Wednesday, January 4, 2012

எண்ணிப் பார்த்தேன் - 2011 - 1


வருஷக் கடைசில பதிவு போடறேன்னு சொன்னது வழக்கம் போல லேட் ஆனதுக்கு வழக்கம் போல மன்னிக்கனும். போன வருஷத்தை எண்ணிப் பார்த்ததுல, சில விஷயங்கள் நல்லதாவும், பல விஷயங்கள் கெட்டதாவும் நடந்திருக்கு. கெட்ட விஷயங்களை வாழ்க்கைப் பாடமா எடுத்துகிட்டேன். வேற என்ன பண்றது. இப்போ, போன வருஷம் நடந்து, பதிவு போட முடியாம போன சில விஷயங்களைப் பத்தி கடகடன்னு சுருக்கமா சொல்லிடறேன். அதை நீங்க விரிவா படிச்சு தெளிவாய்டுங்க :)

பவர் 

கரென்ட் கட் பிரச்னை பெருசாகி அதுவும் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணமா இருந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா, தொடர்ந்து பல இடங்கள்ள பவர் கட் தொடர்ந்துட்டேதான் இருக்கு. என் நண்பர்கள் பல பேர் புலம்பிட்டே இருக்காங்க. இதனால அவங்களோட முக்கியமான வேலைகளும் கெட்டு போறதா பீல் பண்றாங்க. இருந்தாலும் வழக்கம் போல மக்கள் சுரணை இழந்து அதை தட்டி கேட்க மறந்துட்டாங்க. அடுத்த எலெக்ஷன்ல பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்களோ என்னமோ (ஆனாலும் உள்ளாட்சி தேர்தல்ல இவங்களேதான் வின் பண்ணாங்க). யார் செஞ்ச புண்ணியமோ தெரியலை, என் ஏரியால கரென்ட் கட் ஆகறதே இல்லை. (நான்  திருவல்லிக்கேணி வாசி). அதே மாதிரி இந்த லைப்ரரிய மாத்தற திட்டமும் ஏகோபித்த எதிர்ப்ப சம்பாதிச்சிருக்கு. மெட்ரோ ரயிலை மோனோ ரயில்னு வேற மாத்திட்டாங்களாம். இவங்களுக்கு யார் இப்டியெல்லாம் யோசிக்க சொல்லிதராங்கன்னு தெரியலை.

BBC பறந்து போச்சு 

என் BBC வேலையை விட்டதைப் பத்தி --> இங்க ரெண்டாவது பத்தில  எழுதிருந்தேன். இன்னமும் சரியான வேலை கெடைக்கல. மத்த துறைகள்ல இருக்கற ஒரு முக்கியமான விஷயம் மீடியால இல்லைன்னு படுது. வேற எங்கயுமே, அந்த கம்பெனி HR ஆளை நேரடியா காண்டாக்ட் பண்ணி வேலை கேட்கலாம். அவங்களும் பொறுப்பா இருக்கு இல்லைன்னு பதில் சொல்றாங்க. ஆனா, மீடியால மட்டும் HRனு ஒரு ஆள் இருந்தாலும், நாம அனுப்பற resume ஒழுங்கா போய் சேருதானு தெரியலை. கால் பண்ணாலும் ஒழுங்கான பதில் வரதில்லை. முக்கியமா ஏதாவது ஒரு வடிவத்துல சிபாரிசு தேவைப்படுது. கடுப்பா இருக்கு. சும்மா இருக்ககூடாதுன்னு பல வேலைகளை செஞ்சிட்டுதான் இருக்கேன். பார்க்கலாம், நமக்குன்னு ஒரு வேலை இல்லாமலா போய்டும்.

Revolution  2020

இந்த வருஷம் வெளியான சேட்டன் (மலையாளி இல்லை) பகத்தோட இந்த நாவல், ப்ரீ ஆர்டர் பண்ணி, ரிலீசுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்து சேர, ஒரே மூச்சுல படிச்சேன். அவரோட க்ளீஷே நிறைய இருந்துது.  ஒவ்வொரு கேரக்டரோட உணர்வுகளை கரெக்டா சொல்லிருந்தாலும், ஒரு கட்டத்துல கதை எழுத்தாளரோட கண்ட்ரோல்ல இல்லையோன்னு தோண ஆரம்பிச்சுது. க்ளைமாக்ஸ்ல அது conform ஆச்சு. ஆனாலும் சேட்டனுக்கு மற்றுமொரு வெற்றி.

Facebook Page
என்ன கருமத்துக்கெல்லாம் page ஆரம்பிக்கறதுன்னு இல்லையா. இந்த page பாருங்க. https://www.facebook.com/Tamilanchors . என்ன ஒரு மகா வெட்டி வேலை. சாதாரண போட்டோ இல்லமா, டிவில வரதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வேற போடறாங்க. இதை சில பேர் ஷேர் வேற பண்ணாங்க. கலி முத்திடுச்சுனு தெரிஞ்சுது.

நானும் ஜட்ஜ் ஆனேன்


காலேஜ்ல நடந்த பாட்டு போட்டியோட முதல் ரவுண்டுக்கு என்னை நாட்டமையா வர சொல்லி என் ஜூனியர்ஸ் கூப்டாங்க. முதல்ல தயக்கமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன். அங்க போன அப்பறம், இன்னும் பல பேர் என்னை ஞாபகம் வெச்சிருக்கறது தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமா இருந்துது. வழக்கம் போல பல ப்ளாஷ் பேக் நிகழ்வுகள் வந்து மனசு கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துது. என்ன செய்ய. its all fate.

தொடரும்.....

4 comments:

Prasanna said...

//மெட்ரோ ரயிலை மோனோ ரயில்னு வேற மாத்திட்டாங்களாம்//
இல்ல பாஸ். மெட்ரோ கைவிடப்படல. அதுவும் உண்டு, மோனோ ரயிலும் உண்டு. மெட்ரோ வேலைகள்லாம் வேகமா நடந்திட்டுருக்கு. 2015 ஏப்ரல்ல மெட்ரோ பயன்பாட்டுக்கு வந்துடும் :-)

கா.கி said...

i see... ஒகே.. தகவலுக்கு நன்றி :)

Unknown said...

எண்ணிப் பார்த்தேன்...
நானும் எண்ணிப்பார்க்கிறேன்...
சிறந்த அலசல் கத்தி...

உன் படைப்புகள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு..

வாழ்த்துக்கள், தொடரட்டும் உன் படைப்புகள்..

நி ஒரு படைப்பாளி (creator), உனக்கு சீக்கிரம் ஒரு பெரிய வாய்ப்பு வரும்..

2012 உனக்கும் ஒரு லக்கியான வருஷமா இருக்கம்...

...BE HAPPY...

கா.கி said...

நன்றி அண்ணா :)