Sunday, September 26, 2010

மற்றும் பல... (26/9/2010)

ஒரு வழியா வேலை கிடைச்சிடுச்சுனு சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் அவ்வளவு தீவிரமா தேடி, எல்லாம் எடத்துலயும் NO VACANCY போர்ட் பார்த்து, காண்டாகி, வேலையே கிடைக்கலைன்னு கத்தலை. என்னோட முதல் இன்டர்வியூ  இதுதான். அதுலயே வேலை கிடைச்சிடுச்சு. அதனாலயே ரொம்ப சந்தோஷம். காலை முதல் இரவு வரை அயராது உழைக்கர்தால, பதிவ டைம் தேட வேண்டியதா இருக்கு. வழக்கம் போல, எதாவது ஒரு விஷயத்தை பத்தி எழுதனும்னு நினைக்கும்போது, ஒண்ணு வேற யாராச்சும் எழுதிருவாங்க, இல்லை எனக்கு மறந்துரும். அது மாதிரிதான் எந்திரன் பத்தி எழுத நினைச்சதும்....
------------------------------------------------------------------------------------------------------------------
காலைலதான் எழுதலாம்னு நினைச்சேன், நம்ம கேபிள் முந்திகிட்டாரு. ஆனா, அவரு எழுதின பாயிண்ட் of வியூ வேற. நான் எழுத நினைச்சது, இந்த தியேட்டர்கள் பண்ற அநியாயத்தை பத்தி. சென்னைல முக்கால்வாசி தியேட்டர்கள்ள, முதல் மூணு நாள் டிக்கெட்டையும் கார்பரேட்டுக்கு குடுத்துட்டாங்க. என்ன ஒரு அநியாயம். நிறைய காசு தரவங்களுக்கு தான் டிக்கெட்டுன்னு, இது என்ன ஏலத்துல எடுக்கறா மாதிரி. இன்னொரு முக்கியமான விஷயம், முதல் மூணு நாள் டிக்கெட்டு மாயாஜால்ல இருந்தாலும், அங்க அந்த மூணு நாளைக்கும், ரூ.320 தான் டிக்கெட் ரேட். காம்போ ஏதொ சாப்ட தராங்க. அது கம்பல்ஸரியாம். செம்ம டென்ஷன் ஆகிட்டேன். மீதி டிக்கெட் இருக்கற தியேட்டர்கள் எல்லாம் ரொம்ப தூரத்துல இருக்கு, இல்ல, அட்டு தியேட்டரா இருக்கு. இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா.
p.s. படம், முதல் நாலு நாளைக்கு எல்லாம் இடத்துலையும் fullu. இப்பவே  வெற்றி விழா கொண்டாடிடலாமே ???   
------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை ஆரம்பிச்ச முதல் வாரத்துலயே, பசங்க படக்குழுவைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கெடச்சுது. சசிகுமார் நிஜமாவே சூப்பர் ஆளு. ரொம்ப எளிமையா இருந்தாரு. பேசறாரு. செம்ம காஷுவலா இருக்காரு. எல்லாரும் பார்த்து கத்துக்கணும்...
------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சிலர் முதுகுல குத்துவாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்ச சில பேர் முகத்துலேயே குத்திட்டாங்க. பல நாள் பழகின நட்பை, எப்படி நொடியில தூக்கிப் போட்டு அசிங்கப் படுத்தமுடியுதுன்னு தெரியலை. நம் முகத்துக்கு நேர நம்மை பத்தி தப்பா சொன்னா கூட பரவாயில்லை, மத்தவங்க கிட்ட, ஏதொ நாம கொலை குத்தம் பண்ண ரேஞ்சுக்கு பேசறது எல்லாம் சுத்த பத்தாம் பசலித்தனம். அதுவும் அவங்க குடுக்கற justifications எல்லாம் கேட்கணுமே, அட அட அட, ரொம்பவே அருமையா இருக்கும். அது ஏன் கூட இருக்கற இவ்வளவு நாள் நம்ம குறைகள் இவங்களுக்கு தெரியாம, பிரியக்  காரணங்கள் தேடும்போது மட்டும் கிடைக்குதுன்னு தெரியலை. இதை எல்லாம், எக்கச்சக்க டைம் + எனர்ஜி செலவு பண்ணி, இவங்களுக்காக உதவின சமயங்கள்லையே சொல்லிருந்தா, அப்பவே கொஞ்சம் நம்மளோட பாசத்தை கட்டுப் படுத்தியிருக்கலாம். இப்ப, ஏமாற்றமும், கண்ணீரும்தான் மிச்சம். அவங்கள சொல்லி ஒண்ணும் ஆகப்போறதில்லை, என்னை உதைக்கணும். இவங்களையெல்லாம் நான் ஒதுக்கப்போரதில்லை. எனக்கு நல்ல பாடங்கள கத்து கொடுத்திருக்காங்களே. அதனால, இன்னும் என் நண்பர்களாதான் பார்க்கறேன். இதை படிக்கற என் நண்பர்கள் சிலருக்கு, உங்களை குத்தம் சொல்றா மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் பொதுவா சொன்னேன்...
------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா வரும் லண்டன் லேன்சை வருக வருக என வரவேற்கிறேன்....சீக்கரமா வந்து ட்ரீட் குடுங்க பாஸு..
------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வாரங்கள்ல, இன்ஸோம்ன்யா, அப் இன் தி ஏர் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் பார்த்தேன். இன்ஸோம்ன்யா சூப்பரா இல்லைனாலும், நல்லா இருந்துச்சு. நம்ம அல்-பசினோ பின்னிட்டாரு. ராபின் வில்லியம்சும் நல்லா நடிச்சிருந்தாரு. அப் இன் தி ஏர் படம், கொஞ்சம் எதார்த்தத்தோட நல்லா இருந்தாலும், மொக்கையா முடிச்சிட்டாங்க. பாஸ், ரொம்ப நாள் கழிச்சு, தியேட்டரே வாய் விட்டு சிரிச்சிகிட்டே இருந்ததை பார்த்தேன். எல்லாரும் சந்தானத்தை பாராட்டினாலும், இப்படி ஈகோ எதுவுமே இல்லாம நடிச்ச ஆர்யாவுக்கு ஒரு சபாஷ். இதுலயும் படத்தோட முடிவு மொக்கை...
------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்கேப் சினிமாஸ்ல couple seatனு  சொல்லி ஏமாத்தறாங்க (எதுவும் விபரீதமா நினைக்காதீங்க). அதுவும், அறுவது ரூவா பார்க்கிங்குக்கே போயிடுது. ஆனா, எப்பவும் கூட்டம் அள்ளுது. கவனிக்க, இந்தியா ஏழை நாடு.
------------------------------------------------------------------------------------------------------------------
காமன் மேனோட காசையெல்லாம், காமன்வெல்த்னு, வெளுத்துக்கட்டி, ஊழல்ல புது சாதனையே பண்ணிருக்காங்க. மீடியாவோட எந்த குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லாம, தட்டி கழிக்கறாங்க. இப்ப, இத வெச்சு பார்வர்ட் ஜோக் எல்லாம் வருது. நாட்டுக்கே வெட்க கேடான இத வெச்சி, ஒரு கூட்டம் உட்கார்ந்து, காமெடி பண்ண யோசிச்சிகிட்டு இருக்கு. ஊழல் பண்றவங்களுக்கு, இவங்களுக்கும், பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியலை. ரெண்டு பேருமே பொறுப்பில்லாதவங்கதான். இப்ப முடிஞ்ச ரமணா படத்துல காமிச்சா மாதிரி, இவனுங்க எல்லாரையும் எதாவது பண்ணனும்னு தோணுது... ஓ@!#@ தேவ@!#$%(&%)$&)....
------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா டக்கருன்னா என்ன????

Tuesday, September 7, 2010

PLAYLIST - July, August

போன ப்ளேலிஸ்ட் --> இங்க

எவ்வளவு கேட்டாலும், நான் மகான் அல்ல பாட்டும், எந்திரன் பாட்டும் ஒட்டலை. முயற்சிய கை விட்டுட்டேன்.

புதுசா வந்த பாடல்கள்ல நம்மளோட சமீபத்திய எண்ட்ரீஸ்...


எந்திரன் - கிளிமஞ்சாரோ

புலி (தெலுங்கு) - மூணு பாட்டு - பவர் ஸ்டார், அம்மா தல்லே, தோச்சே


வித்யாசாகரோட மகிழ்ச்சின்னு  ஒரு படம் வந்துருக்கு. ரெண்டு பாட்டு சூப்பர் - ஊத்து தண்ணி பாடல், பசும்பொன் தாமர பூவுக்கும் பாடலை நியாபகப்படுத்தினாலும், அருமையா இருக்கு. உச்சு கொட்ட பாடலும், நல்ல மெலடி. ரொம்ப நாள் கழிச்சு, வித்யாசாகர் நல்லா பியூசிக் போட்ருக்காரு.

பாஸ் என்கிற பாஸ்கரன் - தத்தி தாவும் - ஹிந்தி கஜினியின் பெஹகா பாடல் வந்தாலும் வந்துச்சு, அது மாதிரியே நிறைய பாட்டை கேட்டுட்டேன். இதுவும் அது மாதிரி ஒரு பாடல். கார்த்திக்கின் குரல், ஆரம்பத்துல யுவன் குரல் மாதிரி இருக்கு.

கடைசியா, வா குவாட்டர் கட்டிங் படத்தோட ரெண்டு பாட்டு - சார்ப்பு சார்பு ஜி + உன்னை கண் தேடுதே. ரெண்டு பாட்டுக்குமே ரொம்ப ஜாலியான டியூனும், காமெடியான லிரிக்சும் அமைஞ்சிருக்கு. உன்னை கண் தேடுதே பாடல்ல ஜீவியின் புத்திசாலித்தனமும் தெரியுது.

படத்தோட பேரை க்ளிக்கினா பாட்டு கேட்கலாம்..

Monday, September 6, 2010

நான் எடுத்த இன்செப்ஷன்

இந்தப் படத்துக்கும் இன்செப்ஷனுக்கு இருக்கற ஒரே ஒற்றுமை, ரெண்டுமே ஒப்பன் எண்டிங். அவ்வளவே. அதனாலையோ என்னமோ, இன்செப்ஷனோட முடிவை நான் யூகிச்சிட்டேன். இந்த படம் எடுத்து ரெண்டரை வருஷம் ஆவுது. ஏற்கனவே -->இங்க<-- இதை பத்தி சொல்லிட்டேன், இருந்தாலும் இன்செப்ஷன் காத்தடிக்கும்போதே தூத்திக்கலாம்னு... தயவு செஞ்சு பாக்காதவங்களும், ரிப்பீட் ஆடியன்சும், உங்க கருத்துக்களை சொல்லுங்க...

Saturday, September 4, 2010

Inception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா????

போன மாசம் மொத்தமுமே இன்செப்ஷன் படத்தை வெச்சி பதிவு ஒப்பேத்தியாச்சு. இதுக்கு மேல மாவ அரைக்க முடியாது. அதனால, போன பதிவுல சொன்னா மாதிரி, நண்பர் பத்மநாபன் கேட்டதற்காக, கதையை, முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்ல முயற்சி பண்றேன். இது என்னோட புரிதலுக்கு ஏற்ப, என்னோட பார்வைல கதை. அதனால, "சொல்லப் படுகிறது, இருக்கலாம்" மாதிரியான வார்த்தைகள் இருக்காது.. நான் நம்பறத, உங்களுக்கு சொல்றேன்..

கதை

மு.கு - extraction - ஒருத்தரோட சப் கன்ஷியஸ்லேர்ந்து ஒரு நினைவை, ரகசியத்தை திருடுவது.
inception - ஒருத்தரோட சப் கான்ஷியஸ்ல ஒரு நினைவை விதைப்பது...

படம் ஆரம்பிப்பது லிம்போல. கடற்கரைல ஒரு ஆள் 
ஒதுங்கராறு. அது நம்ம ஹீரோ காப் (டிகாப்ரியோ), அங்க தன்னோட குழந்தைகள் மணல்ல விளையாடறத பாக்கறாரு. (இந்த காட்சிய, படம் முழுக்க,  அவர் பல முறை பாக்கறாரு) நாலு பேர் தூக்கி கொண்டு போய், தொண்டு கிழமான ஒரு சைனாகாரர் (சைடோ) முன்னாடி அவரை ஒக்கார வெக்கறாங்க. காப் கிட்டேர்ந்து ஒரு சின்ன பம்பரம் மாதிரி உள்ள பொருளை பாத்து, இதே மாதிரி ஒண்ணு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டயும் இருந்துதுனு அந்த கிழவர் சொல்றாரு. 

CUT TO

அடுத்த காட்சி, காப், இளமையான சைடோ, ஆர்தர் மூணு பேரும் ஒரு எடத்துல பேசிகிட்டு இருக்காங்க. காப், சைட்டோகிட்ட, அவரோட சப் கான்ஷியாஸின்  பாதுகாப்பு அவசியம்னும், அதுக்கு தன்னால உதவ முடியும்னு சொல்றாரு. யோசனை பண்ணி சொல்றேன்னு சைட்டோ அந்த எடத்த விட்டு கிளம்பறாரு..

அது சைட்டோவோட கனவுன்னும், அங்க காப், ஏதோ ரகசியத்த திருட முயற்சி பண்றாருன்னும் 
அப்பறம் நமக்கு தெரிய வருது . அங்கேயே, மால் அப்படிங்கற ஒரு பெண்ணையும் சந்திக்கறார். அவங்க காட்டி கொடுக்கறதுனால, கனவுக்குள்ள கனவுன்னு, ரெண்டு லேயர்ல திட்டம் போட்டும், காபோட முயற்சி வீணாகுது. (இங்க இன்னொரு முக்கியமான விஷயம், மால், ஆர்தரோட கால்ல ஷூட் பண்றதுக்கு முன்னாடி, கனவுல ஒருத்தர கொலை பண்றதுனால நிஜத்துல அவங்க கண்ணு முழிச்சிருவாங்க. ஆனா, காயப்படுத்தினா, அந்த வலி ரொம்ப பயங்கரமானதா இருக்கும்னு சொல்லிட்டு சுடறாங்க)

அந்த முயற்சி தோல்வி அடையறதுனால, காபுக்கு வேலை கொடுத்தவங்க அவரை கொலை செய்யலாம்னு பயந்து, காப், தலைமறைவாக யோசிக்கறாரு. (காப், ஏதோ ஒரு குற்றத்துக்காக, தன்னோட ரெண்டு குழந்தைகள பிரிஞ்சு, அமெரிக்காவுலேர்ந்து தலை மறைவா இருக்கார்னு 
அப்போ நமக்கு தெரிய வருது). 

காப் தலைமறைவாகறதுக்கு முன்னாட், சைட்டோ அவரை சந்திச்சு, இன்செப்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. அப்படி வெற்றிகரமா பண்ணிட்டா, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காப, அமெரிக்கவுல இருக்கற அவரோட குழந்தைகளோட சேர்த்து வேக்கறேன்னு வாக்கு கொடுக்கறாரு. ஆர்தர், இன்செப்ஷன் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொன்னாலும், காப், தன்னால பண்ண முடியும்னு ஒத்துக்கராறு.

காப், இன்செப்ஷன் செய்ய ஒரு அணியை திரட்டராறு. இதுல, அரியாட்னே - கனவுகளை வடிவமைக்கரவங்க (architect), இயாம்ஸ் - சித்தரிப்பாளன்னு  சொல்லலாமா?? பாவனை பண்றவர்னு சொல்லலாமா???(forger),  ஆர்தர் - ஆராய்ச்சியாளர் (point man) நம்ம காப் - களவாடப்போறவர்.. (extractor) (களவானின்னு சொல்லலாமா??), அப்பறம் யூசுப் - இவர்தான் மயக்க மருந்துக்கு பொறுப்பு (chemist) கூடவே சைட்டோ, இவங்க செய்யறத கண்காணிக்க வரார்.


திட்டம் போடும்போது, அப்படியே புது ஆளான அரியாட்னேவுக்கும் பயிற்சி கொடுக்கறாங்க. அப்படி ஒரு பயிற்சியப்போ, அரியாட்னே மால் பத்தின விஷயத்தை தெரிஞ்சிக்கறாங்க.  மால், காபோட இறந்து போன மனைவி. ஏதோ ஒரு பிரச்சனைனால, காபோட எல்லா கனவுகள்ளையும் மால் வந்து சதி பண்ணிடறாங்க. இதனாலேயே, காப் கனவுகள வடிவமைக்கரத நிறுத்திக்கராறு. ஏன்னா, அவருக்கு தெரிஞ்சா, அவரோட நினைவுகள்ல இருக்கற மாலுக்கும் எல்லாம் தெரிஞ்சிடும். அவங்க அங்க வந்து திட்டத்தை கெடுத்துடுவாங்க. 

இதனால கனவோட வடிவமைப்ப பத்தி தெரிஞ்சிக்கறதயும் நிறுத்திக்கராறு. இதைப் பத்தி, அணில இருக்கற மத்தவங்களுக்கும் அரியாட்னே சொல்ல சொல்றாங்க , ஆனா காப் இது அவ்வளவு சீரியஸ் பிரச்னை இல்லை. அதனால அவங்களுக்கு தெரிய வேணாம்னு மழுப்பிடராறு.

இந்த பயிற்சியில டாட்டம்னு ஒரு விஷயத்தைப் பத்தியும் சொல்றாங்க. எல்லார் கிட்டயும் ஒரு டாட்டம் இருக்கும். அதை வெச்சி, அவங்கவங்க, தான் கனவுல இருக்'கோமா', நிஜத்துல இருக்கோமான்னு கண்டுபுடிச்சிப்பாங்க. அப்படியொரு டாட்டம்தான், முதல் காட்சில காப் கைல இருக்கற பம்பரம். அது காபோட டாட்டம். அதை சுத்தி பார்த்து, விழுந்தா நிஜம்னும், சுத்திகிட்டே இருந்தா கனவுன்னும் காப் தெரிஞ்சிப்பாறு. 
இதை படத்துல பல முறை அவர் செஞ்சி பாக்கறாரு. 

அடுத்து கிக். ஒரு கனவுலேர்ந்து முழிக்க, நிஜத்துல கிக்குனு ஒரு விஷயத்தை பயன்படுத்தறாங்க. ஒரு இடத்துலேர்ந்து, எந்த பிடிமானமும் இல்லாம கீழ விழறது (freefall) தான் கிக். உதாரணத்துக்கு நாற்காலிலேர்ந்து பின்னாடி சாஞ்சு விழறது. அப்படி கனவுலகத்துல விழுந்தா, நிஜத்துல முழிக்கலாம்.

இவங்க இன்செப்ஷன் செய்ய வேண்டியது பிஷர்னு ஒரு இளம் தொழிலதிபரோட தலைக்குள்ள. செத்துப்போகப்போற தன்னோட அப்பாவின் மூலமா வர தொழில் சாம்ராஜ்யத்தை அவரே உடைக்கரா மாதிரி யோசனைய விதைக்கனும். அதுக்கு இன்செப்ஷன் பண்ணனும். இந்த வேலைக்காக பிஷர பத்தின எல்லா தகவலையும் சேகரிக்கறாங்க. இறந்த அப்பாவ பார்க்க, பிஷர் விமானத்துல போகும்போது, இன்செப்ஷன் பண்ணலாம்னு முடிவெடுக்கறாங்க.  


இங்க இன்னொரு முக்கியமான விஷயம். இன்செப்ஷன் செய்ய மூணு லேயர்னு முடிவு பண்ணி திட்டம் போடறாங்க. அடுத்தது, நிஜ உலகத்துல பத்து மணி நேரம்னா, கனவுல ஒரு வாரம், கனவோட ரெண்டாவது லேயர்ல ஆறு மாசம் அப்பறம் மூணாவது லேயர்ல பத்து வருஷம்னு கணக்கு மாறும். 

இதுல, லிம்போனு, நம்மூரு அரசியல்வாதி மாதிரி இன்னொரு சார்பற்ற லேயர் இருக்கு. இந்த லேயர் யாருக்கும் சொந்தமில்லை. இங்க இருக்கும்போது, நிஜமா கனவான்னு எந்த சந்தேகமும் வராது. ஆயுசுக்கும் அங்கேயே கெடக்க வேண்டியதுதான். நிஜவுலகத்துல முழிக்கவும் மாட்டாங்க. கோமா மாதிரி ஆகிடும்.

ஒரு சக்தி வாய்ந்த மயக்க மருந்து கொடுத்து பிஷர தூக்கத்துல ஆழ்த்தி, பிஷரோட ஆழ்மனசுல போக இன்செப்ஷன ஆரம்பிக்கறாங்க. 


முதல் லேயர், யூசுப்போட கனவு.

இயாம்ஸும்  சைட்டோவும், ஆர்தரோட சேர்ந்து பிஷர ஒரு வேன்ல கடத்தி கொண்டு போறாங்க. 
போற வழியில பல பேர் இவங்கள தாக்கறாங்க. காப், அதெல்லாம் பிஷரோட மனசுல அவரே ஏற்படுத்தி வெச்சிருக்கற தற்காப்பு. இந்த மாதிரி இன்செப்ஷன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு யார்கிட்டையோ பயிற்சி எடுத்துட்டுகிட்டு இருக்காருன்னு விளக்காராறு.

நடு ரோட்ல திடீர்னு ஒரு ரயில் வேற வருது. அது எப்படின்னு யாருக்கும் புரியல. எப்படியோ கஷ்டப்பட்டு, பின்னி மில் மாதிரி ஒரு எடத்துக்கு வராங்க. ஆனா சைட்டோ உடம்புல ஒரு குண்டு பாஞ்சிருக்கு. இதுக்கு மேல இவரால மேற்கொண்டு தொடர முடியாது. அதனால அவரை சுட்டு, நிஜ உலகத்துல முழிக்க வெச்சிடலாம்னு ஆர்தர் சைட்டோவ சுட முயற்ச்சி பண்றாரு. 

ஆனா, இவ்வளவு பவர்புல்லான மயக்க மருந்தோட வீரியம் குறையறதுக்கு முன்னாடியே, கனவுல இறந்து போனா, அவங்க லிம்போவுக்குதான் போவாங்க, முழிக்க மாட்டாங்கன்னு, காப் ஆர்தரை தடுக்கராறு. அரியாட்னே, ரயில் பத்தி காப் கிட்ட கேட்கும்போது, அது மால்னால தான் வந்துச்சுன்னு ஒத்துக்கராறு. அதை பத்தின முழு கதைய சொல்றாரு.

FLASHBACK

காப் மால் ரெண்டு பேருமே இந்த மாதிரி கனவுல திருடர வேலைல ஈடுபடறவங்க. ஒரு முறை இதை வெச்சி பரிசோதிச்சு பார்க்கும்போது, எக்கு தப்பா ரெண்டு பேரும் லிம்போவுக்கு போயிடறாங்க. காப், லிம்போ உண்மையில்ல, கனவுன்னு மால் கிட்ட சொல்லியும் அவங்க அங்கேர்ந்து வர மறுக்கறாங்க. அம்பது வருஷம் லிம்போவுலையே சந்தோஷமா இருக்காங்க.


கடைசியா எப்படியோ காப், மால்-ஐ நிஜ உலகத்துக்கு வர சம்மதிக்கவெக்கராறு. ஒரு ரயில் தண்டவாளத்துல ரெண்டு பேரும் தலையவெச்சி, இறந்து போய், நிஜவுலகத்துக்கு திரும்ப வராங்க. ஆனா அந்த லிம்போவோட தாக்கம் அதிகமா இருக்கறதுனால, நிஜ உலகத்துக்கு வந்த அப்பறமும், மால், அதுதான் கனவுன்னும், அங்க இறந்துபோனா நிஜவுலகத்துக்கு போகலாம்னும் நினைக்க ஆரம்பிக்கறாங்க. 

இதனால, அவங்களோட கல்யாண நாள் அன்னிக்கி, அவங்க எப்பவும் கொண்டாடுற ஹோட்டல் ரூம்லேர்ந்து மால் கீழ விழுந்து, தான் நிஜ உலகத்துக்கு போகனும்னு தற்கொலை பண்ணிக்கறாங்க. அதுக்கு முன்னாடியே, தன்னோட லாயர் கிட்ட, காப் தன்னை கொல்ல முயற்சி பன்றார்னும் சொல்லிடறாங்க. அப்போதான், தன் கூடவே காப் வருவார்னு அப்படி பண்றாங்க. இதனால, அவங்க இறந்த அப்பறம், கொலை பழி காப் மேல விழ, காப் அந்த நாட்டை விட்டு ஓடறாரு. 

Back to கனவு

இங்க முதல் லேயர்ல, இயாம்ஸ், பிஷரோட காட்பாதர் பிரவுனிங் மாதிரி வேஷம் போட்டு, தன்னை யாரோ டார்ச்சர் பண்றா மாதிரி கத்தறாரு. ஆர்தரும் காபும், பிஷர்கிட்ட ஒரு கஜானாவை திறக்கத் தேவையான நம்பர் கேட்ட்கறாங்க.
ஆனா அவருக்கு ஒண்ணும் தெரியலை. பக்கத்துல பிரவுநிங்கோட கத்தல் வேற.. பிஷர், பிரவுனிங்கோட பேசி பார்க்கறேன்னு சொல்றாரு. 

பிரவுனிங்கும் (இயாம்ஸ்) பிஷரும் பேசும்போது, பிஷர் அப்பா எழுதுன ரெண்டாவது உயில் பத்தி பிரவுனிங் சொல்றாரு. அது வெளிய வந்தா, மொத்த சாம்ராஜ்யமும் ஒண்ணுமில்லாம ஆகிடும், பிஷர் தேவைப்பட்டா அதை பயன்படுத்திக்கலாம். பிஷர், தான் எதுக்கு மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கணும்னு கேட்கும்போது, "ஒரு வேளை உன் அப்பா, நீ உன்னோட சொந்த முயற்சில பெரிய ஆளா வரணும்னு நினைச்சிருக்கலாம்"னு பிரவுனிங் சொல்றாரு.

இதே நேரத்துல, பிஷரோட (கனவுலக) பாடிகார்ட்ஸ் அந்த இடத்தை நெருங்கறாங்க. அந்த இடத்தை காலி பண்றதுக்கு முன்னாடி, பிஷர் கிட்ட மறுபடியும் 
காபும் ஆர்தரும் கஜானா நம்பர கேட்கறாங்க . ஆனா பிஷர் தெரியாதுன்னு சொல்ல, ஏதொ ஒரு நம்பர சொல்லுனு அவங்க மிரட்ட, பிஷர், வாய்க்கு வந்த நம்பர சொல்றாரு. அங்கேர்ந்து ஒரு வேன்ல எல்லாரும் போறாங்க. அதுலையே மயக்க மருந்து கொடுத்து, அடுத்த லேயர் கனவுக்குப் போறாங்க. வண்டிய யூசுப் ஓட்டறாரு. 

ரெண்டாவது லேயர் ஆர்தரோட கனவு . 
(முதல் லேயர்ல கிக், வேனோட, எல்லாரும் ஒரு பாலத்துலேர்ந்து, தண்ணியில விழறது)

ரெண்டாவது லேயர்ல, ஒரு ஹோட்டல்ல, காப், பிஷர் கிட்ட வந்து, தான் அவரோட பாதுகாப்பு அதிகாரி சார்லஸ்னு அறிமுகப்படுத்திக்கராறு. அவர் இருக்கறது கனவுன்னும் நம்பவைக்கராறு. பிரவுன்ங்கை நம்பாதீங்க, அவர் கொஞ்சம் சரியில்லைனு ஒரு விஷயத்தையும் சொல்லி வைக்கறாரு. கொஞ்சம் கொஞ்சமா பிஷரோட மனசே பிரவுனிங்க கெட்டவரா சித்தரிக்குது. காப் இன்னும் பல விஷயங்கள் பேசலாம்னு பிஷரை ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போறாரு. அங்க இருக்கற பிரவுனிங் (forger) , தான் தப்பு பண்ணதா பிஷர் கிட்ட ஒத்துகிட்டு, இவ்வளவு வருஷமா உழைச்ச குடும்பம், ரெண்டாவது உயில்னால உடையறதை விரும்பாம அப்படி செஞ்சதா சொல்றாரு.. 


இந்த நேரத்துல, காப், பிரவுனிங் மனசுல இருக்கற ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டுதான் ஆகணும்னு பிஷர சம்மதிக்க வெச்சி, அவரோட கனவுக்குள்ள போறாங்க. ரெண்டாவது லெவல்ல காவல் ஆர்தர். இதே நேரத்துல, பிஷரோட தற்காப்புகள், ஆர்த்தர தாக்க வர, அவர் அவங்கள அடிச்சி வீழ்திட்டு, இவங்க இருக்கற ரூமுக்கு வரும்போது, முதல் லெவல்ல கிக் ஆரம்பிக்குது. 

வேன் மேலேர்ந்து கீழ விழர்தால, ரெண்டாவது லெவெல்ல புவியீர்ப்பு விசை இல்லாம போகுது. இப்படி இருந்தா கிக்  கொடுக்கறது கஷ்டம்னு உணர்ற ஆர்தர், இருக்கற எல்லாரையும் எடுத்து கொண்டு போய், லிப்டோட கட்ராறு.

மூணாவது லேயர் (பிஷரின் கனவு), 


ஒரு பனி மலைல எல்லாரும் இருக்காங்க. அங்க ஒரு கட்டிடத்த நிறைய பேர் பாதுகாக்கறாங்க. காப், பிஷர்கிட்ட, அதுதான் பிரவுனிங் ரகசியத்தை வெச்சிருக்கற இடம்னு சொல்லி. அங்க போக சொல்றாரு. எல்லாரும் பிரிஞ்சு, அங்க இருக்கறவங்க கிட்ட சண்டை போட்டு, எப்படியோ பிஷர் அந்த கட்டிடத்தோட முக்கியமான பகுதிய அடைய உதவி பண்றாங்க. 

இதுக்கு நடுவுல, ஒரு குறுக்கு வழிய அரியாட்னே சைட்டோகிட்ட சொல்லும்போது, காபும் அதை கேட்டுடறாரு. இதனால, பிஷர் அந்த ரகசிய அறையை திறக்கதுக்கு முன்னாலேயே மால் அங்க வராங்க. தூரத்துலேர்ந்து இதை பாத்திக்கிட்டு இருக்கற அரியாட்னே, கூட இருக்கற காபை, சுட சொல்றாங்க. தன்னோட மனைவிய சுட தயங்கற அந்த நேரத்துல, மால் பிஷர சுட்டுடறாங்க. அப்பறம் காப் மாலை சுட்ராறு.

எல்லாரு பிஷர் விழுந்துருக்கற எடத்துக்கு வராங்க. சைட்டோவும் இறந்து போகராறு. பிஷர் இன்னும் இறந்து போகலைன்னும், அவர் காபோட லிம்போவுலதான் இருக்கனும்னும் அரியாட்னே சொல்றாங்க. ஏன்னா, காப் தன்னை தேடி வர, மால், அங்க தான் பிஷர வெச்சிருப்பாங்கன்னு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம், மால் காபோட குற்ற உணர்வின் பிரதிபலிப்புதான்.


இயாம்சை, பிஷருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லிட்டு, அரியாட்னேவும் காபும், அம்பது வருஷம் காப் - மால் வாழ்ந்த காபோட லிம்போவுக்கு போறாங்க. அங்க ஒரு வீட்ல மால் இருக்காங்க. அவங்க, காப், வயசாற வரைக்கும் பிரிய மாட்டோம்னு கொடுத்த தன்னோட வாக்குறுதிய காப்பத்தலைன்னு குத்தம் சொல்றாங்க. காப் குழப்பத்துல இருக்கார்னும், லிம்போதான் நிஜம்னும் சொல்றாங்க. இங்க காப் இன்னொரு பிளாஷ்பாக் சொல்றாரு.

முன்னாடி லிம்போவுல இருக்கும்போது, மால், அவங்களோட டாட்டம், அதாவது இப்போ காப் பயன்படுத்தற பம்பரத்தை, எடுத்து ஒழிச்சு வெச்சிடறாங்க. காப் இதை கண்டுபுடிச்சு, மால் இருக்கறது நிஜ உலகம் இல்லைன்னு 
மாலுக்கே ஒரு இன்செப்ஷனை செய்யறாரு. இதனால்தன், மால் காப் சொல்றதை கேட்டு, ரயிலுக்கடியில தலை வெக்கறாங்க. ஆனா நிஜத்துல வந்த அப்பறமும், இது கனவுன்னு காப் விதைச்ச எண்ணம் அவங்களவிட்டு போகாததுனால,  அவங்க தற்கொலை பண்ணிக்கறாங்க. இதனால்தான், இன்செப்ஷன் சாத்தியம்னும் காபுக்கு தெரிய வருது. 

மறுபடியும், இங்க லிம்போவுல, பிஷர கண்டு புடிக்கறாங்க. காப், தான் சைட்டோவ கண்டுபுடிக்கனும்னு சொல்றாரு. இதனால, அரியாட்னே, பிஷர கீழ தள்ளிவிட்டு, தானும் கீழ விழறாங்க. மூணாவது லேயர்ல இயாம்ஸ் கொடுக்கற ஷாக்கோடா, இந்த கிக்கு வேலை செஞ்சி, மூணாவது லேயர்க்கு போறாங்க. பிஷர் உயிரோட வராரு. அந்த ரகசிய அறைல இருக்கற விஷயத்தையும் தெரிஞ்சிக்கராறு.


இதே நேரத்துல, அந்த கட்டிடம் தகர்க்கப்பட்டு, எல்லாரும் அஸ்திவாரத்துக்குள்ள விழறாங்க, அதே நேரத்துல ரெண்டாவது லேயர்ல இருக்கற லிப்டுல ஏதொ செஞ்சி, ஆர்தர் அதை ப்ரீஃபால் ஆக்கராறு , அப்படியே முதல் லேயர்ல கரெக்டா வேன் தண்ணில விழுது. எல்லா கிக்கும் சரியா வேலை செய்ய, எல்லாரும் கரெக்டா கண்ணு முழிக்கறாங்க. இன்செப்ஷன் வெற்றிகரமா முடியுது.

மறுபடியும் முதல் காட்சி வருது. காப், லிம்போவுல பார்க்கற அந்த கிழட்டு சைனா காரரு நம்ம சைட்டோதான். காப் அவர் கிட்ட பேசி, ரெண்டு பேரும் சுட்டுகிட்டு, நிஜத்துக்கு வராங்க. வாக்கு கொடுத்தா மாதிரி, சைட்டோ, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, காபை அமெரிக்காவுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாம நுழைய வெக்கறாரு. 


காப் தன்னோட வீட்டுக்கு வந்து, எப்பவும் குழந்தைகள் விளையாடுற அந்த காட்சிய பாக்கறாரு. இது கனவா நிஜமான்னு தெரிஞ்சக்க, டாட்டம எடுத்து சுத்தராறு,  ஆனா இந்த முறை, குழந்தைகள் முகத்தை காமிக்கறாங்க. அப்பாகிட்ட ஓடி வராங்க. காபும், சுத்தி விட்ட பம்பரத்தை மறந்து, அவங்க கிட்ட ஓட, கேமரா சுத்திகிட்டு இருக்கற பம்பரத்த காமிக்குது. அது இன்னும் சுத்திகிட்டே இருந்து, விழறா மாதிரி நிலை தடுமாற, படம் முடியுது.



ங்கொக்கா மக்கா... ஒரு வழியா சொல்லிட்டேண்டா சாமி... 
ரொம்ப சொதப்பலைன்னு நினைக்கறேன். 
மறுபடியும் எல்லாருக்கும் நண்ணி...


வெற்றி வெற்றி வெற்றி.. சொல்லி முடிச்சிட்டேன்...