வெற்றிகரமா என்னோட மூணாவது செமஸ்டரும் முடிஞ்சு போச்சு. ரிசல்ட் வர இன்னும் ஒரு மாசமாவது ஆகும். அடுத்த ஒரு மாசம் வெட்டியா இருக்கலாமா, இல்ல internship ஏதாவது போகலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்மளை நம்பி நிறைய பேர் இருக்கறதால, இந்த மாதிரி யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியதா இருக்கு. என்ன செய்ய..
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய
சில updates பதிவுகளுக்கு தான் இப்போ
மற்றும் பல அப்படின்னு பெயர் மாத்திருக்கேன். எண்ணிக்கையில பார்த்தா, சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கொஞ்சம் கம்மியாதான் பதிவுகள் எழுதியிருக்கேன். சில சமயங்கள்ல, இந்த விஷயத்தை பதிவா போடலாமான்னு யோசிச்சாலும், அதை அழகா ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து எழுத, நேரம் கிடைக்கறதில்லை. பெரும்பாலும் என் பதிவுகள் எல்லாமே, இரவு பத்து மணிக்கு மேல போட்டது. அடுத்த ஒரு மாசத்துக்காவது இந்த நிலைமை மாறும்னு நினைக்கறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஒரு மாதமா, facebook பித்து பிடிச்சு அலையறேன்(றோம்). முதல்ல நான் orkutல இருந்தாலும், FB எப்படியிருக்கு பாக்கலாமேன்னு உள்ள நுழைஞ்சா, நிஜமாவே மனுஷனை கட்டிப் போட்ருது. ஆர்குட்ட விட இதுல interface பளிச்சுன்னு இருக்கு. comments சுலபமா போஸ்ட் பண்ண முடியுது. Status messages ரொம்ப ஈசியா update பண்ண முடியுது. அதுலயும், உள்ள இருக்குற பல விளையாட்டுகளும், கேள்வி பதில்களும், சூப்பரா இருக்கு. என்னை மாதிரி பசங்க mafia warsலயும், எங்க கிளாஸ்ல இருக்குறா மாதிரி பொண்ணுங்க (பல பிஞ்சு மூஞ்சு பசங்களும்) farmville விளையாட்டுலயும் மூழ்கியிருக்கோம். போன மாதத்துல ஒரு நாள், ஆர்குட்டும் அதனோட interface மாத்தி ஒரு காமெடி பண்ணிருக்காங்க. புலியப் பாத்து சூடு போட்டுகிட்டக் கதையாதான் இருக்கு. செம்ம காமெடி. சிமிபிளா சொல்லனும்னா, facebook - சத்யம் தியேட்டர், ஆர்குட் - ஆல்பர்ட் தியேட்டர். இரண்டு தியேட்டருக்குமான ரசிகர்கள் இருந்துட்டு தான் இருப்பாங்க.ஆனா ஆல்பர்ட், எப்பவும் சத்யம் ஆக, சத்தியமா முடியாது.
--------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்னாடி,
அண்ணன் சர்வேசன், பொன்னியின் செல்வன் மொத்த கதையோட சாராம்சத்தையும்,
அழகா ஒரு nutshell மாதிரி கொடுத்தார். நல்ல வரவேற்பும் கிடச்சுது. அதே மாதிரி நானும், ஹாரி பாட்டர் கதைகள சுருக்கி சொல்லலாமான்னு யோசிக்கறேன். எனக்கு ரொம்ப பிடித்த ஹாரி பாட்டர் கதைகள யார் எப்ப கேட்டாலும், சலிக்காம ரொம்ப ஆர்வமா அவங்களுக்கு சொல்லுவேன். அந்த கதை, படிப்பதற்கும், மத்தவங்களுக்கு விவரிப்பதற்கும் ரொம்ப நல்லா இருக்கும். என்ன சொல்றீங்க??
--------------------------------------------------------------------------------------------------------------
2012 படத்தை இன்னும் இரண்டு முறை பார்க்கலாம்னு பிளான் பண்ணிருக்கேன். படம் நம்ம தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டிருக்கு. படத்துல, ஹீரோ தப்பிக்கும் ஒவ்வொரு காட்சிக்கும், மக்கள், ரஜினி வில்லன அடிக்கறா மாதிரி, கத்தறாங்க. அதுலயும், இந்தியா கடல்கோள் ஆகறத, mapla காட்றாங்க. அதுக்கே மக்கள் உணர்ச்சிவசப்படறாங்க. நான் முன்னாடியே சொன்னா மாதிரி, ஒரு அருமையான மசாலா படத்தை எடுத்து அதுல வெற்றியும் பாத்துட்டாங்க. இந்த படத்தை imaxல பார்த்தா இன்னும் நல்லா இருக்கும்ல?
--------------------------------------------------------------------------------------------------------------
நம்ம ராதா மாதவன் அண்ணன், அவர் ப்ளோக்ல, புதுசா ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்கார். என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு கூப்பிட்டிருக்கார். நல்ல கதையா யோசிச்சிங். இதோ அந்த போட்டி விவரங்களுக்கான -->
லிங்க்
--------------------------------------------------------------------------------------------------------------
பால்கி - இளையராஜா கூட்டணியில, பா பட பாடல்களும் அருமை. என்னதான் ராஜாவோட பழைய மெட்டுக்களை போட்டிருந்தாலும், இன்னும் அழகாவே இருக்கு. அதுவும் அந்த புத்தம் புது காலை prayer பாட்டும், ஹிச்கி ஹிச்கி பாட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சந்தத்தில் பாடாத கவிதையோட இந்த வெர்ஷன்ல, live in italy வெர்ஷனோட பாதிப்பு கொஞ்சம் தெரியுது. தீம் மியூசிக்கும், அது ஒரு கனாக்காலம் படத்துல வந்ததைவிட, இங்க நல்லா பொருந்தியிருக்கு. மொத்தத்துல, ராஜா ரசிகர்களுக்கு, ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விஷயம். ஒரு சின்ன trivia.இயக்குனர் பால்கி தான், walk and talk ஐடியா செல்லுலாரோட விளம்பர இயக்குனர். அந்த விளம்பரத்துல வர இசையும், இளையராஜாவோட ஒரு பழைய கன்னட பாட்டுதான். இந்த பாட்டு, மணிரத்னமோட முதல் படமான, பல்லவி அனு பல்லவில வருது. லிங்க் -->
இங்க
-------------------------------------------------------------------------------------------------------------
வேட்டைக்காரன் trailer பத்தி நான் ஏதாவது சொல்லுவேன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என்னடா புதுமையா ஒண்ணும் இல்லையே, விஜயோட முந்தையப் படங்கலானா பகவதி, மதுரை, சிவகாசி காட்சிகள் மாதிரியே இருக்கே, இத இந்தப் பையன் கண்டுகிட்டும் விமர்சனம் பண்ணலியேன்னு நீங்க நினைச்சாலும் நான் விமர்சனம் பண்ண மாட்டேன். அதுவும் அந்த சின்ன தாமரை பாட்ல வர hairstyle , டைனோசர் வாந்தி எடுத்த கலர்ல இருக்கே, அதை பத்தியாவது எதாவது பேசுவேன்னு நினைசீங்கன்னா, அதுவும் தப்பு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுக்குங்க வம்பு. நான் எதோ எழுதப்போய், படம் எக்குத்தப்பா ஹிட் ஆகிடுச்சுன்னா?? நம்ம தமிழ் நாட்டு ஜனங்களை நம்ப முடியாதுங்க...
-------------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சொல்லிட்டேன், போதும்.....
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு