Saturday, June 18, 2011

ஆரண்ய காண்டம் - ப.வி

சிம்பிளா சொல்லி முடிக்கறேன். படம் சூப்பர். அங்கங்க வர கொஞ்சம் செயற்கைத்தனமான ரியாக்‌ஷன்ஸும், சூழலும் மட்டுமே எனக்கு பட்ட குறை. மத்தபடி படம் அருமை. அதுவும் யுவன், பிண்ணணில பின்னிருக்காரு. நடிப்பு டிபார்ட்மெண்ட்ல எல்லாருமே அசத்தல், முக்கியமா அந்த பையன் + அவன் அப்பா. வசனங்களும் பக்காவா செட் ஆகிருக்கு. அங்கங்க உலகப்படம் பாக்கறா மாதிரி கூட இருந்துச்சு. பெண்களுக்கு புடிக்காதுன்னு சிலர் சொல்லிட்டு வராங்க. அப்படி ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மென்மையான ஆளுங்களுக்கு பிடிக்காதுனு சொல்லலாம். so, மத்தவங்க எல்லாம், கண்டிப்பா படத்தை பாருங்க. Hats off to Kumararaja...  கண்டிப்பா பெரியவங்களுக்கு மட்டும். ஏன்னா இது ஆரண்ய Condom..

5 comments:

எஸ்.கே said...

இவ்வளவு சிம்பிளா? :-))

shortfilmindia.com said...

வர வர பேஸ்புக், ட்வீட்டர்ல எழுதி எழுதி சின்னதாவே எழுத பழகியாச்சு.. அவ்வ்.

கா.கி said...

@எஸ்.கே
விமர்சனம் வள வளனு எழுதறது எனக்கே வர வர புடிக்கலை. அதுவுமில்லாம, கதையப் பத்தியெல்லாம் எல்லா விமர்சனங்கள்ளையும் எழுதிடறாங்க.
நாம கொஞ்சம் வித்தியாசப்படுத்தலாமேன்னு இந்த பத்தி விமர்சனம். மேக்ஸிமம் ரெண்டு or மூணு பத்தி. அவ்ளோதான்

@cable
பாஸ், அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. இது, micro bloggingah பாத்து அந்த மாதிரி முயற்சி பண்ணலாமேன்னு பண்ணது. bullet points மாதிரி.. :)

Ramanathan said...

பின்னணி-ன்னு மொத்தமா சொல்லிட்டிங்களே!! முக்கியமா chasing scenes BGM ரொம்ப நல்ல இருந்த மாறி எனக்கு ஒரு feeling :)

கா.கி said...

@ramanathan

எனக்கு மொத்த பிண்ணனி இசையுமே பிடிச்சிருந்துது... அந்த சேஸிங்க் சீனும் சேர்த்துதான்...