌத்ரி ஆபிஸ்..
இருப்பவர்கள்: இயக்குனர் திரைவாணன், சௌத்ரி, ஜீவா..
சௌ: இப்போ என்ன செய்ய. நாம எடுத்த படமும், இப்போ வந்துருக்குற படமும் ஒரே மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பா ஹிட். இத பாத்தவங்க, நம்ம படத்தை மதிப்பாங்களா.. ஒழுங்கா விக்ரமன வெச்சு, காரைக்குடில ஒரே ஒரு வீட்ல ஒரு full படத்தை, ல ல லா ரீரிக்கார்டிங் போட்டு, ஹிட் பண்ணிருப்பேன்..ச்சே.. என் காசெல்லாம் இப்படியா போகணும்...
ஜி: அப்பா, சும்மா பொலம்பாத. நானும் எப்போ மாஸ் ஹீரோவா ஆகறது. இந்த டைரக்டர் விஜய்க்கு சொல்லிருந்த கதைய, கையையும் காலயும் புடிச்சு, நான் கேட்டு, ஓகே பண்ணி படத்தை எடுத்தா, இப்போ இப்படி ஆகிடுச்சு. மாத்து வழி யோசிப்பியா, இப்படி பேசுறியே..
தி: சார், நம்ம கால்குலேஷன் ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் முன்னாடியே ரிலீஸ் பண்ணிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது... அதாவது துப்பாக்கில இருக்குற தோட்டா....
சௌ: டேய், நீ ஒண்ணும் பேசாத. நான் ஒரு ஐடியா சொல்றேன். அத மட்டும் செய். இந்த "தமிழ் படத்துல" எல்லா தமிழ் படத்தையும் கலாய்க்கரா மாதிரி, நம்ம படத்துலயும் கலாய்ப்போம்.
ஜி: ஐயோ அப்பா, fullaa ரீ ஷூட் பண்ணப் போறோமா??
சௌ: அது வேறயா.. சத்தியமா இந்த டைரக்டர நம்பி ரீ ஷூட் எல்லாம் பண்ண முடியாது. 10 ஷாட்ல, எப்படியாவது இந்த படத்தை, தமிழ் படம் மாதிரி spoof படமா மாத்துங்க. மவனே நீ அதை மட்டும், மறுபடியும் சொதப்பி வை, என் கம்பெனியோட எல்லா படத்தையும் மூணு தடவ, கட்டி போட்டு, பாக்க வெப்பேன்.
தி: அயயோ.. நீங்க எனக்கு ஒரு வாரம் time குடுங்க. படத்தையே மாத்தி காமிக்கறேன். இந்த மாதிரி கொடுமையான தண்டனை எல்லாம் வேண்டாம்.
ஜி: ஏதொ, எனக்கு நல்ல பேர் வந்தா சரி..
இப்படி தான் ஏதாவது நடந்திருக்கும். என்ன சொல்ல வந்தாங்கன்னு அவங்களுக்கும் புரியல, எனக்கும் புரியலை. தர மொக்கையா ஒரு படம்.ரெண்டு மூணு காட்சிகள் மட்டும் spoof படம் மாதிரி எடுத்துட்டு, மக்கள் ஏத்துப்பாங்கன்னு நெனச்சு காமெடி பண்ணிருக்காங்க. பொறுமை போயே போச்சு. எப்போடா படம் முடியும்னு ஆகி, பக்கத்துல இருந்த ரமேஷ் அண்ணா கிட்ட "அண்ணா, என்ன அடிங்க ணா.. என்ன அடிங்க" னு புலம்பிகிட்டு இருந்தேன்..
நல்லா இருந்தா ஜீவாவும் இப்படி மொக்க ஆகிட்டார். j.d.சக்கரவர்த்தி இந்த படத்துல என்னத்தை கண்டாருனு தெர்ல. அப்படியே இம்ப்ரெஸ் ஆகி வில்லனா நடிக்க சம்மதிச்சாரம். முருகா.. வடிவேல் காமெடியும் ஒண்ணும் சிறப்பா இல்லை. மொத்தத்துல, இது ஒரு கேவலமான...... அட ச்சய், இந்த வார்த்தையே எனக்கு க்ளிஷேவா இருக்கு... தமிழ் படம் மாதிரி spoof னு சொன்னா ஏமாந்துராதீங்க. உஷாரய்யா உஷாரு.
p.s.தேவிபாலா திரையரங்கு.. சீட்டெல்லாம் மொக்கை. அந்த சின்ன தியேட்டர்க்கு 85, 95 ரூவா டிக்கெட்டெல்லாம் ஓவர். அதுவும் நடு நடுவுல, ஸ்க்ரீன் dim ஆகி dim ஆகி bright ஆச்சு. ஏசி ஒண்ணும் அவ்வளவா உரைக்கல. கவனிப்பார்களா???
அடுத்து நீங்களா?? தலைய சிலிப்பிடாதீங்க. வெட்டிருவாங்க..