எல்லாரும் நினைச்ச, வெங்கட்பிரபு சொன்ன கதைதான். மூணு பொரம்போக்கு பசங்க, பாரின் பிகர உஷார் பண்ணி, பாரின்ல செட்டில் ஆகலாம்னு கனவோட கோவா போய், அங்க பண்ற விஷயங்கள்தான் கதை. இந்தப் படம், கதைன்னு சொல்றதை விட, சம்பவங்களோட தொகுப்புன்னு சொல்றது பொருத்தமா இருக்கும். படத்தை மூணு பகுதிகளா பிரிக்கலாம்..
1. மூணு பசங்க, அவங்க வாழ்க்கை, அவங்க கோவா போறது
2. கோவால அவங்க அவங்களுக்கு ஏத்தமாதிரி பொண்ணுங்கள கரெக்ட் பண்றது (கூடவே அந்த சம்பத்-அரவிந்த்-பிரேம்ஜி காதலும்)
3. கடைசியா, சினேஹா எபிசொட். அவங்ககிட்டேர்ந்து திருடறது.
படத்துல பல பிளஸ்களும், சில மைனஸ்களும் இருக்கு. ஆனா, படம் முடிஞ்சு வெங்கட்பிரபு பெயர் வரும்போது, ரசிகர்களோட கைத்தட்டல், அவங்க அந்த மைனஸ்கள ஒரு பொருட்டா எடுத்துக்கலைன்னு காமிக்குது. முதல் இருபது நிமிஷமும், தமிழ் படத்துக்கு வந்துட்டமோன்னு சந்தேகப் படவைக்குது. தமிழ் சினிமால வர, கிராமத்து அத்தியாயங்களை அநியாயத்துக்கு கலாச்சிருக்காங்க. அப்பறம் வர எல்லாம் நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நகைச்சுவையான முறைல, புதுமையா ப்ரெசென்ட் பண்ணிருக்காங்க. படத்துல அங்கங்க வர சின்னச் சின்ன கிராபிக்ஸ் சூப்பர்.
நடிப்புன்னு பார்த்தா, மூணு ஹீரோவுக்குமே சரிசமமா முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், ஒண்ணு ரெண்டு இடங்கள்ல, பிரேம்ஜி ஸ்கோர் பண்றாரு. அந்த புலி உறுமுது பைட் வரும்போது, தியேட்டரே சிரிப்புல உறுமுது. ஜெய்யோட ஓட்டை இங்க்லீஷ், வைபவ்வோட சின்ன வீடு ரீ ரிக்கார்டிங் ரியாக்ஷன்ஸ், எல்லாமே காமெடி. அது ஏன் வைபவுக்கு மட்டும், படத்தோட கடைசி frame வரை ஜோடி சேர்க்க தயங்குராங்கன்னு தெரியலை. இந்த படத்துல வர பல புதுமையான விஷயங்கள்ல, நான் குறிப்பா நோட் பண்ணினது, ஒரு குண்டான ஆள் ஒருத்தர்.
அவர் குண்டா இருக்கறது புதுமை இல்ல. அவரே, படம் முழுக்க, எக்கச்சக்கமான ரோல்கள் பண்ணிருக்கார். எல்லாமே அருமை. இந்த விஷயத்தை ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்துல பார்த்தா மாதிரி நியாபகம். ஆனா சரியா நினைவுல இல்லை. சம்பத்தும் அரவிந்த் ஆகாஷும், நாம நினைச்சா மாதிரி "அவிங்க" தான். ஆனா, ஒரு ஆபாசம் இல்லாம, விரசம் இல்லாம, கொச்சைப் படுத்தாம, நகைச்சுவையா அவங்க உறவை சித்தரிச்ச்சதுக்கு, ஒரு சபாஷ். முக்கியமா சம்பத்தின் நடிப்பு, டாப் கிளாஸ். படத்துல வர மத்த நடிகர்களும், அவங்களோட பங்குகளை மிகச்சரியா செஞ்சிருக்காங்க.
பிரசன்னா, சிம்பு, நயன்தாரா மற்றும் வெங்கட்பிரபுவோட கவுரவ தோற்றங்களும் திணிப்பா தெரியாமா, படத்தோட ஒத்துப் போயிருக்கு. மியூசிக், காமெரா, எடிட்டிங். ஆர்ட் எல்லாமே நல்லா பொருந்தியிருக்கு.படத்துல பல டிவிஸ்ட் இருக்கு. ரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற பல விஷயங்கள செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்க. எதிர்பார்ப்பு மொக்கையானுலும், கண்டிப்பா நம்மால ரசிக்க முடியும். அடுத்து, முதல்ல விட்டுப்போன அந்த ரெண்டு பெர்சென்ட் எங்க போச்சுன்னா, தேவையில்லாத இரண்டு பாடல்கள் (இடை வழி, அடிடா நையாண்டிய), ரெண்டு மூணு தடவைக்கு மேல அலுத்துப்போகும் பிரேம்ஜி - கண்கள் இரண்டால் காமெடி.
ரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற சில விஷயங்கள் செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்கனு சொன்னேன் இல்லையா, அதையே சில பேர் மொக்கைனு எடுத்து, படத்தை வெறுக்கலாம். எது எப்படியோ, எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்துது. இன்னொரு முறையும் பார்க்க போறேன். ரொம்ப என்ஜாய் பண்ணேன். கண்டிப்பா நண்பர்களோட பாருங்க, நீங்களும் நல்லா என்ஜாய் பண்ணுவீங்க. So, படம் கண்டிப்பா கோ-வா தான். அதாங்க, எல்லாரும் போயிட்டு வரலாம். ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி.
p.s.சென்சார் மேல மறுபடியும் எனக்கு சந்தேகம் வருது. என்ன ஹேருக்காக இந்த படத்துக்கு A குடுத்தாங்கன்னு இன்னும் புரியலை. அந்த gay தீம் மட்டும் தான் காரணம்னா, நான் ஒண்ணு கேட்க விரும்பறேன். Shriya, Almost அவுத்துப்போட்டு ஆடுன கந்தசாமி படத்துக்கு எதனால U குடுத்தீங்க?? ஒருவேளை homo-sexual தீம் மட்டும்தான் பிரச்னை போல. Straighta இருந்தா U குடுப்பாங்களோ????
p.s.2 - இல்லை. சினேகா பிகினில வரலை..
பெத்த கல்லு, சின்ன லாபமு, சின்ன பிலிமு பெத்த லாபமு...