Thursday, December 31, 2009

எண்ணிப் பார்த்தேன் - 2009

எல்லார மாதிரி நானும் சென்ற வருடக் கடைசியில, நான் ரசிச்ச படங்கள் மட்டும் பாடல்கள் பற்றிய பதிவியிருந்தேன் (link -->இங்க) இந்த வருடமும் அதை செய்யலாமா வேணாமான்னு மதில் மேல பூனையா யோசிச்சிகிட்டே இருந்தேன். எல்லா பதிவர்களும் அதை ஆரம்பிச்சு, பதிவிகிட்டும் இருக்காங்க. நானும் அதே மாதிரி எழுதுனா cliche ஆகிடுமேன்னு பயம் வேற. நாம சொல்ற சில விஷயங்கள மத்தவங்க படிச்சு பாராட்டுவாங்களோன்னு ஒரு ஆசை. சின்ன பசங்க மாதிரி, மத்தவங்க கவனத்தை ஈர்க்க வேலைகள செய்யறது. நாம என்ன நினைச்சாலும் இந்த trait நம்மள விட்டு போகறது ரொம்பவே கஷ்டம். அப்புறம்தான் ஒரு விஷயம் strike ஆச்சு.

"நான் யாருக்காக blog ஆரம்பிச்சேன் ?", "எனக்காக". என் எண்ணங்களுக்கு வடிகாலா இருக்குமேன்னு. ஆனா, கொஞ்ச நாட்கள்லையே, கமெர்ஷியல் டைரக்டர் மாதிரி, "இந்த பதிவு மக்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா. படிப்பாங்களா மாட்டாங்களா, ஓட்டு போடுவாங்களா இல்லையா"ன்னு பலவிதமா யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் போடும் பதிவு மத்தவங்க படிச்சா என்ன, படிக்காட்டி என்ன. படிக்கலைன்னா நான் பதிவு எழுதறத விட்டுருவேனா?? கண்டிப்பா இல்லை. இதை படிக்கும் உங்க யாரையும் நான் insult பண்றதா நினைக்காதீங்க. ஆனா பொதுவான உண்மை இது மட்டுமே. (இருந்தும், இதை நான் யாருக்கோ சொல்லற நடைல தான் எழுதிகிட்டு இருக்கேன் பாருங்க)

ரொம்ப சிந்திச்சு, தெளிவான அப்பறம் தான்,  உட்கார்ந்து type பண்ணிக்கிட்டு இருக்கேன். cliche ஆனா என்ன இப்போ. எனக்காக நான் இப்போ, எனக்கு பிடித்த படங்கள் மற்றும் பாடல்கள் பற்றி எழுததான் போறேன். என் பதிவுகளுக்காக என்னை தொடரும் அன்பர்கள், க்ளிஷேவா இருந்தாலும் படிக்கதான் போறாங்க. இந்த முறை, வெறும் பெயர்களை மட்டும்தான் எழுதியிருக்கேன். காரணங்களை தனியா குறிப்பிடலை. பெருசா என்ன காரணம் இருந்திட முடியும். பிடிச்சிருக்கு. அவ்ளோதான். So here s my list....

ரசித்த திரைப்படங்கள்  
சிவா மனசுல சக்தி - விமர்சனம் -->இங்க 
யாவரும் நலம் - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
அயன் - விமர்சனம் --> இங்க 
பசங்க - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
நாடோடிகள் - விமர்சனம் --> இங்க
நியூட்டனின் மூன்றாம் விதி -விமர்சனம் -->இங்க (கடைசி பத்தியில்)
உன்னை போல் ஒருவன் - விமர்சனம் --> இங்க

நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் லெவல்ல நான் ரசிச்ச படங்கள் சில
TELUGU
அருந்ததி
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் 
கிக்
PETER
Angels and Demons
2012 - விமர்சனம் --> இங்க 
Hangover
HP-6 - விமர்சனம் --> இங்க (இராண்டாவது பகுதியில)
UP
Confessions of a shopaholic
HINDI
பா
              அடுத்து பாடல்கள்னு பார்த்தீங்கன்னா... பதிவு ரொம்ப பெருசாகுதோ???....சரி இப்போதைக்கு பொழச்சி போங்க.. ஒரு நாலு மணி நேரம் கழிச்சு மறுபடியும் வரேன்...


film running successfully......

Tuesday, December 22, 2009

எல்லாம் முடிஞ்சுபோச்ச்ச்.....

ஒவ்வொரு மொக்கை படம் தியேட்டர்ல முடியும்போதும், இப்படிதான் நான் சொல்லிகிட்டிருப்பேன். பதிவுலகத்துல வேட்டைக்காரன் இப்படி ஒரு phenomenon ஆகும்னு நினைச்சே பார்க்கலை. tamilsh.கம, வேட்டைக்காரன் பற்றிய பதிவுகளை சேர்க்க, தனியா ஒரு லிங்கே உருவாக்கியிருக்காங்க. பெருசா என்னால விமர்சனம் எதுவும் எழுத முடியாது, ஏன்னா ஏற்கனவே படத்தை pre-mortem, post-mortem எல்லாம் செஞ்சு தொங்கபோட்டுட்டாங்க. ஒரே ஒரு விஷயம் சொல்லனும்னா, இந்த விமர்சனப் பதிவுகள்ள எவ்வளவு மொக்கைனு போட்டுருக்காங்களோ, அதைவிட படம் மொக்கை.              
விஜய் ரசிகர்களே தியேட்டர்ல கமென்ட் அடிச்சு கலாய்க்கறாங்க. Assembled கம்ப்யூட்டர் பார்த்துருப்பீங்க. இது ஒரு assembled படம். அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்னு இஷ்டத்துக்கு உருவி ஒரு படம். காறிதுப்பக் கூட நாக்குல எச்சில் இல்லை. அவரும் அவர் பையனும் ஆடும்போது, சிம்புவும் டி.ஆரும் நியாபகத்துல வராங்க. பாடல்கள் கேட்க மட்டுமே நல்லா இருக்கு. நடன அமைப்பு ரொம்பவே amateur. அனுஷ்காவுக்காகவும் படத்தை பார்க்க முடியாது. அவங்களுக்கு முதல் தமிழ் படம்னு தனியா தெரியுது. அவங்க தெலுங்கு படங்கள்ல இருக்குறா மாதிரி இல்லாம ரொம்ப செயற்க்கைத்தனமா இருக்கு அவங்க நடிப்பும் ஆட்டமும். விஜயவிட நாலு இன்ச் உயரம் வேற.   

இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும் cliche ஆகிடும். இத்தோட நிறுத்திக்கறேன். வழக்கம் போல சன் டிவி அவங்களோட propaganda ஆரம்பிச்சிட்டாங்க. மெகா ஹிட்டாம். வசூல் சாதனையாம். கோபாலபுரத்துல மட்டும் நல்லா ஓடுது போல. இங்க சென்னைல நேத்து வரைல, சத்யம் தவிர எல்லா அரங்குலையும், எல்லா ஷோவுக்கும், இந்த வாரம் முழுக்க டிக்கெட் இருக்கு. எப்படி சன் டிவில எந்த படம் போட்டாலும் பார்ப்பமோ, அது மாதிரி தான் சத்யம் தியேட்டரும். நான் பார்த்த தியேட்டர்ல பால்கனில இருக்குற 100 சீட்டும் full. கீழ இருந்த 500+ சீட்டுகள் காலி. அதை போட்டோ எடுக்க விடலை.    

சில படங்களை விமர்சனத்துல கொஞ்சம் ஓவராவே கலாய்ப்பாங்க. அந்த தியேட்டர் பக்கம் போயிறாதீங்க. போஸ்டர் கூட பாத்துறாதீங்கன்னெல்லாம் சொல்லுவாங்க. இந்த பட விமர்சனத்துக்கு அதை விட மோசமா ஏதாவது சொல்லனும்னு பார்த்தா, சரியா எதுவும் மாட்டலை. மக்களை இவ்வளவு தூரம் முட்டளா பார்க்குற படங்கள் வர்றது இதுவே கடைசியா இருக்கணும். ஆனா, இந்த படத்தை ஹிட்டாக்க இன்னொரு நல்லா விஷயம் பண்ணிருக்கலாம். ஒரு சில காட்சிகளை மாத்திட்டு, ஒரு குழந்தைங்க படமா இதை மார்கெடிங் பண்ணிருந்தா, படம் கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகிருக்கும். என்ன நான் சொல்றது??? 

விஜய்: புலி உறுமுது புலி உறுமுது....
மக்கள்: கொட்டை எடுத்ததா எடுக்காததா???
...
p.s.ஆயிரத்தில் ஒருவன் டிரைலர் போட்டாங்க. எடுத்தவுடனேயே, ரீமா சென்னும் ஆண்ட்ரியாவும் பச்சை மஞ்சள்னு கலர் கலரா திட்டிக்கறாங்க. கட் பண்ணா A SELVARAGHAVAN FILMனு வருது. டைரக்டர் டச்???

Sunday, December 13, 2009

டெலிவெட்டியும் கிரியேடிவெட்டியும்

சக பதிவர்கள் பல பேர், பல விதமான போட்டிகள, தொடர்ந்து நடத்திட்டு வராங்க. அப்படி ஒரு போட்டிதான் இந்த டெலிவெட்டி. நான் நடத்தலைங்க. கலந்துகிட்டேன். இத நடத்துறது BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம். அவங்க ப்ளோக்ல சில பல வருஷங்களாகவே இத நடத்திட்டு வராங்க. ரொம்ப சிம்பிள் விளையாட்டுங்க. படம் பார்த்து கதை சொல்றா மாதிரி பெயர்கள் சொல்லணும். அவ்வளவே. இது வரை எனக்கு கலந்துக்க ஆர்வம் எதுவும் வந்ததில்லை. ஆனா கடந்த போட்டி, நம்ம தலைவர் ரஜினியப் பற்றி. விடுவனா. எல்லா படமுமே சல்பியா இருந்ததால டக்கு டக்குனு பதில மைல் பண்ணிட்டேன். First come first serve மாதிரி, முந்துபவர்களுக்கே பரிசுன்னு நினைக்கறேன். இன்னிக்கு முடிவுகள பார்த்தா, என் பேரும் முதலிடப் பட்டியல்ல இருக்கு. 15/15... எப்பூடி?? இதனால நான் சகல மாணவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.... ஒண்ணும் இல்லை. எல்லாரும் நல்லா இருங்க. BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம்-க்கு நன்றி.

சொல்ல மறந்துட்டனே, www.blogeswari.blogspot.com படிக்க மறக்காதீங்க. அவா இவா பாஷைல இவங்க அடிக்கிற நக்கல் இருக்கே, நான் படிச்ச தம்லீஷ் ப்ளோக்லையே இதுலதான் உச்சக்கட்டம். அப்படி ஒரு நையாண்டி. முக்கியமா இவங்க கந்தசாமி படத்துக்கும், குர்பான் படத்துக்கும் எழுதியிருக்குற விமர்சனம், ஒரு பானை சோறு.
வோட்டு போட மறக்காதீங்க. (சேய், நானும் இப்படி கேட்க ஆரம்பிச்சுட்டனே)




இதெல்லாம் வரலாறுல இடம்பிடிக்கும். 
எனக்கு சிலை வெப்பாங்க. பசங்க நோட்ஸ் எடுப்பாங்க..... 

Saturday, December 12, 2009

PLAYLIST - NOVEMBER

மன்னிச்சிருங்க, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. போன மாச playlistla இருந்த சில பாடல்கள், இன்னமும் இருக்கு. அவை,

1. வேட்டைக்காரன் படத்துல வழக்கம் போல மூணு பாட்டு - புலி உறுமுது, கரிகாலன், நான் அடிச்சா. இன்னும் பாடல்கள் போர் அடிக்கலைங்கறதே பெரிய விஷயம். ஒரு வேளை படம் வந்து, காட்சியமைப்பு நல்லா இல்லைன்னா வெளிய போய்டும்.

2. கண்டேன் காதலை - சுத்துது சுத்துது. இந்தப் பாடலை பற்றி இன்னமும் சொல்லனுமா??

3. யோகி - சீர்மேவும் கூவத்திலே. இதே மாதிரி நவராத்திரி படத்துலயும் ஒரு பாட்டு இருக்குங்க.

4. பேராண்மை - ஏறத்தாழ.

போன மாச playlist -->இங்க<--

நவம்பர் மாத playlistla புதுசா சேர்ந்திருக்கும் பாடல்கள்.

மோதி விளையாடு - படத்தை பார்த்து நொந்து போனாலும் (விமர்சனம்) இரண்டு பாடல்கள் நல்லா இருக்கறது ரொம்பவே லேட்டா காதுல விழுந்துச்சு. "பாதி காதல்" and "வெள்ளைக்காரி"னு ரெண்டு பாட்டு. ஹரிஹரன் இசைல, தமிழ்ல வந்துருக்கும் முதல் படம். பாவம். வேற ஒரு நல்லா படத்துல இந்த பாடல்கள் வந்திருக்கலாம்.

பா - இதை விடமுடியுமா. ஹல்கே ஸே போலே, ஹிச்சிகி and கும் ஸும். புதுசா என்ன சொல்றது இந்த பாடல்களை பத்தி. இளையராஜாவின் இசை. அவ்ளோதான்.

புதுசா வந்ததுல, பையா பட பாடல்கள் ஓரளவு நல்லா இருக்கு. அப்பாவி பாடல்களும் சுமாராதான் இருக்கு. கேட்க கேட்க நல்லா இருக்குமோ?? அடுத்த மாசம் பார்க்கலாம்.


துரதிர்ஷ்டவசமா என் headset காலி. புதுசு வாங்கணும். :(


p.s. பதிவுகள் போடாம ரொம்ப கதை பண்றேன்னு எனக்கே தெரியுது. கொஞ்சம் அவகாசம் குடுங்க. நல்லா பதிவா போடறேன். அப்பறம், நம்ம ராதா மாதவன் அண்ணன் இன்னொரு முறை அந்த சிறுகதை போட்டி பத்தி நியாபகப்படுத்தி "expecting ur participation" அப்படின்னு வேற சொல்லிட்டார். நம்மளை ரௌடினு நம்பிட்டாரோ? கண்டிப்பா அனுப்பறேன் அண்ணா. விருப்பம் இருக்குற எல்லாரும் கலந்துகொண்டு கலக்கவும்.

Thursday, December 3, 2009

வராம்பாரு வேட்டைக்காரன்...

இதை எடிட் பண்ணவரு அஜித் ரசிகரா இருந்தாலும், புத்திசாலித்தனமா பண்ணிருக்காரு.. முக்கியமா, சில இடங்கள்ல டயலாக் இடம் விட்டுட்டு, அப்பறம் தொடருது... அட அட அட.. அருமை... எனக்கென்னமோ, இந்தப் பாடல், விஜயைவிட, நம்ம கவுண்டருக்கு நல்லா செட் ஆவுதுன்னு தோணுது... என்ஸாய்....